* பார்ப்பனியத்தின் உயிர்நாடி, வேத மதத்தின் அடிப்படைக் கருத்தியல்கள், உபநிடதங்களின் உள்ளுறை, தர்ம சாத்திரங்களின் தகிடுதத்தங்கள் ஆகிய அனைத்தும் கீதையில் உள்ளடங்கியிருப்பதை உணர்ந்து கொண்ட பார்ப்பனர்கள், எதிரிகளை சிதறடிப்பதற்கான ஆயுதமாக கீதையைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

* கீதை - புரட்சிகரமாக தோற்றம் காட்டக்கூடிய வெற்று முழக்கங்களை மிக சாமர்த்தியமாக முன்னிறுத்துகிறது. எனவே கீதைக்கு விளக்க உரை எழுதியவர்களும், இந்த முழக்கங்களை முன்னிறுத்துவதையே கலாச் சாரமாக்கிக் கொண்டார்கள். பிறகு இந்துத்துவமே முழக்கங்களில் உயிர் வாழும் ஒரு இயக்கமாகி விட்டது.

* “கதம்பக் குவியலான கீதைத் தத்துவம், புதிது புதிதான விளக்கங்களை நுழைப்பதற்கு இடமளிக்கும் வகையில்தான் அமைந்துள்ளது. ஆனால் சமூகத் தடைகளைக் கடந்து புதுவழியில் செல்வதற்கு அது வழிகாட்ட வில்லை” என் கிறார் வரலாற்று ஆய்வாளர் கோசாம்பி.

* கீதையின் முரண்பாடுகளைப் போலவே - இந்துக்களின் பண்பு நலனும் சொல் ஒன்று, செயலொன்றாகியது. உயர்ந்த தத்துவங்களைப் பேசும் அறிவு ஜீவி யாகத் திகழும் இந்து, பிறரிடம் உறவாடுதல் என்று வரும்போது சாஸ்திரங் களையும், விதிகளையும் பின்பற்றுகிறான் என்று இந்துப் பண்பாட்டை மதிப் பிடுகிறார், ‘இந்திய வரலாற்றில் பகவத்கீதை’ நூலாசிரியர் பிரேம்நாத் பசாஸ்.

* குழப்பங்கள் நிறைந்திருந்தாலும், கீதையின் கருத்துகளுக்கு தெய்வீகம் சாயம் பூசப்பட்டதால், பல்வேறு ‘இந்து’ சிந்தனை மரபைச் சார்ந்தவர்கள், கீதையின் பக்கமே சாய்ந்தனர். கீதை சாங்கியக் கோட்பாடுகளையும் ஓரளவு பேசுவதால், பார்ப்பன மேலாதிக்கத்தைத் தடுத்து நிறுத்திவிடும் என்று, பகுத் தறிவாளர்களும் நம்பினார்கள். கீதையின் பொய்யான முழக்கங்கள், இப்படி அனைத்துத் தரப்பினரையும் ஏமாற்றியது.

* பல்வேறு சிந்தனைகளைக் கொண்டிருந்த மக்களின் மனநிலை மாறத் தொடங்கிய நிலையில், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு கி.பி.319ஆம் ஆண்டில் சந்திரகுப்தன் என்ற உள்ளூர் படைத் தலைவன், பாடலி புத்திரத் தில் ஒரு பேரரசை உருவாக்கினான். கோசலம், மகதம் ஆகிய பகுதிகளிலும் தனது ஆட்சியைப் பரவச் செய்து 16 ஆண்டுகாலம் ஆட்சி செலுத்தினான். தொடர்ந்து அவனது மகன் சமுத்திரகுப்தன் தனது எல்லைகளை மேலும் விரிவுபடுத்தினான். சந்திரகுப்தனுக்குப் பிறகு அவனது மகன் இரண்டாம் சந்திரகுப்தன் பதவிக்கு வந்து, தனது பெயரை விக்கிரமாதித்தன் என்று மாற்றிக் கொண்டான்.

* குப்தர்கள் தங்கள் ஆட்சி எல்லைப் பகுதிகளை விரிவாக்கி, ஒரு பேரரசை நிறுவினார்கள். அதற்கு வழிமுறைகளைக் காட்டியது கீதையின் கற்பிதங்களே. குப்தர்கள் ஆட்சியில், பார்ப்பன ஆதிக்கம் மீண்டும் நிலை நாட்டப்பட்டது. இந்த ஆட்சியில் மக்களின் சமூகப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தது உண்மை தான். ஆனால் அதற்கு, நாட்டு நிர்வாக அமைப்பில் பவுத்த புரட்சி நிறுவி இருந்த நல்ல அடித்தளங்கள் தான் காரணமே தவிர, குப்தர்களது திறமையல்ல என்று கூறுகிறார் பிரேம்நாத் பசாஸ்.

* இதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பு, குப்தர்களைப் போலவே மவுரியர் களும் பேரரசைக் கட்டி ஆண்டார்கள். அசோகரும் மவுரியப் பேரரசர் தான்; அவர்கள் புத்தரின் அறநெறிக் கோட்பாடுகளைப் பரப்பி நல்லாட்சி நடத்தினார்கள். ஆனால் குப்தர்களோ, அறநெறியை கைவிட்டு, போரை நாடினார்கள் என்கிறார் ஆய்வாளர் கோசாம்பி. அசோகர் நிறுவிய கல்வெட்டுத் தூண்களில், சமுத்திரகுப்தன், தனது போராட்ட வெற்றிகளையும், தனது புகழையும் பொறித்துக் கொண்டான்.

* பவுத்தப் புரட்சியின்போது அமு லில் இருந்த சமூக நடைமுறைகள் அனைத்தும், குப்தர்கள் ஆட்சியில் மாற்றியமைக்கப்பட்டன. பார்ப்பன புரோகிதங்களும், சாதியமும், யாகங்களும், சடங்குகளும் முக்கியத்துவம் பெற்றதோடு, பார்ப்பனர்களுக்கு, குப்தர்கள் ஏராளமாக நிலங்களையும் வழங்கினார்கள். பசுக்கள் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன. மக்கள் மொழியான ‘பிராகிருதம்’ ஒழிந்து, சமஸ்கிருதம் அரசு மொழியாகியது.

* குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த ஆரியபட்டர் (கி.பி.476) கிரேக்க, எகிப்திய, பாபிலோனிய மொழிகளிலிருந்த வானவியல், கணிதம் பற்றிய குறிப்புகளைக் கற்றுத் தேர்ந்திருந்தார். அந்த அடிப்படை யில் கோப்பர்நிக்கஸ் காலத்துக்கு முன்பே, கி.பி.499-ல் சூரிய மண்டலம் பற்றிய கருத்துகளை வெளியிட்டார். பூமி தனது அச்சில் சுழன்று வரும் கோளம் என்றும், பூமி மற்றும் சந்திரன் நிழல்களே கிரகணங்கள் என்றும், ஆண்டுக்கு 365.3586805 நாட்கள் என்றும் அவர் கூறினார். ஆரியபட்டர், சோதிடம், சாகதகம் ஆகியவற்றை அறிவியல் அல்ல என்று புறக்கணித்தார். ஆனால், ஆரியபட்டரின் புரட்சிகர கருத்துக்களை, பார்ப்பனர்களும், குப்த ஆட்சியாளர்களும் ஏற்றுக் கொள்ள வில்லை. மாறாக, அதே காலத்தில் வாழ்ந்தவரான வராகமிகிரர் என்ற பிற்போக்கு வாதி, வானவியலை சோதிடம், சாதகம், கணிதம் என்று மூன்றாகப் பிரித்து, சோதிடத்துக்கும், சாதகத்துக்கும் முக்கியத்துவம் அளித்தார்.

            பார்ப்பனர்கள் ஆர்யபட்டரைப் புறக்கணித்து வராகமிகிரரை ஏற்றுக் கொண்டனர். வானவியல், கணிதம் ஆகியன வளர்ச்சி அடையாமல் தடுத்தனர். (இந்தியாவின் செயற்கைக்கோள் ஒன்றுக்கு ‘ஆர்யபட்டா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.)

* குப்தர்கள் ஆட்சியில் சட்ட நூல்கள், ஓவியம், சிற்பம், கட்டிடக் கலை பற்றிய நூல்கள் எழுதப்பட்டன. ஏராளமான புராணக் கதைகளும் அப்போதுதான் உற்பத்தியாயின. ஆனாலும் கலை, இலக்கியம், அறிவியல் ஆகிய அனைத்தி லும் பார்ப்பனிய உற் பத்திகள் கீழ்த்தரமானவையாகவும், சொந்த முயற்சி யின்றி திருடப்பட்டதாகவும் இருந்தன என்கிறார் நூலாசிரியர் பசாஸ்.

* பவுத்தம் உருவாக்கிய மக்களாட்சி தத்துவத்தை ஒழித்தது குப்தர்களே என்கிறார் வரலாற்று ஆய்வாளர் ஆர்.சி.மஜும்தார் புதிய கலை இலக்கியங்களை உற்பத்தி செய்த பார்ப்பனர்கள், பழைய சாத்திரங்களில் மாற்றம் செய்வது, இடைச் செருகுவது, புதிதாக சேர்ப்பது என்ற அனைத்து கபட வேலைகளையும் செய்தனர். பார்ப்பனர்களின் முக்கிய எதிரியான கவுதம புத்தர்-இந்துக் கடவுளான விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமாக குப்தர்கள் காலத்தில் அறிவிக்கப்பட்டார். 

Pin It