1) சென்னை அய்.அய்.டி.யில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தை உருவாக்கிய மாணவர்களை மிரட்டி, அதற்குத் தடைபோட்டது யார்? - பா.ஜ.க. ஆட்சி. அதே நேரத்தில் விவேகானந்தர், வால்மீகி, உபநிஷத்துகள் பெயரில் படிப்பு வட்டங்களை நடத்துவதற்கு அனுமதி அளித்தது - பா.ஜ.க. ஆட்சி.
2) அய்.அய்.டி.யில் சைவ, அசைவ உணவு சாப்பிடும் மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய தோழமையைக் குலைத்து இரு பிரிவினருக்கும் தனித் தனி உணவருந்தும் இடங்கள்; தனித் தனி தட்டுகள்; தனித் தனிக் குவளைகள் என்ற வர்ணப் பாகுபாட்டைப் புகுத்தியது யார்? - பா.ஜ.க. ஆட்சி.
3) அய்.அய்.டி. வளாகத்தில் தனக்குப் பிடித்தமான மாட்டுக்கறியை சாப்பிட்ட மாணவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய பார்ப்பன உயர்ஜாதி மாணவர்களுக்கு பாதுகாப்பு அளித்து காப்பாற்றியது யார்? - பா.ஜ..க. மனிதவளத்துறை அமைச்சகம்.
4) சென்னை அய்.அய்.டி. வளாகத்தில் மத்திய அமைச்சர்கள் நித்தின் கட்காரி, பொன். இராதாகிருஷ்ணன் பங்கேற்ற விழாவில் ‘மகா கணபதி’ என்ற இறை வாழ்த்துப் பாடலைப் பாடி தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை பாட மறுத்ததற்கு காரணம் யார்? - பா.ஜ.க. ஆட்சி.
5) சமஸ்கிருதத்தை அய்.அய்.டி.யில் ஒரு விருப்பப் பாடமாக்கியதோடு தொழில்நுட்பப் பாடங்களைப் புரிந்து கொள்வதற்கு சமஸ்கிருத அறிவு கட்டாயம் வேண்டும் என்று அறிவித்தது யார்? - பா.ஜ.க. ஆட்சி.
6) இந்தியாவின் உயர்கல்வி நிறுவனத்தை பார்ப்பனிய மாக்கியது பா.ஜ.க.வின் மனிதவளத் துறை. அம்பேத்கரையும் பெரியாரையும் வளாகத்துக்குள் தீண்டப்படாதவர்களாக மாற்றியது பா.ஜ.க.வின் மனித வளத்துறை அமைச்சகம்.