மகாத்மா புலேவுக்கு முன்
மகராசன் வேதமாணிக்கம்

விலை ரூ.150

“இந்துத்துவ எதிர்ப்பு எழும் அதே வேளையில் கிறித்துவ மதமாற்ற நிகழ்வுகள் வேகமாக நடைபெறுகின்றன. இந்த மதமாற்ற நிகழ்வுகள், 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற மதமாற்றத்துடன் வேறுபடுகின்றன. அன்றைய தலித்துகளின் மதமாற்றம் சமூக, பொருளாதார அரசியல் ஒடுக்குதல்களுக்கு எதிர்ப்பாகத் தோன்றியவை. எனவேதான் 1857இல் நடைபெற்ற சிப்பாய் கலகத்தில், ஆதிக்க சாதியினர் தலித்துகளின் திருச்சபைகளை தீ வைத்துக் கொளுத்தினர். சமூகப் புரட்சியுடன் தொடர்பற்று நடத்தப்படும் மதமாற்றங்கள், பரிசீலிக்கப்பட வேண்டும்.''

ஆசியர் : ஏபி. வள்ளிநாயகம்
வெளியீடு : தலித் ஆதார மய்யம், அரசரடி, மதுரை - 16
பக்கங்கள் : 384



இந்தியத் தத்துவங்களின் அரசியல்
விலை ரூ.25

“இந்திய சூழல்களில் தத்துவங்களுக்கு அரசியல் உண்டு என்பதை அதிகம் பேசியவர்கள் பெரியாரும் அம்பேத்கரும். பார்ப்பனியம், சாதியம் என்ற இந்திய எதார்த்தங்களை மிகத் தீவிரமாக அவர்கள் உணர்ந்ததால், சமூகப் போராட்டங்களின் அவசியங்களுக்கிடையில் மரபுசார்ந்த அறிவுத் துறைகள் பற்றிய மலைப்புகள் அவர்களிடம் எளிதில் தகர்ந்து போயின. மார்க்சிய வரலாற்றாசியர்கள் இந்திய சமூக வரலாற்றில் பார்ப்பனியம், சாதியம் ஆகியவற்றின் பாத்திரம் குறித்து ஏராளமாக எழுதியுள்ளார்கள். இருப்பினும், அம்பேத்கரிலும் பெரியாலும் பறக்கும் அனல் மார்க்சிய எழுத்துகளில் பறக்கக் காணோமே என்பதுதான் எல்லாருடைய வருத்தம்.''

ஆசியர் : ந. முத்துமோகன்
வெளியீடு : பசல், வள்ளலார் தெரு, பத்மநாபா நகர், சூளைமேடு, சென்னை 94 பக்கங்கள் : 64



முஸ்லிம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி
விலை ரூ.110

"1938 ஆம் ஆண்டின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது வெளிப்பட்ட திராவிட இயக்கம். சுதந்திரப் போராட்டக் காலத்தில், தமிழ்ப் பேசும் முஸ்லிம்களை இந்திய அரசியலின் முன்னணிக்குக் கொண்டு வந்தது. ஒரு தனி முஸ்லிம் தாய் நாட்டுக்கான கோரிக்கையில் வெளிப்பட்ட அவர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு, மதம் மொழியுமே பெருமளவு காரணம் என்ற உண்மையை இது எடுத்துக்காட்டியது. தமிழ் முஸ்லிம்களின் அண்மைக்கால வரலாறு பற்றிய இந்த ஆய்வு, தமிழ் முஸ்லிம் இயக்கம் பற்றிய சமூகவியல், வரலாற்று ஆய்வுகளுக்கு ஒரு முக்கியமான பங்களிப்பு.''

ஆசியர் : ஜே.பி.பி. மோரே
வெளியீடு : அடையாளம், 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம் 621 310 பக்கங்கள் : 256



தமிழுக்கு விடுதலை
தமிழருக்கு விடுதலை

விலை ரூ.90

"கற்பில் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா? பட்டிமன்றம் நடத்துகின்ற "அயோக்கியன்களும்' பேசுகின்ற பகடிகளும், கேட்கின்ற முட்டாள்களும் இன்னும் உண்டா? நாட்டில், சிதம்பரம் பத்மினி, சென்னை பிரகாசமே, தளி கல்பனா, சுமதி, மதுரை இந்திராகாந்தி, ஆலங்குளம் உமா, முத்தாண்டிக்குப்பம் வசந்தா, வாச்சாத்தி 16 மலைவாழ் பெண்கள், அத்தியூர் விசயா. வராத பட்டியலில் எத்தனை எத்தனை? உன் மனைவி? உன் மகள்? உன் தாய்? உன் தங்கை? உன் அக்காள்? ஏன் வழக்காடேன்... வாய்கிழிய முடியுமாடா... முட்டாள்களே!''

ஆசியர் : புதுவை தமிழ் நெஞ்சன்
வெளியீடு : தமிழ்மொழிப் பதிப்பகம், 10, இளங்கோ அடிகள் தெரு, மீனாட்சிப் பேட்டை, புதுச்சேரி - 9
பக்கங்கள் : 164


தலித்தியம் தமிழ்த் தேசியம்
விலை ரூ.5

"சமூக விடுதலையோடு தொடர்புபடுத்தப்படாத
தேசிய விடுதலை என்பது கானல் நீரே. அதற்காக நாம் மக்களை அணி திரட்ட முடியாது. மக்களை ஈர்த்து ஆட்கொள்ளாத எந்த ஒரு கருத்துக்கும் பவுதீக வலிமை இருக்காது. அது வெற்றி பெறாது. இந்த அடிப்படையில்தான் தலித்தியத்தையும் தமிழ்த் தேசியத்தையும் உறவுபடுத்திப் பார்க்கிறேன். தமிழ்த் தேசிய சமூக நீதி என்ற கருத்தியலை முன் வைக்கிறேன். தேசிய விடுதலையும் சமூக விடுதலையும் இணைந்த நம் முழு விடுதலைக்கான வழி இதுவே. இதைத் தவிர வேறில்லை என நம்புகிறேன்.''

ஆசியர் : தியாகு
வெளியீடு : தமிழ் தமிழர் இயக்கம், 1220 (29/36), ராணி அண்ணா நகர், க.க. நகர்,
சென்னை 78
பக்கங்கள் : 40


ஜெஹானாபாத் சிறையுடைப்பு
சொல்லப்படாத செய்திகள்
விலை ரூ.15

"ஒரு மார்க்சியர் வர்க்கப் போராட்டத்தைத்தான் தனது அடிப்படையாகக் கொள்கிறாரே தவிர, சமூக அமைதியை அல்ல. கூர்மையான
பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான நெருக்கடிகள் நிலவுகின்ற குறிப்பிட்ட காலகட்டங்களில் வர்க்கப் போராட்டமானது, ஒரு நேரடியான உள்நாட்டுப் போராக அதாவது, நாட்டு மக்களின் இரு பிரிவுக்கு இடையிலான ஆயுதப் போராட்டமாக முதிர்ச்சியடைகிறது.

வெளியீடு : விடியல் பதிப்பகம், 11, பெயார் நகர், மசக்காளிபாளையம் (வடக்கு), கோவை 641 015
பக்கங்கள் : 80





"தலித் முரசு'க்கு விருது

"டாக்டர் அம்பேத்கர் இன்டர்நேஷனல் மிஷன்' என்ற அமைப்பின் சார்பில், 2004 ஆம் ஆண்டுக்கான டாக்டர் அம்பேத்கர் இலக்கிய விருது "தலித் முரசு'க்கு வழங்கப்பட்டது. கலிபோர்னியாவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் இவ்வமைப்பின் விருது வழங்கும் விழா, பெங்களூரில் 24.12.2005 அன்று நடைபெற்றது. "தலித் முரசு' ஆசிரியர் இவ்விருதைப் பெற்றுக் கொண்டார். இவ்விருதுடன் அய்ந்தாயிரம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.