இந்தியாவிலேயே பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான போரில் சளைக்காமல் களமாடும் மாநிலமாக தமிழகம் எப்போதுமே இருந்துவருகின்றது. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு முற்போக்குவாதியும் பெருமைப்பட்டுக்கொள்ள இங்கே பார்ப்பன எதிர்ப்புக் கருத்தியல் பல நூறு ஆண்டுகளாகவே வளர்ந்து வந்திருக்கின்றன. அதன் உச்சமாக பார்ப்பன எதிர்ப்பை ஒரு அமைப்பாக நிறுவனமாக்கி அரசியல் படுத்தியவர்களில் இந்தியாவிலேயே முதன்மையானவர் பெரியார் ஆவார். இது எல்லாம் நாம் பெரியார் பிறந்த மண்ணில் வாழ்கின்றோம் என்று பெருமையோடு சொல்லிக்கொள்ள போதுமானவையாக இருக்கின்றன என்றே நாம் நினைத்துக்கொண்டு இருக்கின்றோம். ஆனால் அதன் போதாமை அவ்வப்போது வெளிப்பட்டே வருகின்றது. நம்மிடம் சித்தாந்தம் இருக்கின்றது அதை பிரச்சாரம் செய்ய ஆட்கள் இருக்கின்றார்கள். கணிசமான அளவிற்கு ஒவ்வொரு அமைப்பிலும் தோழர்களும் இருக்கின்றார்கள். ஆனால் ஒரு ஒருங்கிணைந்த செயல்பாடு என்பது மிக குறைவாகவே உள்ளது. அதைப் பல சம்பவங்களில் நம்மால் அவதானிக்க முடிகின்றது.modi cow

 நூற்றுக்கணக்கான சிறு சிறு அமைப்புகள் உள்ளன. அவற்றில் பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய அமைப்புகளும் அடக்கம். இன்னும் இதில் சேராமல் பல முற்போக்கு ஜனநாயக அமைப்புகள் எல்லாம் செயல்பட்டுவருகின்றன. ஆனால் இப்படி செயல்படுவதால் என்ன பெரிய விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்த முடியும் என்று அவர்கள் நினைப்பதில்லை. சில பிரச்சினைகளுக்கு அனைவரும் சேர்ந்து பிரச்சினையின் அடிப்படையில் கூட்டியக்கம் எடுக்கின்றார்கள். பிறகு களைந்து சென்றுவிடுகின்றார்கள். எண்ணிக்கையில் பலவாக முற்போக்கு அமைப்புகள் பிளவுபட்டு கிடப்பது எதிரிகள் தங்களை வலுப்படுத்திக்கொள்ளவே பயன்படும். ஒரே சித்தாந்தத்தின் கீழ் பலவாறு நம் தேவைக்கும் வசதிக்கும் ஏற்றவாறு நாம் அமைப்புகளை வைத்துக்கொள்வது என்பது வேறு ஆனால் ஒரே சித்தாந்ததை பலவாறாக வியாக்கியானம் செய்துகொண்டு நான் சொல்வது தான் சரி என்ற தன்மையில் பலவாறு பிளவுபட்டுக் கிடப்பது என்பது வேறு. சின்ன சின்ன கருத்துவேறுபாடுகளால் பலமாக இருந்த பல அமைப்புகள் இன்று அவை உடைந்த பின்னால் வலுவிழந்து கடைசியில் காணாமலேயே போய் விட்டன.

 எனவே அப்படி சின்ன சின்ன கருத்துவேறுபாடுகளால் பிரிந்த அமைப்புகள் காலத்தின் தேவைகருதி தங்களை ஒரே அமைப்பாக இணைத்துக்கொள்ள மனம் திறந்த பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும். ஒரு பெரும் அமைப்பாய் இருந்து செய்ய முடியாத எதையும் சிறு குழுவாக இருந்து நிச்சயம் செய்ய முடியாது என்பதை உணரவேண்டும். ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்கள் பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள், தலித் அமைப்புகள், பெண்ணுரிமை பேசும் அமைப்புகள் என அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தீர்க்க முடியாத வேறுபாடுகள் இருக்கலாம் பத்துக்கு ஒன்பது சரி என்று இருந்தால் அந்தத் தீர்க்க முடியாத ஒரு கருத்து வேறுபாட்டை தொடர் விவாதங்கள் மூலம் காலப்போக்கில் தீர்த்துக்கொள்ள ஒரு பக்கம் முயற்சி செய்துகொண்டே மறுபக்கம் தங்களுக்குள் பொருந்திப்போகும் மீத முள்ள ஒன்பது கருத்துக்களை மேலும் வளமாக்க மேலும் செழுமையடைய இணைந்து செயல்படலாம்.

 நாடு ஒரு பெரும் நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ளது. பார்ப்பன பாசிசம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அனைத்துப் பன்மைத்துவத்தையும் அழித்து ஒற்றை பண்பாட்டை அதுவும் பார்ப்பனின் பண்பாட்டை ஒட்டுமொத்த இந்திய மக்களுக்குமான பண்பாடாக திணிக்க வன்முறையான வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மதக்கலவரங்களையும், சாதி கலவரங்களையும் தூண்டிவிட்டு ஆட்சிக்கு வந்த பி.ஜே.பியால் தமிழ்நாட்டில் மட்டும் அப்படி பெரியதாக எதையும் செய்து மக்களிடம் செல்வாக்கை பெற முடியவில்லை. கோவையில் ரவுடி சசிகுமார் மரணத்தை வைத்து கலவரம் செய்தார்கள் ஆனால் மக்கள் அவர்களை வன்முறை கும்பல் என்றும் பிரியாணி திருடர்கள் என்றும் முத்திரைகுத்தி தனிமைப்படுத்தினார்கள். திருப்பூரில் கள்ளக்காதல் விவகாரத்தால் தூக்குபோட்டுச் செத்துப்போன மாரிமுத்துவின் பக்கத்தில் இவர்களே மோடிக்கு செறுப்புமாலை போட்டும் தேசிய கொடியைத் தலைகீழாக பறக்கவிட்டும் கலவரத்தைத் தூண்ட முயற்சி செய்தார்கள். ஆர்.எஸ்.எஸ் – பிஜேபியைச் சேர்ந்தவர்கள் எய்ட்ஸ் வந்து செத்தால்கூட இஸ்லாமிய பயங்கரவாதிகளின் சதி என்று முத்திரை குத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயன்றார்கள். எதுவுமே சிக்கவில்லை என்றால் தங்கள் வீட்டுக்கு தாங்களே பெட்ரோல் குண்டுகளை போட்டுக்கொண்டும் தங்கள் பெயருக்கு தாங்களே ஆட்களை வைத்துக் கொலை மிரட்டல் கடிதங்களை எழுதியும் தாங்கள் கீழ்த்தரமான, அரசியலுக்காக எதையும் செய்யும் பேர்வழிகள் என்று நிரூபித்தனர்.

 மோடி மாடுகளை சந்தையில் இறைச்சிக்காக விற்பதை தடுக்கலாமா வேண்டாமா என்று மூன்று நேரமும் மாட்டுமூத்திரத்தை குடித்து மாட்டு சாணியைத் தின்றுவிட்டு யோசித்துக் கொண்டிருந்த போதே நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் காலிகள் பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் பல தலித்துக்களையும் முஸ்லிம்களையும் துடி துடிக்க அடித்துக்கொன்றார்கள். ஆனால் தமிழ்நாட்டில் அப்படி எதுவும் பெரியதாக நடைபெறவில்லை. வழக்கம் போல பீப் சில்லி, பீப் வறுவல், பீப் பிரியாணி என தமிழர்கள் தனது வழமையான பண்பாட்டு அடையாளத்தை எந்தக் காலிகளுக்கும் பயப்படாமல் தொடர்ந்துகொண்டு இருந்தனர். மோடியின் அறிவிப்பு வெளியான பின்பு மாடுகளை வண்டிகளில் ஏற்றிச்செல்வோர்களை மடக்கிப்பிடித்து அவர்களை சம்பவ இடத்திலேயே அடித்து உதைத்துச் சித்தரவதை செய்துகொல்லும் செயல்கள் பரவலாக நாடுமுழுவதும் திட்டமிட்ட முறையில் அதிகரித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பழனியில் தங்களுடைய கைவரிசையைக் காட்டியிருக்கின்றார்கள் ஆர்.எஸ்.எஸ் காலிகள்

 விவசாய பயன்பாட்டுக்காக மாடுகளை மணப்பாறை மாட்டு சந்தையில் இருந்து தன்னுடைய சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள தேவனூர்புதூருக்கு செந்தில் என்பவர் வாங்கிக்கொண்டு பழனி அருகே சென்றுகொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த மன்னார்குடியை சேர்ந்த மடாதிபதி சம்பத்குமார ஜீயர் என்ற தொந்தி பார்ப்பான் மாடுகள் ஏற்றிவந்த வண்டியை மறித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து உள்ளார். இந்தத் தகவல் அறிந்து அங்குவந்த கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள்,எஸ்.டி.பி.ஐ சேர்ந்த தோழர்கள் காவல்துறையுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கின்றார்கள். சிறிது நேரத்தில் கலவரம் செய்வதற்கு வாய்ப்புகிடைத்த மகிழ்ச்சியில் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு அங்கு வந்த ஆர்.எஸ்.எஸ் காலிகள் ஜீயரிடம் சென்று தாங்கள்தான் இந்த ஏரியாவிலே வாழும் உண்மையான பார்ப்பானின் வைப்பாட்டி மகன்கள் என்று நிரூபிப்பதாக வாக்குறிது கொடுத்துவிட்டுக் கலவரத்தில் ஈடுபட்டு இருக்கின்றார்கள்.

 இந்தச் சம்பவம் தொடர்பாக அந்தப் பார்ப்பன தொந்தி ஜீயர் “ ஒரு சிறிய வாகனத்தில் 7 கன்றுக்குட்டிகளை நெருக்கமாக ஏற்றி செல்வது மனதுக்கு வேதனை அளிப்பதாக உள்ளது.இது அவைகளை சித்ரவதை செய்வதை போன்றதாகும்.கன்று குட்டிகளுக்குத் தேவையான தீவனம், தண்ணீர் எதுவும் வாகனத்தில் இல்லை. எனவே கன்றுக்குட்டிகளுக்குத் தீவனம் கொடுத்து, பெரிய வாகனத்தில் ஏற்றிசெல்ல வேண்டும் என்று குறிப்பிட்டு புகார் கொடுத்து இருக்கின்றார். இவன் சொல்வது போல எல்லாம் செய்யவேண்டும் என்றால் மாடுகளை கப்பலில்தான் ஏற்றிச்செல்ல வேண்டும். நாட்டில் எவ்வளவோ கொலை,கொள்ளை, பாலியல்பலாத்காரம், ஊழல், அதிகார அத்துமீறல்கள் என நடக்கின்றன. ஆனால் அதைப் பற்றியெல்லாம் எப்போதுமே கண்டுகொள்ளாத அதற்காக ஒரு சிறு துரும்பைக் கூட தூக்கிபோடாத இந்த தொந்தி பார்ப்பான் மாடுகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச்சென்றதைப் பார்த்து மனம் வேதனைப் பட்டாராம். இதற்குப் பெயர்தான் பார்ப்பன கொழுப்பு என்பது. நமக்குக் கூடத்தான் மனம் வேதனையாக உள்ளது நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் ஒருவேளை சோற்றுக்கே வழியற்று எலும்பும் தோளுமாக வாழும் போது அரைநிர்வாணமாக பொது இடத்தில் சூடு சுரணை இல்லாமல் தொந்தியையும் உச்சிக்குடுமியையும் ஆட்டிக்கொண்டு இவர் நிற்பதை பார்த்து. அப்படி என்றால் நாமும் இவர் மீது வழக்கு தொடரலாமா? பொது இடத்தில் சட்டை போடாமல் ஆபாசமாக அரை நிர்வாணமாக இருந்தார் என்று? என்ன அக்கிரமம் ஏற்கெனவே கடுமையான வறட்சியால் விவசாயிகள் அனைவரும் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கின்றார்கள். கந்துவட்டிக்குக் கடன் வாங்கி மாடுகளை சந்தையில் இருந்து வாங்கி பெரிய வண்டியில் கொண்டு சென்றால் பணம் அதிகமாக ஆகும் என்று கையில் இருக்கும் காசைவைத்து சிறிய வண்டியை ஏற்பாடு செய்து கொண்டுபோனால் உழைக்காமல் சோறுதின்னும் தொந்தி பார்ப்பானுக்கு மனம் வேதனைப்படுகின்றதாம். தொந்தி பார்ப்பனானுக்கு மனம் வேதனைப்பட்டால் அவனின் வைப்பாட்டி மகன்களுக்கும் மனம் வேதனை படுகின்றதாம். அதனால் கலவரம் செய்வார்களாம் தொந்திப்பார்ப்பானின் மனம் குளிர ஏழை விவசாயியை ஒழித்துக்கட்டுவார்களாம்.

 தமிழக மக்கள் இந்த அயோக்கிய கும்பலைபற்றி இதில் இருந்து நன்றாக தெரிந்துகொள்ள வேண்டும். பிரச்சினை என்று வந்தால் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பல் தொந்தி பார்ப்பனின் பின்னால்தால் நிற்பார்களே ஒழிய எந்த விவசாயிகள் பின்னாலும் நிற்கமாட்டார்கள் என்று. இது தொந்தி பார்ப்பான்களின் நலன்களுக்காக பார்ப்பான்களாலும் அவனின் வைப்பாட்டி மகன்களாலும் நடத்தப்படும் பொற்கால ஆட்சி.

  எனவே தான் சொல்கின்றோம் இப்படியான சூழ்நிலையை எதிர்கொள்வதற்கு பிளவுபட்டு நிற்கும் முற்போக்கு அமைப்புகள், ஒரே கருத்துக்களை வைத்துக்கொண்டு பல்வேறு பெயர்களில் செயல்படும் அமைப்புகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து ஒரு பாசிச எதிர்ப்புப் படையை உடனடியாக கட்டியமைக்க முயற்சி செய்ய வேண்டும் என்று. நாம் தமிழ் நாட்டை காவி பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து உடனே காப்பாற்ற வேண்டிய தருணமிது. இல்லாமல் போனால் பழனியில் நடைபெற்ற கலவரம் போன்று நாளை தமிழ்நாட்டில் பல இடங்களில் நடக்க வாய்ப்புள்ளது. அதற்கான சதி திட்டங்களை ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பல் வைத்திருக்கின்றது. நிலைமையை உணர்ந்து நமக்குள் இருக்கும் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளை மறந்து இல்லை இப்போதைக்குத் தள்ளிவைத்துவிட்டுப் பார்ப்பன பயங்கரவாத எதிப்பு என்ற ஒற்றைப் புள்ளியில் நாம் அனைவரும் ஒன்றுபட்டுப் பாசிச எதிர்ப்புப் படையை உருவாக்கி மிக தீவிரமாக களமாட வேண்டும். அது ஒன்றுதான் நமது விவசாயிகளையும், நம் மக்களையும் பார்ப்பன பயங்கரவாதத்தின் பண்பாட்டுப் படையெடுப்பில் இருந்தும் அவர்களின் காலித்தனத்தில் இருந்தும் காப்பாற்ற உதவும்.

- செ.கார்கி

Pin It