(பேய், பயம் என்பது ஒரு மனநோய். நினைத்ததைப் போன்றே பேசி, நடிக்கும் மனநோய்க்குப் பெயர்‘குளோசொலேலியா’.மனநல மருத்துவர் டாக்டர் கோவூர்சிகிச்சை அளித்த ஒரு பேய் பிடித்தவரின் கதை இது)

காலி ரிச்மண்ட் கல்லூரியில் கோவூர்ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த காலம். 1946ஆம் ஆண்டு பல்கலைக்கழக நுழைவுக்காகப் பயின்று கொண்டிருந்த சில மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் விசேட வகுப்புகளை நடத்திக்கொண்டிருந்தார் கோவூர்.மே மாதத்தில் ஒரு சனிக்கிழமைவகுப்புமுடிந்து மாணவர்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். ஜயசிங்கா என்ற மாணவன் கோவூரிடம் வந்தான். ‘என்னவிஷயம்’ என்று கேட்டார்.

தன் தந்தை ஒரு அரசாங்க அதிகாரிஎன்றும், அவரிடம் கடமை புரியம் ஒரு பியூன் ஆறு மாதங்களுக்கு முன்புஇறந்துபோன கர்ப்பிணியான ஒரு மீனவப் பெண்ணின் ஆவியால் பீடிக்கப்பட்டு அந்தப் பெண்ணைப் போன்றே பிதற்றிக் கொண்டிருப்பதாகவும் கூறினான். தன்வீட்டுக்கு இரு வீடுகள் தள்ளியே அந்தப்பியூனின் வீடு இருப்பதாகவும் அவன்சொன்னான்.

மேலும் விசாரித்தபோது, அந்தப்பியூனின் பெயர் பீட்டர் என்றும், சமீபத்தில் திருமணமாகித் தேன்நிலவுக்குச் சென்றுதிரும்பியவன் என்றும் தெரிய வந்தது.மூன்று வாரங்களாக அவனது நிலைமைமோசமாகிவிட்டதென்றும் கூறப்பட்டது.

மறுநாள் ஞாயிற்றுக் கிழமை,ஜயசிங்காவையும் அழைத்துக் கொண்டு பீட்டரின் வீட்டுக்குச் சென்றார் கோவூர்.அப்போது காலை பத்தரை மணி இருக்கும். காலி கொழும்பு சாலையில் ஒருஒழுங்கையில் ஜயசிங்காவின் வீடும்,பீட்டரின் வீடும் அமைந்திருந்தன. இந்தஒழுங்கையை ஒட்டித்தான் ‘தடல்ல’சுடுகாடும் இருந்தது. ‘தடல்ல’ சுடுகாடுஎன்றாலே அப்பகுதி மக்கள் நடுங்குவார்கள். அங்கு பேய்கள் உலவுவதாகமக்கள் நம்பினர். அந்தச் சுடுகாட்டையும்ஜயசிங்காவின் வீட்டையும் கடந்து பீட்டரின்வீட்டை அடைந்தனர். வீட்டு வராந்தாவில்ஒரு ஸ்டூலில் பீட்டர் அமர்ந்திருந்தான்.

கோவூர் அருகில் சென்றபொழுதுகூட பீட்டர் அவரை அவதானிக்கவில்லை.ஒருவித வெறித்த பார்வையை எங்கோ செலுத்திய வண்ணம் இருந்தான்.அருகில் சென்ற கோவூர் எத்தனையோ கேள்விகளைக் கேட்டார். ஆனால், பீட்டர்இலட்சியம் செய்ததாகவே தெரியவில்லை.அடுத்து ஜயசிங்காவின் வேண்டுகோளுக்கிணங்க பீட்டரின் இளம் மனைவிவெளியே வந்தாள். அவளிடம் நடந்ததுஎன்னவென்று கோவூர் கேட்டார். அவளும்நடந்த கதையைக் கூறினாள்.ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி இரவு 8.30மணி இருக்கும். வீட்டில் மண்ணெண்ணெய்தீர்ந்துவிட்டது. விளக்குகள்அணைந்துவிடக் கூடிய சூழ்நிலை உருவாகி

விட்டது. சமையலறையில் வேலையில்ஈடுபட்டிருந்த பீட்டரின் இளம் மனைவிகணவனை அழைத்து நிலைமையைக்கூறினாள். கடையில் போய்ஒரு பாட்டில்மண்ணெண்ணெய்வாங்கி வரும்படியும்வற்புறுத்த ஆரம்பித்தாள். பீட்டருக்குமுதலில் தயக்கமாகத்தான் இருந்தது.அவனுக்கு ‘தடல்ல’ சுடுகாடு பற்றிய பயம்நினைவுக்கு வந்திருக்க வேண்டும்.அவனின் மனைவி ஊருக்குப் புதியவளென்பதால் ‘தடல்ல’ சுடுகாட்டைப் பற்றிஎதுவும் விசேடமாக அறிந்திருக்கவில்லை.தனது பய உணர்ச்சியை மனைவிக்குக் காட்டிக் கொள்ளவும் பீட்டர் விரும்பவில்லை. தென்னை ஓலைகளைக் கொண்டு பந்தமொன்றைக் கட்டிக்கொண்டு கடைக்குப் புறப்பட்டான்.

வீட்டைவிட்டுப் புறப்படும்போதேசப்தமிட்டுப் பாடியவாறே அவன் கடைக்குச் சென்றான். பேய்களை விரட்டவே அவன்அப்படிப் பாடிக் கொண்டு சென்றான்.

கடைக்குப் போய்திரும்பும் பொழுதுதான்விஷயம் விபரீதமாகிவிட்டது. அவன்கையிலிருந்த தென்னை ஓலைப் பந்தம்எரிந்து சாம்பலாகித் தீர்ந்துவிட்டது. சிறிதுநிலவொளி இருந்ததால், பீட்டர் இருட்டில்வேகமாக வீட்டைநோக்கி நடக்கஆரம்பித்தான்.அந்த சந்து வீதிமுழுவதும் காய்ந்த

இலைச் சருகுகள்நிறைந்திருந்தன.அவன் நடக்கஆரம்பித்ததும்சருகுகள் சரசரக்கத் தொடங்கின. திடீரெனப்பீட்டரின் பின்புறமிருந்து சருகுகள்சரசரக்கும் ஓசைகேட்டது. பீட்டர்நெஞ்சு படபடக்கநின்றான். அந்தஓசையும் நின்றது.

மேதுவாகத்திரும்பிப் பார்த்தான்.அங்கே...!இறந்துபோன ஒரு கர்ப்பிணி மீனவப்பெண்ணின் ஆவி நின்று கொண்டிருந்தது.பீட்டர் வேகமாக நடக்க ஆரம்பித்தான்.அந்தப் பேயும் வேகமாகப் பீட்டரைத் துரத்தஆரம்பித்தது. பீட்டர் ஓடினான். அந்தப்பெண் பேயும் பின்னால் ஓடிச் சென்றது.பீட்டர் வேகமாக ஓடி தனது காம்பவுண்டைஅடைந்ததும் திரும்பிப் பார்த்தான். அங்கேதன்னை துரத்தி வந்த பெண் பேயைக்காணவில்லை.

பெருமூச்சு வாங்க பயத்துடன் நடுங்கியபடி ஓடியவன், தனது வீட்டுவராந்தாவில் மயங்கி விழுந்துவிட்டான்.மயக்கம் தெளிவிக்கப்பட்டதும் நடந்தவற்றைக் கூறி பீட்டர் பிதற்ற ஆரம்பித்தான்.இறந்து போன கர்ப்பிணிப் பெண்ணைப் போல் அவன் பேச ஆரம்பித்து விட்டான்.அவனது மனைவி தனது மாமனாருக்குத்தகவல் அனுப்பினான். பெரியவர்கள்வந்ததும் பலமாந்திரீகர்களை அழைத்தனர். பல பூஜைகள் நடத்தப்பட்டன.

ஒரு நாள் பூஜையின்போது பீட்டரின்உருவில் அந்தப் பெண்ணின் ஆவிபேசியது. “எனது கணவர் நான் இறந்ததும்இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்தப் புது மனைவி என்பிள்ளைகளை நன்றாகக் கவனிக்கிறாளாஎன்பதைப் பார்க்கவே வந்தேன்.”பட்டரின் மனைவி கதையைக் கூறிமுடிக்கும்பொழுது பகல் 12 மணியாகிவிட்டது. ஜயசிங்காவின் தம்பி வந்துகோவூரையும், ஜய சிங்காவையும்சாப்பாட்டுக்கு அழைத்தார். சிறிது நேரம்கழித்து மீண்டும் வருவதாகப் பீட்டரின் மனைவியிடம் கூறிவிட்டு அவர்கள்ஜயசிங்காவின் வீட்டுக்குச் சென்றார்கள்.

ஜயசிங்காவின் தாய்உணவு பரிமாறிக்கொண்டிருந்தார். ஜயசிங்கா அவனுடையதந்தை, கோவூர் ஆகியோர் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். ஜயசிங்காவின்பெற்றோர் பீட்டரின் நிலையைப் பற்றிக்கேட்டனர். இந்த நிலையில் எந்தமுடிவுக்குமே வர முடியாது என்று கூறியகோவூர், பீட்டரின் மனைவி கூறியதைஅப்படியே கூறினார். கோவூர் கதையை முடிக்கவில்லை.

ஜயசிங்காவின் தாய்திடீரெனச்சத்தமிட்டார். ‘எனக்கு இப்பொழுதுதெரிகிறது, நம்ம லில்லிதான்’ என்றுபலமுறை கத்தினார். ‘லில்லியா?’வியப்புடன் விழித்தார் கோவூர்.‘ஆமாம், நம்ம லில்லிதான்’ என்று கூறிய அந்த அம்மாள், ‘நீங்கள் கூறும்தேதியில் இரவில் ஓடிவந்தது எங்கள் வீட்டுவேலைக்காரப் பெண் லில்லிதான்’என்றார். கோவூருக்கு ஒரே குழப்பமாகஇருந்தது. உடனே சாப்பிடுவதைநிறுத்திவிட்டு, ‘கூப்பிடுங்கள் அந்தலில்லியை’ என்றார். சமையலறையிலிருந்துலில்லி அழைக்கப்பட்டாள். சுமார் இருபதுவயது மதிக்கத்தக்க அழகான தோற்றமுடைய லில்லி வந்தாள்.

லில்லியை உற்றுநோக்கியபடி கோவூர் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்.லில்லியும்ஏப்ரல் மாதம்19ஆம் தேதிநடந்தவற்றைக் கூறினாள்.“ அய்யா ,எனது ஊர் மாத்தலை, சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு ஏப்ரல்மாதம் 11ஆம்தேதி வீடு சென்றேன். ஏப்ரல்மாதம் 19ஆம் தேதிதான்காலிக்குத் திரும்பினேன். வழமையாக அங்கு பிற்பகல் புறப்பட்டால்மாலை 5 மணிக்குஇங்கு வந்துவிடலாம். அதேபோன்றுதான் இந்த முறையும் நான் புறப்பட்டு வந்தேன்.ஆனால், வரும் வழியில் நான் வந்தபேருந்து பழுதாகி பல இடங்களில்நிறுத்தப்பட்டது. இதனால் இரவு 7.30 மணிக்குப் பின்னால் தான் தடல்லையைவந்து அடைந்தேன். பேருந்திலிருந்துஇறங்கிய எனக்கு அந்த சுடுகாட்டுவழியாகப் போகப் பயமாக இருந்தது. இதேநேரத்தில் எந்த ஆணையும் நம்பி எனதுநிலையைக் கூறவும் நான் விரும்பவில்லை.

இதனால், அந்த ஒழுங்கை ஆரம்பமாகும்இடத்தில் நிற்கும் புன்னை மரத்தின் கீழ்சத்தமில்லாமல் நின்று கொண்டுயாராவது அந்த வழியாகப் போகமாட்டார்களா? அவர்கள் பின்னாலேயே போய்ன் விடலாமே என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.இப்படி சுமார் அரை மணி நேரம் கழிந்திருக்கும். பீட்டர் கடைக்குப் போவதைப்பார்த்தேன். அவர் திரும்பும் வரைஅமைதியாக இருந்தேன். வெளிச்சத்துடன்சென்ற பீட்டர் இருட்டில் திரும்பினார்.அவரை முன்னால் விட்டு நான் சிறிதுஇடைவெளிக்குப் பின் அவரைத்தொடர்ந்து சென்றேன். அந்த இருட்டுவேளையில் பீட்டரை நெருங்கிச் சென்றால்என்னை அடையாளம் கண்டு கொண்டு அந்த இருட்டு வேளையில் என்னிடம்தப்பாக நடந்து கொள்வாரோ என்ற பீதியில்தான் சிறிது இடைவெளி விட்டுஅவர் பின்னாலேயே சென்றேன்.

திடீரெனப் பீட்டர் நின்றார். நான் பயத்துடன்நின்றேன். அவர் ஓட ஆரம்பித்தார். நானும்அவர் பின்னாலேயே ஓடி எங்கள்வீட்டுக்குள் வந்து விட்டேன். பீட்டர் நேராகஓடிவிட்டார். என்னை எஜமானி அம்மாதனியாக வந்ததற்காக ஏசினார்கள். நான்பீட்டரைப் பின்தொடர்ந்து வந்த கதையை அவரிடம் சொன்ன பிறகு சமாதானம்அடைந்தார்.”இப்படி லில்லி தன் கதையைச் சொல்லிமுடித்தாள்.தன்மானத்துக்குப் பயந்து லில்லி ஒரு ஆணை நெருங்கி வர விரும்பாது,புத்திசாலித்தனமாகப் பீட்டருக்குச் சிறிது தூரத்தில் வந்ததால் கோழை மனம்கொண்ட பீட்டர், இந்தப் பரிதாபத்திற்கு ஆளாகியிருப்பது கோவூருக்கு தெளிவாகியது.சருகுகளின் ஓசையைக் கேட்டதும்,பீட்டர் திரும்பிப் பார்த்திருக்கிறான்.

அங்கேஒரு பெண் நிற்பது தெரிந்தது. மீனவப்பெண்ணின் ஆவியைப் பற்றியேநினைத்துக் கொண்டு இருட்டில் சென்றபீட்டர், பின்னால் நின்ற பெண்ணைக்கண்டதும் அது மீனவப் பெண்ணின்ஆவியென்று நினைத்து விட்டான்.அவனது மூளை பாதிக்கப்பட்டுவிட்டது.பயத்தால் வேகமாக நடந்தான் பீட்டர்.அவன் பின்னாலேயே போய்விட எண்ணிலில்லியும் வேகமாக நடந்தாள். அடுத்து பீட்டர் ஓடினான்.

லில்லியும் பின்னால்ஓடினாள். இங்குதான் ஒரு முக்கிய விஷயத்தைக் கவனிக்க வேண்டும்.லில்லியின் வீடு முன்னால் இருந்ததால் லில்லி தன் வீட்டுக்குள் நுழைந்துவிட்டாள்.தனது வீட்டு காம்பவுண்டுக்குள் நுழைந்த பீட்டர் திரும்பிப் பார்த்தபோதுபின்னால் வந்த ஆவியைக் காணவில்லை.அதனால் அதிர்ச்சியடைந்துவிட்டான்.இந்த அதிர்ச்சியால் வராந்தாவைநெருங்கியதும் மயங்கி விழுந்து விட்டான்.ஒரு சில வினாடிகளில் இவ்வளவுவிஷயங்களும் கோவூருக்கு புரிந்துவிட்டன. அதிர்ச்சியால் பீட்டரை‘குளோசொலேலியா’ (Glossiolalia) என்ற மனநோய்பற்றிக் கொண்டது.இந்த வியாதி பிடித்தவர்கள் தாங்கள் நினைத்ததைப் போன்றே பேசுவார்கள்,நடிப்பார்கள்.

இதனால்தான் பீட்டர் அந்தமீனவப் பெண்ணைப் போன்றே பேசவும்,பிதற்றவும்ஆரம்பித்திருக்கிறான். இதுவும்கோவூருக்குப் புரிந்தது.அடுத்து, லில்லியையும் குடும்பத்தினரையும் பீட்டரின் வீட்டுக்கு அழைத்துச்சென்றார் கோவூர். லில்லியை முழுக்கதையையும் பீட்டர் மனைவியிடம் கூறவைத்தார். பின்பு தடல்ல சுடுகாடு,பயங்கரப் பேய்உலாவும் இடம்இல்லையென்பதை விளக்கினார். தன்பிறகு பீட்டருக்கு ஹிப்னாடிஸ் முறையில்சிகிச்சை அளித்தார். அவனும்குணமடைந்தான். அன்று பயங்கரமென்றுவர்ணிக்கப்பட்ட தடல்ல சுடுகாடு, இன்றுஒரு விளையாட்டு மைதானம் போன்றுஆகிவிட்டது.

Pin It