மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை போடுகிறது பா.ஜ.க. ஆனால் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியாதான் முதலிடம்.
• கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியா ஏற்றுமதி செய்த மாட்டிறைச்சி 1850 கிலோ மெட்ரிக் டன்.
• 2015-2016இல் இந்தியாவுக்கு மாட்டிறைச்சி மூலம் கிடைத்த வருமானம் ரூ. 28,802 கோடி.
• கடந்த ஆண்டு இந்தியாவும் பிரேசிலும் தலா 19.60 சதவீதம் தனித்தனியாக மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்து முதலிடத்தில் சரிசமமாக நிற்கின்றன. ஆனால் பிரேசில் நாட்டில் ‘பசு தெய்வம்’ என்ற கூப்பாடுகள் ஏதும் இல்லை.
• ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் புரதச் சத்து மாட்டிறைச்சி.
• வேத கால பார்ப்பனர்கள் மாட்டிறைச்சியை விரும்பி சாப்பிட்டார்கள். ‘இந்திரன்’ என்ற கடவுளுக்குப் பிடித்த மாட்டிறைச்சியை பார்ப்பனர்கள் ‘அக்னி’ யாகத்தில் பலியிட்டதை ரிக்வேதம் கூறுகிறது.
• பலியிடப்பட வேண்டிய பசு உள்ளிட்ட மிருகங்களை எப்படி பலியிட வேண்டும்; எந்தப் பாகம் ருசியானது என்று ‘தைதீனிய சம்கிதம்’ என்ற சமஸ்கிருத புனித நூல் கூறுகிறது.
• தாய்மார்கள் கர்ப்பத்தில் வளரும் குழந்தை வேதத்தில் சிறந்து விளங்க வேண்டுமானால் நெய்யால் வறுத்த பசுவின் கறியை தாய்மார்கள் சாப்பிட வேண்டும் என்று வேதம் கூறுகிறது.
• இராமன் மாட்டிறைச்சி சாப்பிட்டான் என்று வால்மீகி இராமாயணம் கூறுகிறது. பரத்வாஜர் என்ற முனிவர் தனது ஆசிரமத்தில் பசுவின் கன்றை பலி கொடுத்து இராமனுக்கு விருந்து வைத்தார் என்றும் வால்மீகி இராமாயணம் கூறுகிறது.
• அமெரிக்காவில் விவேகானந்தர் பசு மாமிசத்தை விரும்பி உண்டார் என்று அவருடனிருந்த டாக்டர் பரோவ் தனது அனுபவக் குறிப்பில் பதிவு செய்கிறார்.
• இந்தியாவில் பஞ்சம் வந்தபோது பசு மாட்டைக் காப்பாற்ற விவேகானந்தரிடம் நன்கொடை கேட்டு வந்த பார்ப்பனர்களிடம் மக்கள் மடிந்ததைவிட மாடு செத்தது தான் உங்களுக்கு முக்கியமாகப் போய்விட்டதா? என்று விவேகானந்தர் கேட்டார். ‘பசு எங்கள் தாய்’ என்று பார்ப்பனர்கள் கூற, ‘உங்களைப் போன்றவர்களை பசுமாடுகள்தான் பெற்றெடுக்க முடியும்’ என்று விவேகானந்தர் பதிலடி தந்தார். இராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள நூலில் இப்பதிவு இடம் பெற்றுள்ளது.
• தோல் பெல்ட், தோல் செருப்பு, தோல் பை என்று தோல் பொருள்களை பயன்படுத்துவோர், அது மாட்டுத் தோலில் செய்யப்பட்டது அல்ல என்று உறுதியாகக் கூற முடியுமா?
உணவு உரிமை தனி மனித உரிமை!
அதை மதத்தின் உரிமையாக்குவது மத பாசிசம்!
ஒடுக்கப்பட்ட மக்களின் உணவான மாட்டுக்கறியை சாப்பிடுவது குற்றம் என்று கூறிக் கொண்டே அந்த மக்களை ‘இந்துக்கள்’ என்று நாடகம் ஆடுவது இரட்டை வேடம் அல்லவா?
சிந்திப்பீர் தமிழர்களே!