இந்தியப் பொருளாதாரத்தின் உண்மை நிலை : பகுதி 1
விலை ரூ.30

‘அதிகார மாற்றம் (சுதந்திரம்) ஏற்பட்டு 57 ஆண்டுகளுக்குப் பிறகும் பாட்டாளிகளின், விவசாயிகளின், பழங்குடியினரின் நிலையில் பெரிதாக மாற்றம் எதுவும் ஏற்படவில்லை; துயரங்களைத் தவிர. 1991 காங்கிரஸ் ஆட்சிகளில் அனைத்துலக நிதியம், உலக வங்கி வழிகாட்டுதலின்படி, அவர்கள் இந்தியாவில் நிகழ்த்திய பொருளாதாரச் சீர்திருத்தம், அதன்பிறகு பா.ஜ.க. ஆட்சிகளில் நிகழ்ந்த பொருளாதாரச் சீர்திருத்தம் எல்லாம் மக்களை முன்னைக்காட்டிலும் அதிக வறுமை நிலைக்குத் தள்ளியுள்ளதைப் பற்றி இந்நூல் மிகத் தெளிவாக விளக்குகிறது.''

ஆசிரியர் : ரா. நடராசன்
வெளியீடு : ‘விழுதுகள்' 18, திருநகர் முதல் தெரு, திருவொற்றியூர், சென்னை - 19
பக்கங்கள் : 72


சார்த்தர் - விடுதலையின் பாதைகள்
விலை ரூ.120

‘மனிதனின் இதயத்தில் சுதந்திரம் என்னும் தீப்பந்த ஒளியை ஏற்றிவிட்டால், அவனுக்கு எதிரே கடவுள்கள் சக்தியற்றவர்களாகி விடுவர்' என்பதைத் தனது மகத்தான வாழ்க்கையில் மெய்ப்பித்துக் காட்டியவர் சார்த்தர். இந்த நூல் அந்தப் போராளியின் தத்துவ, அரசியல் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல; இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் நிகழ்ச்சிகளினூடான ஓர் அறிவுப் பயணமாகும். சோசலிசம் மே 1968 போராட்டத்தின் தோல்வியாலும், சோவியத்தின் வீழ்ச்சியாலும் அழிந்துவிடவில்லை.''

ஆசிரியர் : எஸ்.வி. ராஜதுரை
வெளியீடு : அடையாளம், 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம் - 621 31
பக்கங்கள் : 224


தீண்டாமைக்குத் தீயிடு
விலை ரூ.100

‘இந்து மதத்தவர்கள் கோடிக்கணக்கில் இஸ்லாமிய, கிருத்துவ மற்றும் புத்த மதங்கட்கு மாறுகையில், இந்து மதத்தால் ஈர்க்கப்பட்ட வேறு மதத்தவர்கள், எப்பொழுதாவது இந்து மதத்தில் வந்து சேர்ந்ததுண்டா? அப்படி இந்து மதத்தை நாடிவந்தாலும், மதத்தை மாற்ற விரும்பினாலும், அவர்களை இந்து மதத்திலுள்ள 8000 உப சாதிகளில் எந்தச் சாதியில் சேர்க்க அனுமதிப்பார்கள்? மதம் மாறுபவர்களை, கொடிய சட்டம் கொண்டு தடுக்கலாமே ஒழிய, இந்து மதத்தை ஓர் உன்னத சமரச சன்மார்க்க நெறிபோல் மாற்றியமைத்து, சீர்திருத்தம் செய்து மதம் மாற விரும்புபவர்கள் இம்மதத்திலிருந்தே உயர்ந்த வாழ்வு பெற வழி செய்வதற்கில்லை.

ஆசிரியர் : டாக்டர் ப. சீனிவாசன்
வெளியீடு : மங்கை பதிப்பகம், 177, முத்துக்காமாட்சி அம்மன் தோட்டம், சிதம்பரம் - 608 001
பக்கங்கள் : 392


குடி அரசு - பெரியாரின் எழுத்தும் பேச்சும் 1926 - 2 தொகுப்பு : 3
விலை ரூ.150

‘கூரத்தாழ்வார் கோயில் என்று ஒரு கோயில் இருக்கிறது. அதற்குள் பார்ப்பனன் காப்பிக் கடை இருக்கிறது. அக்காப்பிக் கடைக்காக ஒரு கக்கூசு இருக்கிறது. அக்கக்கூசு எடுக்க தீண்டப்படாதவர், தினம் இரண்டு தடவை மல பாண்டங்களுடன் போய் வந்து கொண்டிருக்கிறார். கூரத்தாழ்வார் கோயிலை விட இந்த அய்யங்கார் வீதியும், வியாசராயர் வீதியும், பட்டாச்சா வீதியும் பார்ப்பனருக்கு உயர்ந்ததாய்ப் போய் விட்டது. மல பாண்டத்துடன் கோயிலுக்குள் போய் வருவதை விட, வெறுங்கையுடன் நடப்பது, பார்ப்பனர்களுக்கு அதிக பாவமாய்ப் போய்விட்டது. ஏறக்குறைய வெள்ளைக் காரர்கள் வந்த பிறகே இக்கொடுமைகள் கொஞ்சமாவது மாறுபாடு அடைந்திருக்கின்றன.''

வெளியீடு : தந்தை பெரியார் திராவிடர் கழகம், 27, கனகராய மலையப்பன் வீதி, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 28
பக்கங்கள் : 528


நில வாழ்வு நமது உரிமை
விலை ரூ.50

‘நமது நாட்டில் தான் மருத்துவ நலத்திற்கென 15 சதவிகிதம் மட்டுமே அரசு செலவழிக்கிறது. இதுவும்கூட பெரும்பாலும் குடும்பக் கட்டுப்பாட்டிற்கும் தடுப்பு மருந்துகளுக்குமே செலவிடப்படுகிறது. எனினும் சத்துணவு, ஆரோக்கியமான சூழல், நல்ல குடிநீர் ஆகியவற்றின் மூலம் நோய் எதிர்ப்பை உருவாக்குவது என்பதைக் காட்டிலும், வெறும் தடுப்பு மருந்துகள் மூலமாகவே ‘போலியோ' முதலான நோய்களைக் கட்டுப்படுத்துவதில் அரசு முனைப்பு காட்டுகிறது.''

ஆசிரியர் : சேவியர் செயசிங்
வெளியீடு : வான் முகில், டி7, 27ஆவது குறுக்குத் தெரு, மகாராசா நகர், திருநெல்வேலி - 627 011
பக்கங்கள் :180


மனித உரிமை ஆணையங்கள்
விலை ரூ.50

‘மாநில மனித உரிமை ஆணையங்களும் குறிப்பாக மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களும், தேசிய மனித உரிமை ஆணையத்தைப் போலவே மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பதால், தேசிய மனித உரிமை ஆணையம் பற்றிய இந்நூல், பிறமாநில மனித உரிமை ஆணையங்களைப் பற்றி அறியவும் ஆணையங்கள் மூலமாகத் தலையிடவும் வழிகோலுகிறது. மாநில அளவிலான ஆணையங்களை எளிதாகத் தொடர்பு கொள்ளும் வகையில் அவைகளின் முகவரியும் தமிழ்ப் பதிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. ''

வெளியீடு : மக்கள் கண்காணிப்பகம், 6, வல்லபாய் சாலை, சொக்கிகுளம், மதுரை - 625 002
பக்கங்கள் : 60
Pin It