கழகத் தலைவர் கொளத்தூர் மணி எழுதிய ‘பெரியாருக்கு எதிராக முனை மழுங்கும் வாதங்கள்’ என்ற புத்தகம் நன்செய் பதிப்பகத்தின் சார்பில் மக்கள் பதிப்பாக, 80 பக்கங்கள், 40 ரூபாய் விலையில் வரவுள்ளது. நூலின் வெளியீடு நவம்பர் 27 மாவீரர் நாளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர், விசிக தலைவர் திருமாவளவன் அவர்களால் வெளியிடப்படவுள்ளது.

அன்று விற்பனையாகும் புத்தகங்களுக்கான தொகை முழுவதும் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு நன்கொடையாக வழங்கப்பட வுள்ளது என்று ‘நன்செய் பதிப்பகம்’ சார்பாக கவிஞர் தம்பி அறிவித்துள்ளார்.

‘அறிவுச்சுடர் பதிப்பகம்’ நடத்தி வரும் திருச்சி அரசெழிலன், கழகத் தலைவரின் பிறந்தநாளை ஒட்டி 500 புத்தகங்களுக்கான செலவை ஏற்றுக் கொண்டுள்ளார். தலைவர்களின் பிறந்த நாளைக் கொண்டாட நினைக்கிற தோழர்கள் இதேபோல வேறு ஏதாவது சிறு நூல்களை வெளியிட்டு கொள்கை பரப்பலாம் என்கிறார் தோழர் அரசெழிலன்.