மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!

அண்மைப் படைப்புகள்

தென் மாநிலங்களை ஓரம் கட்டும் ஒன்றிய அரசு

12 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

ரூ.12,698 கோடி வழங்கப்பட்டு வந்த நிலையில், ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ.3,923 கோடி: தென் மாநிலங்களை ஓரம்கட்டும் ஒன்றிய அரசு....

திருப்பரங்குன்றம் விவகாரம் - தெளிவுபடுத்திய தவெக அரசு!

12 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சாமி கோவிலில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. ஆனால்...

அன்றாட வாழ்வில் ஆணாதிக்க மொழிகள்

12 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

உங்கள் மனைவிக்கு சமையலறையில் நீங்கள் உதவி செய்வீர்களா? என்ற கேள்விக்கு பெரும்பாலான ஆண்கள் ஆமாம் என்று தான் பதில் கூறுகிறார்கள். இப்படி கூறுகிறவர்கள் மிகவும்...

தவெக அரசே சமூக அநீதிக்கு துணை போகலாமா?

12 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

தமிழ்நாட்டுக்கு உரிமையான உயர் சிறப்பு மருத்துவ மேல்படிப்புக்கான (super speciality) 152 இடங்களை ஒன்றிய ஆட்சியிடம் சரணடையச் செய்திருக்கிறது தவெக ஆட்சி;...

பாஜகவுக்கு நெருக்கடி முற்றுகிறது!

12 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

போராட்டத்தில் குதித்த இளைஞர்கள் கடந்த மாதம் நாடு முழுவதும் உள்ள 5,432 மையங்களில் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் நீட் 2026 தேர்வை எழுதியிருந்தனர்....

கோவையில் பேருந்து தீண்டாமை முடிவுக்கு வந்தது

12 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

கழகத்தின் இடைவிடாத போராட்டத்திற்கு வெற்றி! கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வாழும் கெம்பனூர் கிராமத்தில் நீண்ட காலமாக...

ஆரியர்களின் யோக்கியதை

12 ஜூன் 2026 பெரியார்

ஜர்மனியர்கள் தங்களை ஆரியர்கள் என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள். நம் நாட்டுப் பார்ப்பனர்களும் தங்களை ஆரியர்கள் என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள். இந்து மத...

பெரியார் முழக்கம் ஜூன் 11, 2026 இதழ் மின்னூல் வடிவில்...

12 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

    பெரியார் முழக்கம் ஜூன் 11, 2026 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.    

இடஒதுக்கீடு: பிரதிநிதித்துவமா? சமூகநீதியா?

10 ஜூன் 2026 கட்டுரைகள்

ஓர் ஓட்டப்பந்தயத்தை கற்பனை செய்து பாருங்கள். சிலர் தொடக்கக் கோட்டிலிருந்து ஓடத் தொடங்குகிறார்கள். சிலர் பல மீட்டர்கள் பின்னால் நிறுத்தப்படுகிறார்கள். ஆனால்...

தவெகவின் வெற்றி - ஓரங்கட்டப் பெற்ற குறுநில மன்னர்கள்

10 ஜூன் 2026 கட்டுரைகள்

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் நாம் ஏற்கெனவே சொன்னது போல தமிழக அரசியல் களத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி 60 ஆண்டுகால திராவிட அரசியல் கட்சிகளை...

ஒளிச்சேர்க்கை செய்யாமல் அழியும் வெப்ப மண்டலக் காடுகள்

10 ஜூன் 2026 சுற்றுச்சூழல்

எதிர்பார்க்கப்பட்டதை விட காடுகள் வெப்ப உயர்வால் ஆபத்தான நிலைக்கு வேகமாக சென்றுகொண்டிருக்கின்றன. அதிதீவிர வெப்பத்தால் வெப்பமண்டலப் பகுதி காடுகளில் மரங்களின்...

அரசியலமைப்பு அறத்திற்கும் இறையாண்மை அதிகாரத்திற்கும் இடையில்: இந்தியா, ஐ.நா. மற்றும் மனித உரிமை சிக்கல்கள்?

10 ஜூன் 2026 கட்டுரைகள்

இந்தியாவின் அரசியலமைப்புப் பயணம் என்பது ஜனநாயகத்தில் ஒரு ஆற்றல்மிக்க பரிசோதனையாகவே பெரும்பாலும் விவரிக்கப்படுகிறது. 1950-இல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச்...

வறுக்கி மழை

10 ஜூன் 2026 சிறுகதைகள்

பெரும் சோகத்தை தின்று செரித்த வீதியில் சமீப நாட்களாகவே இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. யார் என்ன சொல்லி என்ன செய்ய முடியும். நடந்தது நடந்து விட்டது....

ச்சி ச்சீ சில கேள்விகள்

10 ஜூன் 2026 கட்டுரைகள்

எழுத்தின் வழியாகவோ பேச்சின் வழியாகவோ செயல்பாடுகளின் வழியாகவோ திட்டப்படவேண்டிய ஒருவனை நாம் திட்டுகிறோமே... அவன் தன் அன்றாடத்தில் என்ன செய்து...

இனி தேறல் மழை

10 ஜூன் 2026 கவிதைகள்

புறாவென நினைக்கவில்லை உன் முத்தங்கள் றெக்கை முளைத்து வந்திருக்கலாம் *கைகள் விரித்து வானம் ஏந்துகிறாய்சாரல் மழையெல்லாம்இனி தேறல் மழை * ஒரம்பரை புள்ளங்க யார்...

கீற்றில் தேட...

"மாட்டுக்கறி தின்னும் புலையா - உனக்கு
மார்கழித் திருநாளா?'' - என்ற கேள்வியால்தான் அன்று நந்தன் முகத்தில் அறைந்தனர். இன்றும் தொடர்கிறது நந்தன் கதை.

உண்ணும் உணவு, செய்யும் தொழில் எல்லா வற்றுடனும் சாதி முடிச்சைச் சலிக்காமல் போட்டது, இந்துத்வாவின் வருண சமூகம். உண்ணும் உணவில் ஒருவருக்கு உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டதும், உண்ணும் உணவைக் கொண்டு ஒருவரின் சாதி நிர்ண யிக்கப்பட்டதும், உலகிலேயே இங்கு மட்டும்தான்.

brahmins_321ரத்தக்கண்ணீர் படத்தில் ராதா சொல்வார் - இங்கதான்டா சாப்பிடறதுல கூட ரெண்டு கட்சி வச்சிருக்கான் - என்று. அது கட்சியன்று, சாதி. இரண்டல்ல இரண்டாயிரம். பார்ப்பனர்கள் புலால் உண்ணாதவர்களாம். அதனால் உயர்ந்தவர்களாம். அவர்களைப் பார்த்து சைவப் பிள்ளை, சைவச் செட்டியார், சைவ முதலியார் என ஒரு வரிசை. பெரியார் சொல்வார், "இவனுங்க எல்லாம் ஒன்றரைப் பார்ப்பானுக்குச் சமம்'' வரலாற்றைப் புரட்டினால், புலால் உண்ணும் பழக்கமே எங்கிருந்து, யாரிடமிருந்து வந்தது என்பது புரியும். யாகம் நடத்தி, அந்த யாகத்தீயில் மாடுகளையும், குதிரைகளையும் வெட்டிப்போட்டு, நெய் வழிய வழிய புலால் உண்ட கூட்டம் எது என்பதைப் "புனித வேதங்கள்' புகலும்.

"ரிக்வேதகால ஆரியர்கள்' என்னும் நூலில் ராகுல சாங்கிருத்தியாயன், "அவர்களிலே (ஆரியர்களில்) மாமிசம் உண்ணாதவர்களே எவரும் இல்லை எனலாம். பெரிய பெரிய ரி´கள், முனிவர்களுக்கு விருந்து படைக்க வேண்டுமென்றாலும் புலால் மிகவும் அவசியமான ஒன்றாகும்'' என்று எழுதியுள்ளார்.

"தன் மகன் புலவனாகவும், புகழ்பெற்றவனாகவும், நல்ல பேச்சாளனாகவும், எல்லா வேதங்களையும் படித்தவனாகவும், முழு ஆயுளைக் கொண்டவனாகவும் இருக்க வேண்டுமென விரும்பினால், தாயானவள் நெய்யுடன் கலந்த பொலி எருது அல்லது எருதுவின் மாமிசம் கலந்த சாதம் சாப்பிட வேண்டும்'' என்கிறது பிரகதாரண்ய (6-4-18) உபநிடதம்.

அன்று வாழ்ந்த ஜீவகாருண்ய சீலர் புத்தர் மட்டுமே. "அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின், ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று' என உரைத்தவர் வள்ளுவர் மட்டுமே. மற்ற அனைவரும் மாட்டுக்கறி தின்ற மகானுபாவர்கள் தாம்!

அவர்கள் தின்ற போதெல்லாம், மாட்டுக்கறி என்பது மாமுனிவர்களின் உணவாய் இருந்தது. அதனையே நாம் தின்னத் தொடங்கிய பின், அது அருவெறுக் கத்தக்க உணவாகிவிட்டது. கொல்லாமை அறம் கூறி அன்று பெளத்தமும், சமணமும் மக்களிடம் செல்வாக்குப் பெறுவதை அறிந்த ஆதி சங்கரர், அதனைத் தன் கொள்கையாக வரித்துக் கொள்ள முயன்றார்.

பெளத்தத்தின் பல சிறப்புக் கூறுகளைத் தன் கையில் எடுத்துக்கொண்டு, தன் மதமே அஹிம்சை போற்றும் அரிய மதம் என ஆரவாரம் செய்தார். அதனால்தான்அவரைப் "பிரசன்ன பெளத்தர்' (பெளத்தத்தின் பின்னால் மறைந்து நிற்பவர்) என்று இன்றும் கூறுகின்றனர். இப்படித்தான் பார்ப்பனர்கள் "சைவர்களாக' ஆயினர். அவர்கள் சைவர்கள் ஆனவுடன், அசைவர்கள் ஈனப்பிறவிகள் என்று அறிவிக் கப்பட்டனர்.

அசைவம் என்று சொல் லப்படும் புலால் உண்ணும் பழக்கத் திலும் பல நிலைகள் கற்பிக்கப் பட்டன. ஆடு, மீன், கோழி தின்பவர்கள் சற்று உயர்தரம். "கோமாதா' என்று போற்றப்படும் மாட்டின் கறியை உண்பவர்கள் புலையர்கள், கீழானவர்கள். அவர்களைத் தீண்டவே கூடாது. பன்றிக்கறி தின்பவர்களோ அவரினும் கீழான வர்கள். பூனைக்கறி, நரிக்கறி தின்பவர் கள் எல்லோரும் இழிவானவர்கள்.

எழுதப்படாத சட்டமாக இன்றுவரை நம் சமூகத்தில் இதுதானே நிலவுகிறது? உழைக்கும் மக்கள் மாட்டுக்கறியை விரும்பி உண்பதற்கான காரணம் என்ன? குறைந்த செலவில், நிறைந்த புரதம் அதில் உள்ளது என்பதுதான். வெயிலில் போராடி, வியர்வை சிந்தி உழைப்போர் தங்களுக்குத் தேவையான புரதச் சத்தைப் பெறுவதற்கு அந்த உணவை நாடுகின்றனர். அதிலென்ன குற்றம்? அதிலென்ன அருவெறுப்பு? கோழி, கண்டதையும் தின்கிறது. மீனோ அழுக்கையே ஆகாரமாகக் கொள்கிறது. அவற்றை எல்லாம் தின்னலாமாம். அது நாகரிகமாம். ஆனால், புல், வைக்கோல், பருத்திக்கொட்டை, புண்ணாக்கு ஆகியனவற்றை மட்டும் உண்டு வளரும் பசு மாட்டின் கறி அருவெறுப்பாம். எந்த ஊர் நியாயம் இது! அவாளின் அந்த ஊர் நியாயம்தான்...வேறென்ன?

மேலை நாடுகளில் நூற்றுக்கு தொன்னூறு பேருக்கு மேல், மாட்டுக்கறியும், பன்றிக்கறியும்தான் உண்கிறார்கள். அமெரிக்காவில் வான்கோழிக் கறிதான் சிறப்பு விருந்து. தென் அமெரிக்காவில் குதிரைக் கறியும், அரபு நாடுகளில் ஒட்டகக் கறியும் சாதாரணமானவை. சீனாவில் தவளை, பாம்பு எல்லாம் உணவு வகைகளே. கொரிய நாட்டின் தலைநகரில் (சீயோல்) நாய்க்கறிக்குத் தனி வரவேற்பு உண்டு.

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான உணவுப் பழக்கம் உள்ளது. அவரவரின் தேவை, சுவையைப் பொறுத்ததாகவும், அந்தந்த நாட்டுச் சூழல், பருவநிலைகளைப் பொறுத்த தாகவும் உணவுப் பழக்கம் அமைகின் றது. ஆனால் உணவை வைத்து உயர்வு தாழ்வு எங்கும் கற்பிக்கப்படுவதில்லை, இந்தியாவைத் தவிர.

அதனால்தான், ஜெயலலிதா மாட்டுக்கறி தின்னும் பழக்கமுடையவர் என்று நக்கீரன் எழுதியவுடன், அவர்களின் அலுவலகத்தைக் கல்லால் அடிக்கின்றனர். எங்கள் தலைவியை எப்படி இழிவுபடுத் தலாம் என்கின்றனர்.

இதிலே இழிவு எங்கிருந்து வந்தது. ஒரு வேளை அவருக்கு அந்தப் பழக்கம் இல்லையயன்றால், நக்கீரன் தவறான செய்தி வெளியிட்டதாய்ச் சொல்லி, அதற்குரிய சட்ட நடவடிக்கையை எடுத்துக்கொள்ளட்டும். ஜெயலலி தாவை நக்கீரன் இழிவுபடுத்தி விட்ட தாக ஏன் சொல்ல வேண்டும்?

அப்படிச் சொல்வதன் மூலம், மாட்டுக்கறி தின்பது இழிவு என்று தானே ஆகிறது. அப்படியானால் மாட்டுக்கறி தின்பவர்கள் அனைவரும் இழிவானவர்கள் என்பதுதானே பொருள். அப்படிச் சொல்வது தீண்டாமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் குற்றம் என்பது ஒருபுறமிருக்க, மாட்டுக்கறி தின்னும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை இழிவானவர்கள் என்று சொல்ல எவனுக்கும் உரிமை யில்லை என்பதை உணர வேண்டும்.

மாட்டுக்கறி தின்பவர்கள் அனைவரும் இழிவானவர்கள் என்றால், அந்த இழிந்தவர்களின் வாக்குகள் இனி எங்களுக்கு வேண்டாம் என்று அவர்கள் முதலில் அறிவிக்கட்டும். அதன்பின், நக்கீரன் அலுவலகத்தைத் தாக்கலாம். அப்படித் தாக்குகிறவர்களும், மாட்டுக் கறி சாப்பிடாத "அவாளாகவே' மட்டும் இருக்க வேண்டும் !