இந்தியாவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்ட மற்றும் தடை விதிக்கப் படாத மாநிலங்களின் விவரம் வருமாறு:
பஞ்சாப் மற்றும் அரியானா: இரு அண்டை மாநிலங்களிலும் பசுவதை தடை செய்யப்பட்டு உள்ளது. பஞ்சாப் அரசு மாட்டிறைச்சி விற்பனைக்கும் தடை விதித் துள்ளது. எனினும் இந்த மாநிலங்களில் மாட்டிறைச்சி உண்போருக்கான தண்டனை நடைமுறைகள் எதுவும் இல்லை.
ராஜஸ்தான்: எத்தகைய கால்நடை வதையும் தடை செய்யப்பட்டு உள்ளது. மீறுவோருக்கு 2ஙூ ஆண்டு சிறை மற்றும் ரூ.1,000 அபராதம்.
இமாச்சல பிரதேசம்: பசுக்கள் மட்டு மின்றி காளைகள், எருமைகள், கன்றுகள் போன்ற விலங்குகளை கொல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீறுவோருக்கு 1 ஆண்டு சிறை.
குஜராத்: பசுக்களை கொல்வது, மாட்டிறைச்சிகளை விற்பது, வாங்குவது ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லுதல் அனைத்துக்கும் தடை. மீறுவோருக்கு 7 ஆண்டு வரை சிறை.
உத்தரபிரதேசம்: பசுவதை தடை செய்யப்பட்டு உள்ளது. மீறுவோருக்கு 7 ஆண்டு வரை சிறை. எனினும் டப்பாக் களில் அடைக்கப்பட்ட மாட்டிறைச்சிக்கு அனுமதி.
மத்திய பிரதேசம்: 15 வயதுக்கு மேற்பட்ட அல்லது பயன்பாட்டுக்கு உதவாத காளைகள் மற்றும் எருமைகளை மட்டுமே கொல்வதற்கு அனுமதி. மீறு வோருக்கு 5 ஆண்டு சிறை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம்.
மராட்டியம்: பசுவதை, இறைச்சி விற்பனை மற்றும் உண்பதற்கு தடை. மீறுவோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் மற்றும் 5 ஆண்டு சிறை.
பீகார்: நோய்வாய்ப்பட்ட பசுக்களை மட்டுமே கொல்ல அனுமதி. உணவகங்களில் மாட்டிறைச்சி பரிமாற சட்டப்படி அனுமதி.
ஜார்கண்ட்: 3 வயதுக்கு கீழ் உள்ள விலங்குகளை கொல்ல தடை. மீறுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை. மாட்டிறைச்சி உண்பதற்கு தடை இல்லை.
மேற்கு வங்காளம்: ஆரோக்கியமான பசுக்களை கொல்ல தடை. மீறுவோருக்கு 6 மாதம் சிறை. மருத்துவரின் சான்றிதழ் பெற்ற பசுக்களை மட்டுமே கொல்ல அனுமதி.
ஒடிசா: பசுவதை தடை. மீறுவோருக்கு 2 ஆண்டு சிறை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும். மாட்டிறைச்சி உண்பதற்கு அனுமதி.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா: சான்றளிக்கப்பட்டவற்றை தவிர பிற கால் நடைகளை கொல்ல தடை. மீறுவோருக்கு 6 மாத சிறை மற்றும் ரூ.1,000 அபராதம்.
கர்நாடகா: பல்வேறு நிபந்தனைகளின் கீழ் பசுவதைக்கு அனுமதி. ஆனால் முந்தைய பா.ஜனதா அரசு இந்த சட்டத்தை கடுமையாக்கியதுடன், பசுவதைக்கு எதிராக சோதனை மற்றும் கைப்பற்றுவதற்கான வழிவகைகளை செய்தது.
தமிழ்நாடு, மணிப்பூர், அசாம்: பசு வதைக்கு தடை. மாட்டிறைச்சி உண்பதற்கு அனுமதி.
கேரளா, மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம்: பசுவதைக்கு தடையில்லை.