என்னடா தலைப்ப பார்த்தவுடனே எப்போதும் சொல்ற மாதிரி அந்த காலத்துல இப்படி இருந்தோம் ஆனா இந்த காலத்துல இப்படி இருக்காங்க மட்டும் சொல்லமாட்டோம். இந்த தலைப்பின் கீழ் வித்தியாசத்தை பற்றி பார்க்க போறோம். என்ன வித்தியாசம் கேட்கிறீர்களா? உங்க எல்லோருக்கும் தெரியும் உலகம் எவ்வளவு அதிவேகமாக போயிட்டு இருக்குனு, எல்லாரும் ஒரு நிமிடம் நின்னு யோசிங்க நாம் ஏன் இப்படி அதிவேகமாக போக வேண்டும் என்று, அன்று உலகம் இவ்வளவு வேகமாகச் செல்லவில்லை. மனிதன் மனிதனுக்கு மதிப்புக் கொடுத்து சுயநலமில்லாமல், “வந்தாரை வாழவைப்பவன்” என்று பெயர் எடுத்தான். இன்று உலகம் வேகமாகச் செல்கிறது என்று கூறி மனிதனுக்கே மதிப்பில்லாமல் சுயநலமோடு சென்று தமிழனின் பெயரைக் கெடுக்கிறாய். அன்று யாரிடமும் கைபேசி (Android, Tab) இவை எல்லாம் இல்லை, ஆனாலும் மக்கள் மக்களோடு கலந்து மகிழ்ச்சியோடு இருந்தனர். ஆனால் அதற்கு தலைகீழாக இன்று ஒரு மனிதனின் சந்தோஷம் வெறும் ஒரு கைபேசியில் அடங்கிவிட்டது. அன்று விவசாயத்திற்கு மதிப்பு கொடுத்து வாழ்ந்தனர். இன்றோ! ஒரு இடம் கிடைத்தாலும் அதை விற்கத் தான் பார்க்கிறார்கள். அது விவசாய நிலமே ஆனாலும் சரி அதை விற்று பணம் சம்பாதிக்கீறார்கள்.

நாகரிகம்

நாகரிகம் வளர்ந்து விட்டது எனக் கூறி ஒவ்வொருவரும் உடுத்தும் உடைகள், பார்க்க பிச்சை எடுப்பவர்கள் போலவே காட்சியளிக்கிறார்கள். பிச்சை எடுப்பவர் கூட அடக்கஒடுக்கமாக துணி அணிந்து இருப்பர். ஒரு துணி கிழிந்து விட்டது என்றால் நாம் தூக்கித் துர போடுகிறோம். அதே துணி (கிழிந்த துணி) கடையில் பார்த்தால் fashion என்று கூறி வாங்குகிறோம். இது தான் இன்றைய நிலைமை ஆனால் அன்று மானம் காக்க தான் ஆடை, அந்த ஆடை சற்று கிழிந்தாலும், தன் உயிரைக் கூட மாய்த்துக் கொள்வர் ஏனென்றால் மானத்திற்கு அவ்வளவு மதிப்பு கொடுத்தனர். ஆனால் இன்றோ மானம் என்றால் என்ன? எந்த கடையில் விற்கிறது? என்று கேட்கும் நிலைமைக்கு வந்துவிட்டது இந்த உலகம் என்ன ஒரு கேவலமான உலகம் இது. கற்பு பறிபோனால் உயிரை விட்ட பெண்கள் எங்கே? கற்பை தினமும் குடிபோதையில் இழக்கும் பெண்கள் எங்கே? நாகரிகம் அப்படியே தான் இருக்கிறது. நாம் தான் மாறுகிறோம் என்று கூறிக் கொண்டு இருக்கிறோம். அன்றோ! குழந்தைகள் ஓடி ஆடி விளையாடினார்கள். இன்றோ அனைவரும் ஆன்ட்ராய்டு மொபைலைக் கொடுத்து நாமே நம் குழந்தையின் மூளை வளர்ச்சி IQ போன்றவற்றை குறைக்கின்றோம்.

உணவு

எந்த உணவு நல்லது மற்றும் சத்துக் கொடுக்கக் கூடியது அனைவரும் களி, கம்பு போன்றவற்றை கேள்விப்பட்டதுண்டா. ஆம் அன்று சத்தான உணவு என்று களி, கம்பு சோளத்தைக் கூறுவார்கள். ஆனால் இன்றோ அனைத்தையும் Plastic cover ஆல் போட்டுக் கட்டி வைத்துவிடுகின்றனர். அதையும் நம் மக்கள் வாங்கி Instant உணவு என்று சாப்பிடுகின்றனர். இதெல்லாம் எவ்வளவு கெடுதல் என்று தெரியுமா? Plastic cover ஆல் கட்டிய பொருட்களில் CO2 Gas மற்றும் உயிரைப் பறிக்கக்கூடிய விஷமும் கலக்கும் ஆனால் நம் கண் பார்வைக்கு தெரியாது. Plastic cover ஆல் கட்டிய பொருட்கள் ஏழு நாட்கள் மேல் போனால் அது விஷத்திற்கு சமம் ஆனது. அனைவரும் தயவுசெய்து நல்ல உணவை சாப்பிடுங்கள். அன்றோ பெண் என்பவளைத் தெய்வமாக மதித்தனர். அவளை மறு உயிர்க் கொடுப்பவள், குல தெய்வம் என்றெல்லாம் அழைப்பர். அப்படிப்பட்ட தெய்வத்தை காக்க ஆண்கள் தன் உயிரைக் கூட விட தயார் ஆக இருப்பார்கள். அந்த தெய்வத்திற்கு ஏதாவது மானபங்கமோ! அல்லது அவளைக் கற்பழிக்க முயற்சி செய்தாலோ அவன் உயிர் கொடூரமான வழியில் இழக்க நேரிடும்.

இன்றோ! சற்று யோசிங்கள் அப்படிப்பட்ட ஆண் இவ்வுலகில் நூற்றில் ஒருவனோ (அ) ஆயிரத்தில் ஒருவனோ தான் இருப்பான். இன்றைய சூழ்நிலையில் ஒரு பெண் காலையில் வெளியே சென்று மாலையில் வீடு திரும்புவதே ஒரு உலக அதிசயமாக உள்ளது. இப்போதெல்லாம் ஒரு பெண்ணுக்கு ஆசைப்பட்டு, அந்த பெண் கிடைக்கவில்லை என்றால் அவளைக் கொலை செய்தல் கற்பழித்தல், உடம்பில் உள்ள அங்கங்களை வெட்டி தனித்தனியாக தூக்கி எறிதல் மற்றும் அவளை உயிரோடு எரித்தல் போன்ற நிகழ்வுகள் நடக்கிறது. சரி ஒரு பெண் வெளியே சென்று வீடு திரும்புவதற்குள் இவ்வளவு நடக்கிறது.

அதே போல் வீட்டிலும் அவள் பயந்து பயந்து இருக்க வேண்டிய நிலைமை, ஏனென்றால் இப்போதெல்லாம் பெத்த பெண்ணை கற்பழிக்கக்கூடிய தந்தைகளும் உறவினர் என்று சொல்லி, அவளை கற்பழிக்க இருப்பார்கள் (அ) அவளின் ஆபாச போட்டோக்களை காண்பித்து அவளை வற்புறுத்துதல் ஒரு பெண் இது எனக்கு வேண்டும் என்று கூறினால், உனக்கு அது வேண்டும் என்றால் என்னோடு உல்லாசமாக இரு என்று கூறுவதும் அதையெல்லாம் செய்தித்தாள்களில் பார்த்தால் இவ்வுலகை அழித்து மீண்டும் ஒரு புது உலகை உருவாக்க மாட்டானா என்றெல்லாம் தோன்றும். சமீபத்திய செய்திகளைப் பாருங்கள் ஒரு ஆண் ஒரு பெண்ணை குத்திவிட்டான். காட்டுத் தீ பரவும் அபாயம், விலைவாசி ஏறுதல் இறங்குதல்.

இதையெல்லாம் பார்த்தால் நமக்கே வெறுப்பாகிவிடும் ஆதலாம் மக்களே !

  • பெண்களைக் காக்க உதவுங்கள்.
  • சிறிது தூரம் செல்ல வேண்டும் என்றால் மிதிவண்டியோ (அ) நடைபயிற்சியோ மேற்கொள்ளுங்கள்.
  • நல்ல உணவைச் சாப்பிடுங்கள்.
  • குழந்தைகளை நன்கு விளையாடவிடுங்கள், அவர்களையும் நம்மைப் போல், போன் அடிமை ஆக வழி விடாதீங்க.
  • உடைகள் மீது கவனம் தேவை.
  • உலகம் வேகமாகச் செல்கிறது என்று சொல்லாதீங்க! நாம் தான் வேகமாகச் செல்கிறோம்.
  • மனிதனுக்கு உதவி தேவைப்பட்டால் செய்யுங்கள் அது அவன் உயிர் போகும் நிலைமையில் இருந்தாலும் சரி.
  • மனிதனுக்கு மனிதன் மதிப்பு கொடுங்க
  • விவசாயத்தைக் காப்போம் மக்களே!
Pin It