subavee london

12.05.2018 மாலை, அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் சார்பில், லண்டன், ஈஸ்ட் ஹாம் பகுதில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு, “அரசியல் அறம்” என்னும் தலைப்பில் தோழர் சுபவீ ஒன்றே கால் மணி நேரம் உரையாற்றினார். தமிழகத்துத் தமிழர்களும், ஈழத் தமிழர்களும் சேர்ந்து பார்வையாளர்களாகக் கலந்து கொண்ட கூட்டமாக அது இருந்தது.

வினா-&விடை நேரத்தில், வீரத்தமிழர் முன்னணி (நாம் தமிழர் அமைப்பின் வெளிநாட்டுப் பிரிவு) நண்பர்கள் சிலர் எழுந்து, சுபவீயையும், திராவிடத்தையும் கடுமையாகத் தாக்கிப் பேசினர். எதிர்க்கருத்தை அங்கு அவர்கள் முழுமையாகப் பேச அனுமதிக்கப்பட்டனர். “திமுக வை ஆதரிக்கும் சுபவீக்கு, அறம் பற்றிப் பேச என்ன தகுதி உள்ளது?’ “திராவிடத்தால் நாம் வீழ்ந்தோமே தவிர, எங்கே எழுந்தோம்?” என்பன போன்ற வினாக்களையும், “வைகோ ஒரு தெலுங்கர்” என்பது போன்ற தம் கருத்தினையும் மிக ஆவேசமாக (அவர்களின் தலைவர் சீமானைப் போலவே) வெளியிட்டனர். திராவிடக் கழகங்கள் இல்லாத தமிழகம் வேண்டும் என்றனர். (பாஜகவும் அதைத்தான் சொல்கிறது!)  

அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட சுபவீ, இடையில் சினம் கொண்டு சிலர் அவர்களை எதிர்க்கத் தொடங்கியபோது சமாதானம் செய்து உட்கார வைத்துவிட்டு, அவர்களின் வினாக்கள் அனைத்திற்கும் விடை சொன்னார்.

அனைவரும் பொறுமையாகக் கேட்டுக் கையொலி எழுப்பினர். இறுதியில் அந்த நண்பர்களும் தோழர் சுபவீயைச் சந்தித்து, நட்பு பாராட்டி விடைபெற்றனர்.

எதிர்க்கருத்துகளுக்கு நம் அரங்கிலே இடம் தந்தோம்! ஆம், பெரியாரின் பிள்ளைகள் நாம்!!

- ஹரிஷ், லண்டன்

Pin It