ஏப்ரல் மாதம் இடம்பெற்ற வடலூர் துரை.சந்திரசேகரன் அவர்களின் நேர்காணல் தொடர்ச்சி...

நேர்காணல் மு.சி.அறிவழகன்

vadalur durai chandrasekarமாணவர் பருவம் தொட்டு தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியரை நேரில் பார்த்தும் பேசியும் அவர்களின் கட்டளைகளுக்கு ஏற்ப கழகப் பணியாற்றியும் வருகிறீர்கள்; செப்டம்பர் 01-ல் 65வது பிறந்தநாள் கொண்டாட இருக்கிறீர்கள், உங்கள் பிறப்பு முதல் இன்றுவரை தாங்கள் கடந்துவந்த களங்கள் பற்றியும் குடும்ப சூழ்நிலை பற்றியும் பதிவு செய்யுங்களேன்..!

பிறப்பு : 1.9.1954

ஊர் : குறிஞ்சிப்பாடி, கடலூர் மாவட்டம் (பழைய தென்னார்க்காடு மாவட்டம்)

வசிப்பிடம் : வடலூர் (கடலூர் மாவட்டம்)

கல்வித் தகுதி:

         எம்.ஏ (வரலாறு)-அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

         பி.எட் - அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

         எம்.எட் - அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

         பி.எல் - டாக்டர் அம்பேத்கர் சட்டப்

            பல்கலைக்கழகம், சென்னை

         பி.எச்டி - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சை.

பணி செய்த வாய்ப்பு:

         குறிஞ்சிப்பாடி வட்டாரம்-பொன்வெலி கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக 21 ஆண்டுகள்.

         இயக்கப்பணி நிமித்தம் 8 ஆண்டுகள் பணிக்காலம் இருந்தபோதே விருப்ப ஓய்வு பெற்றவர்.

         ஆசிரியர் போராட்டத்தில் கலந்து கொண்டு வேலூர் சிறையில் 15 நாட்கள்.

இயக்கப்பணி:

         இயக்கத்தில் இணைந்த ஆண்டு 1971-72 கலைஞர் மாணவர் சீரணி பணி-கடலூரில் பெரியார் சிலை திறப்பு -1973 லிருந்து தீவிரம்.

         வரவேற்புக்குழுத் தலைவராக இருந்து திராவிட இளைஞர் இன எழுச்சி மாநாடு கடலூரில் நடத்தி ஆசிரியருக்கு எடைக்கு எடை இருமடங்கு நாணயம் வழங்கிய நிகழ்வு.

         கடலூர் அரசு பெரியார் கலை-அறிவியல் கல்லூரியில் புதுமுக வகுப்பு, இளங்கலை பட்டப்படிப்பு படித்தபோது புதியவரவுகளின் (மாணவர்கள்-இளைஞர்கள்) கேந்திரமாக தென்னார்க்காடு மாவட்டத்தில் உழைத்தது.

         பல மாநாடுகள் சிறக்க உழைத்தது.

         பல போராட்டங்கள் பொறுப்பேற்று நடத்தியது.

மறக்கமுடியாத நிகழ்வுகள்:

         தந்தை பெரியார் நடத்திய இன இழிவு ஒழிப்பு மாநாட்டில் பங்கு பெற்றது (சென்னை இருநாட்கள்)

         தந்தை பெரியார் மறைவையொட்டி இறுதி ஊர்வலத்தில் பங்கு பெற்றது.

         அன்னை மணியம்மையார் நடத்திய அஞ்சலகங்கள் முன் அறப்போர் மறியல் குறிஞ்சிப்பாடியில் நான் பங்கேற்று நடத்திய முதல் போராட்டம்.

         அன்னை மணியம்மையார் நடத்திய திருச்சி பெரியார் மாளிகையில் திராவிட மாணவர் பயிற்சி முகாமில் பங்கேற்றது.

         மாணவ பேச்சாளனாக தலைமைக் கழகத்தில் பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப் பெற்றது.

         மாணவனாக தமிழ்த்தலைவர் ஆசிரியருடன் பல நிகழ்வுகளில் பங்கேற்றது.

இயக்கப் போராட்டங்கள்: கழகம் அறிவித்த பெரும்பாலான போராட்டங்களிலும் பங்கேற்று சென்னை, கடலூர், வேலூர் மத்தியச்சிறையில் 9 முறை இருந்த சூழல். டெல்லியில் மண்டலக்குழு அறிக்கை அமுல்படுத்திடக் கோரியும், செயவர்த்தனேவுக்கு கருப்புக் கோடி காட்டும் போராட்டத்திலும் கலந்து கொண்டு கைதானது.

இயக்கப் பொறுப்புகள்:

         கடலூர் கல்லுரி மாணவர் கழகச் செயலாளர்

         மாவட்ட திராவிட மாணவர் கழகத் துணை அமைப்பாளர்

         மண்டலக் கழக மாணவரணி, இளைஞரணிச் செயலாளர்

         மாநில கழக மாணவரணிச் செயலாளர்

         மாநில கழக இளைஞரணிச் செயலாளர்

         மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர், தலைவர்

         மாநில மாணவரணி-இளைஞரணி ஒருங்கிணைப்பு அமைப்புச் செயலாளர்.

         கழக பிரச்சார செயலாளர்களில் ஒருவர்

         கழக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவர்.

         கழக பொதுச் செயலாளர்களில் ஒருவர்.

         இயக்கப் பிரச்சாரத்துக்காக இருமுறை அந்தமான், மலேசியா, சிங்கப்பூர் சென்று பிரச்சாரத்தில் பல நாட்கள் ஈடுபட்டது.

         வட அமெரிக்காவில் தந்தை பெரியார் கொள்கை பரப்பிடும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றது.

         1600க்கும் மேற்பட்ட சுயமரியாதை திருமணங்களை நடத்திவைத்த வாய்ப்பு.

பெற்றோர் : ஆ.துரைக்கண்ணு –பாக்கியம்மாள். அப்பா மந்திரவாதி–, குத்துச்சண்டைவீரர், சாதாரண விவசாயக் குடும்பம்.

உடன் பிறந்தோர்: இருவர். துரைஞானசேகரன் (தம்பி) திராவிடமணி(தங்கை)

வாழ்விணையர் : கலைச்செல்வி

மகன்: அறிவுப்பொன்னி–எழில்வடிவன் (தற்போது வர்ஜினியாவில் உள்ளார்)

எனது குடும்பத்தில் நானும் சாதி மறுப்புத் திருமணம் எனது தம்பியும் அப்படியே. எனது மகனும் அப்படியே.

 கொள்கை வாழ்வில் 100/100 வெற்றி பெற்றுள்ள பெருமிதம். நூற்றுக்கணக்கான இளைஞர்களை இயக்கத்தின் பால் ஈர்த்துள்ள மன திருப்தி. பலருக்கு நல்ல வாழ்க்கை அமைய உதவியதில் மகிழ்ச்சி.

Pin It