கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

நமது பொது திட்டம் என்ற இந்த ஆவணம் மார்க்சிய-லெனினிய-மாவோவிய தத்துவ வெளிச்சத்தில் தமிழக விடுதலையை முன்னெடுக்கும் நோக்கத்தில் தொகுக்கப்படுகிறது. இதில் முதலில் மிக சுருக்கமான சமூக வரலாறும் பின்னர், தற்கால நிலைமைகளைப் பற்றிய ஆய்வும் நமது பொது திட்டமும் முன்வைக்கப்படுகிறது.

தமிழகம் உலகின் மிகவும் தொன்மை யான வரலாற்றைக் கொண்டது. மக்களால் பேசப்படும் தொன்மையான மொழி களில் தமிழும் ஒன்று. தமிழகத்தின் வர லாறு தனக்கே உரிய தனிச் சிறப்பை கொண்டதாக இருந்தாலும் இந்திய துணைகண்ட வரலாற்றுடன் பின்னிப் பிணைந்தும் உள்ளது. தமிழக வரலாற்றின் முக்கிய கூறுகளின் சாராம்சத்தை புரிந்துக் கொள்ள இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை தெரிந்துக் கொள்வது முக்கிய அறிவுடைமையாகும்.

எனவே, முதலில் இந்திய துணை கண்ட வரலாற்றைச் சுருக்கமாக பார்ப்போம்! பின்னர் தமிழ்த்தேசிய திட்டத்தில் தமிழக வரலாற்றின் சுருக்கத்தைப் பார்ப்போம்!

புதிய கற்காலம் 

இந்திய துணைக்கண்டத்தை பொருத்த வரை புதிய கற்காலம் என்பது உலகின் மற்ற பகுதிகளில் ஏற்பட்டதைப் போன் றே அனைத்துவிதமான சிறப்பான கூறு களையும் கொண்டதாக இருந்தது. அதாவது, உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியானது கால்நடை வளர்ப்பு, வேளாண்மை, கைவினைத் தொழில்கள் என்று வரலாற்றின் தொழிற்புரட்சியின் முதல் கட்டமாகும். உலோகப் பயன்பாட்டின் கண்டுபிடிப்புகள், அறிவியல் வளர்ச்சி யின் அடிப்படைகள் பெரும்பாலும் இக்கால கட்டத்திலேயே கண்டுபிடிக்கப் பட்டன. வரலாற்றில் முதல் முதலில் கிராமக் குடியேற்றங்கள், நகர்ப்புற உருவாக்கம் போன்றவைகள் இக்கால கட்டத்திலேயே நடந்தன. இந்திய துணைக்கண்டத்தில் மனிதகுல நாகரிகத்தின் நுழைவுவாயிலாக இக்கால கட்டம் திகழ்ந்தது.

ஆயினும், இந்த நாகரிக மாற்றங் கள் ஒரே காலத்தில் ஒரே மாதிரியாக இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் நடைபெறவில்லை. அக்கம்பக்கமாக ஏற்றத்தாழ்வுடனேயே வளர்ச்சிப் பெற்றன. இத்துணைக் கண்டத்தில் தாமிர-கற்காலமே பொதுவாக நிலவிய உலோகப் போக்காகும். அதே சமயத்தில் சிந்து சமவெளி நாகரிகம் என்பது வெண்கல கால நாகரிகமாகும். தெற்கும் கிழக்கும் நேரிடையாகவே தாமிர கற்காலத்திலிருந்து இரும்புக் காலத்தை (பெருங்கற்காலம்) அடைந்தன. தாமிர-கற்காலத்தை பொருத்தவரை கிராம-வேளாண் நாகரிகம் என்பதே இதன் முக்கிய அம்சமாகும். சிந்து சமவெளி நாகரிகம் நகர நாகரிகமாகும். கைத்தொழி லும் விவசாய வளர்ச்சியும் வணிகத்தை முதன்மையாக கொண்டிருந்தன.

இப்புதிய கற்காலக் கட்டத்தில் ஏற் பட்ட இந்த வேற்றுமைகளும் ஏற்றத் தாழ்வான வளர்ச்சியும் இன்றைய இந்தியா வரை தொடர்கின்றது.

பண்டைய இந்தியா 

இந்தியத் துணைக் கண்டத்தை பொ ருத்தவரை பண்டைய காலம் என்பது வர்ணம் அல்லது சூத்திரவுடைமை (அ) பண்டைய பிராமணீய காலக்கட்ட மாகும். அதாவது, ஆரியர்களின் பண் டைய வேதகாலத்தில் (ரிக்) இந்திய துணைக் கண்டத்தில் சாதி நிலவுடைமை உருவான காலம் வரையிலும் ஆகும். இது சுமார் கி.மு. 1200லிருந்து கி.பி. 300 வரையிலும் ஆகும். இது வடக்கு மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் உருவானது.

வர்ணத்தின் தோற்றமும் வளர்ச்சியும் நான்கு காலகட்டங்களையும் மூன்று கட்டத் தன்மைகளையும் கொண்டதாக இருந்தது.

முதல் காலகட்டத்தில் (ரிக்வேதம் கி.மு 1200-1000) படைவீரர்கள், புரோகி தர்கள், சாதாரண மக்கள் என்று மூன்று வர்ணமே குறிப்பிடப்பட்டது. இதுவும் வேலைப்பிரிவினை அடிப்படையிலேயே இருந்தன. ஒரே குடும்பத்தில் வேறுபட்ட வர்ணங்களைக் கொண்டிருந்தவர்கள் இருந்தனர். போரில் பிடிக்கப்பட்ட வர்கள் வீட்டு அடிமைகளாக்கப்பட்ட னர். இவர்களே சூத்திரர்களாக்கப்பட்ட னர். போரில் கொள்ளை அடிக்கப் பட்டவை ஏற்றத் தாழ்வாக பகிரப் பட்டன.

இரண்டாவது கால கட்டத்தில் (கி.மு.1000-600) இரும்பானது போருக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தப்பட்டது. மேய்ச்சல் சமூகத்திலிருந்து நிலைத்த சமூகம் உருவானது. வர்ணம், திட்ட வட்டமான வடிவத்தை பெற்றது. சத்திரியர், பிராமணர், வைசியர் என்று மூன்று வர்ணங்களும் சூத்திரர்கள் நான்காவது வர்ணமாக வீட்டு அடிமை களாகவும் இருந்தனர்.

வைசியர்களே திறை செலுத்துபவர்களாக இருந்தனர். இவர்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள பிராமணர்கள், கருத்தியல் ரீதியாக அணுகினர். வைசியர்களுக்கு பூணூல் அணியும் உரிமையையும் வேதங் கள் ஓதும் உரிமையையும் அளித்து சமா தானப்படுத்தினர். ஆனால், சூத்திரர்களுக்கு இவ்வுரிமைகள் மறுக்கப்பட்டன. பெண்களுக்கும் மறுக்கப்பட்டது. பெண்களுக்கு மற்ற உரிமைகளும் மறுக்கப்பட்டு பெண்ணடி மைத்தனம் நிலைநாட்டப்பட்டது. தந்தையாதிக்க குடும்ப முறை உருவானது.

பிராமணர்கள் யாகங்களில் வரும் வருமானம் காரணமாக இக்கட்டத்தில் ஆயுட்காலமாக இருந்த வர்ண வேலைப் பிரிவினையை பரம்பரையாக்க முயற்சி செய்தனர். மேலும் இவர்களின் பேராசை காரணமாக யாகங்களில் கால்நடைகள் அழிக்கப்படுவது உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருந் தது. மேலும் இவர்கள் தாங்களே மேலா னவர்கள் என்ற கருத்தியலை உருவாக்க முயற்சி செய்தனர். இக்காரணங்கள் பிரா மண-சத்திரிய வர்க்கங்களின் (வர்ணங்களின்) மோதலாக வெடித்தது.

மூன்றாவது கட்டத்தில் (கி.மு. 600-200) மகத, மௌரிய பேரரசுகள் உருவாக் கம் பெற்றன. சத்திரியரான புத்தரும் புத்தமதமும் இக்கால கட்டத்தில் சூத்திர நிலவுடைமைச் சமூக உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றினர். யாகங்களை எதிர்த்துக் கால்நடைகளை உற்பத்தியில் ஈடுபடுத்தினர். இனக்குழுக்களின் சண் டைகளை நிறுத்தி பேரரசில் கலக்க வைத்து உழைப்புச் சக்தியை பலப்படுத் தினார். போர்களில் பிடிக்கப்பட்ட வர்கள் உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டு சூத்திரர்களாக்கப்பட்டனர். சூத்திரர்கள் மூன்று வர்ணத்திற்கும் சொத்தாக்கப் பட்டனர். சூத்திரர் மீதே சுரண்டலின் குவிப்பு இருந்தது. வைசியர்கள் வரிகட்டு பவர்களாக இருந்தனர்.

நிலத்தில் தனி உரிமையும் அதே சமத் தில் அரசின் ஏகபோகமும் இருந்தன. புத்த துறவிகள் மற்றும் பிராமணர்கள் மூலம் கிராமங்கள் நெறிபடுத்தப்பட்டது.

அசோகரின் யாகங்களுக்கான தடை என்பது பிராமணர்களின் செல்வக் குவிப்பை தடுத்து நிறுத்தியது. இது சுமார் 140 ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. இது வர்ண சமூகத்தில் யாகங்களைச் செய்யும் வேலையை பிராமணர்களுக்கு இல்லாத தாக்கியது. அதே சமயத்தில் இக்கட்டத் தின் கீழ் வர்ணங்களான வைசியர் மற்றும் குறிப்பாக சூத்திரர்கள் மீதான சுரண்டல் பன்மடங்கு பெருகியது. போர் நிறுத்தம் பெற்றதானது புதிய சமூக உருவாக்கத்தை பாய்ச்சல் முறையில் விரைவுபடுத்தியது.

மையப்படுத்தப்பட்ட அரசு, மைய அரசிற்கான நிரந்தரமான மாபெரும் இராணுவம், மையப்படுத்தப்பட்ட அரசு நிர்வாகம் என்பது மகத அரசின் குறிப்பாக மௌரிய பேரரசின் காலத்தை முந்திய சிறப்பம்சமாகும்.

புத்தரின் நெறிகள் காரணமாகவே, முழுவதுமாக தனியுடைமையாகாமல், அரசு நிலவுடைமை, அரசு ஏகபோகம், நலன்புரியும் அரசு போன்ற உலகின் முன்மாதிரிகள் உருவாகõயிருக்கலாம்.

பிராமணர்கள் இயல்பாக உருவான வர்ண பிரிவினையை தங்களது சுய நலத்திற்காக பரம்பரையாக நிரந்தர மாக்கவும், யாகங்களின் மூலம் தங்க ளின் பேராசைக்காக உற்பத்திச் சக்திக ளை அழிக்கவும் செய்த பிற்போக்குத் தனங்களால் இக்கட்டத்தில் வீழ்ச்சி யுற்றனர்.

புத்தரின் நெறிகள் தொடக்கத்தில், சமூகத்தில் வளர்ந்துக் கொண்டிருந்த தனி உடைமைக்கெதிராகவும், மீண் டும் தொல்குடி பொதுவுடைமையை நிலைநாட்டும் பின்னோக்கிய நோக்க மே இருந்தது. பின்னர், அதே தனி உடைமையை நிலை நிறுத்தும் பணி யை சிறப்பாக செய்த வரலாற்று சுயமுரணைக் கொண்டதாக மாறி யது. அதாவது, இயல்பாகவே உற்பத் திச் சக்திகளின் அழிவைக் காப்பாற்ற அவர் பிராமணர்களுக்கு எதிராகத் தொடுத்த தாக்குதலும், இனக் குழுச் சண்டைகளை நிறுத்தி, அவர்களை பேரரசில் கலக்கவைத்து, சமூக உற்பத் தியில் ஈடுபாடு வைத்ததன் மூலம் ஒரு பண்பு ரீதியான சமூக மாற்றத்திற்காக அதாவது, நிலவுடைமைச் சமூக மாற்றத்திற்கான செயலைச் செயóத தன் மூலம் ஒரு புரட்சிகரப் பாத்தி ரத்தை ஆற்றியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும் பொ ழுது, இக்காலகட்டத்தில் ஏற்றத்தாழ் வான பகிர்வு, இனக்குழு வாழ்க்கை முறை, குடியரசுகள் என்பதிலிருந்து முற்றிலுமாக மாறி, மையப்பட்ட அரசு, மிகத் திட்டவட்டமான வர்க் கங்களின் இயக்கம், நிலவுடைமை உற்பத்தி முறை என்று சமூகம் பண்புரீதியான மாற்றத்தை அடைந் தது.

நான்காவது கட்டத்தில் (கி.மு. 200-கி.பி. 300) மையப்படுத்தப்பட்ட அரசு நிர்வாகமும் இராணுவமும் கடும் பொரு ளாதார சுமையை பேரரசுக்கு ஏற்படுத் தின. எல்லைப்புற பகுதிகளில் தனி அரசுகள் உருவாயின. இத்தகைய நெருக் கடியான சூழ்நிலையை பயன்படுத்தி சுமார் 140 ஆண்டுகள் தங்களது மேலாதிக் கத்தையும் வருமானத்தையும் இழந்தி ருந்த பிராமணர்கள் தங்களது ஆதிக்கத் தை மீண்டும் நிலை நாட்டினர். கி.மு. 185ல் மௌரிய அரசனான பிரிஹத்ரதன் என்பவரின் தளபதியான புஷ்யமித்திர சுங்கன் என்ற பிராமணன் அரசனை பகிரங்கமாகவே படுகொலை செய்து ஆட்சியை கைப்பற்றினான்.

இவனின் ஆட்சிக் காலத்திலேயே மனு தர்மம் முதலில் வெளியிடப்பட்டதாகக் கருதப்படுகிறது. சுங்கர்களுக்கு பிறகு ஆட்சிபீடமேறிய கன்வர்களும் பிராம ணர்களே. இவர்கள் மட்டுமல்லாமல் சாத்வாகன அரசர்களும் தங்களை பிராமணர்களாக அறிவித்துக் கொண்டனர். மீண்டும் யாகங்கள் நடத்தப்பட்டன. இது பிராமணர்களுக்கும் சத்திரியர் களுக்குமான கடும் மோதலாகவே இருந் தது. வைசியர்கள் மற்றும் சூத்திரர்களின் கலகங்களும் கிளர்ச்சிகளும் இவர்களை தங்களுக்குள் சமரசம் காண நிர்ப்பந்தித்தது.

மேலும், வர்ணம் மூன்றாவது கட்டத் தன்மையை அடைந்தது. கடந்த கட்டத் தில் போராட்டத்தில் இருந்த பரம்பரை வேலைப்பிரிவினை என்பது இக்கட்டத் தில் மனுதர்மத்தின் மூலம் கடுமையாக நிலைநாட்டப்பட்டது. இதன் மூலம் பிராமணர்கள் தங்களின் மேலாதிக்கத்தை நிறுவினர்.

சாத்வாகனர்களின் ஆட்சியிலேயே முதன் முதலில் பிராமணர்களுக்கு நிலங் கள் மானியமாக அளிக்கப்பட்டது. இது மெல்ல அனைத்து பகுதிகளுக்கும் பரவி யது. இது பிராமணர்களுக்கு முற்றுரிமை யாக அளிக்கப்பட்டது.

இந்நூற்றாண்டுகளில் வணிகம் உச்சக் கட்டத்தை அடைந்தது. தென்னகம் மிகவும் செழிப்பாக இருந்தது. குறிப்பாக, சேர, சோழ, பாண்டியர்களின் ஆட்சி பகுதியில் வணிகம் உச்சத்தை அடைந் தது. ரோமில் வணிகம் தடை செய்யப் பட்டது போன்ற பல்வேறு காரணங் களால் வணிகம் கி.பி. 3ம் நூற்றாண்டில் வீழ்ச்சியுற்றது. பெருவாரியான மக்கள் கிராமங்களை நோக்கி நகர்ந்தனர்.

மொத்தத்தில் இக்கட்டத்தில் நடந்த கீழ்கண்ட காரணங்களால், பிராமணர்ளுக்கும் சத்திரியர்களுக்கு மான மோதலும் வைசியர்கள் மற்றும் சூத்திரர்களின் கிளர்ச்சிகளும் ரோமின் வணிகத் தடையால் வணிகம் வீழ்ச்சியுற்றதாலும் சூத்திர-நிலவுடைமைச்சமூகம் வீழ்ச்சியுற்றது.

இடைக்கால இந்தியா

சாதி நிலவுடைமைச் சமூகம் (அ) இடைக்கால பிராமணீயம்

மௌரியர்களுக்கு பிறகான குஷான மற்றும் சாத்கவாகனர்களின் அரசுகள் வீழ்ச்சியடைந்தன. ரோம் உடனான வணிகம் தடைபட்டதானது கடும் சமூக நெருக்கடியை கொண்டு வந்தது. நகரங் கள் வீழ்ச்சியடைந்தன. கைவினைஞர்கள் கிராமங்களை நோக்கி திரும்பினர். மேலும் சூத்திரர்களின் கலகங்கள், வர்ணக் கலப்புகள் என்று குழப்பங்கள் நிலவின.

இவை மீண்டும் குப்தப் பேரரசு (கி.பி. 335-455) உருவான பிறகே சரிசெய்யப் பட்டன. இது பின்னர் வந்த ஹர்ஷ வர்த்தனர் ஆட்சியிலும் தொடர்ந்தது. பிராமணர்களுக்கு நிலங்கள் மானியமாக பகிர்ந்தளிக்கப்பட்டது. இதுமட்டுமல்லா மல் அதிகாரிகள், படைத் தலைவர்களுக் கும் நிலங்கள் மானியமாக அளிக்கப் பட்டன. பரவலாக புதிய நிலங்கள் பெருவாரியாக கொண்டு வரப்பட்டதால் பெருவாரியான உழைப்புச்சக்திகள் உள் வாங்கப்பட்டனர்.

வர்ண முறைக்கு பதிலாக சாதி (குல அடையாளமாக இருந்த) மாற்றம் பெற்றது. பரம்பரை வேலைப்பிரிவினை, அக மணமுறை, பிராமணர்களால் முத லில் கடைபிடிக்கப்பட்ட தீட்டு படிப்படி யாக அனைவரும் கடைப்பிடிப்பதாக மாறியது.

வேலைப்பிரிவினை, வர்ணகலப்பு, புதியதாக போரில் இணைக்கப்படும் இனக்குழுக்கள் இவைகளே சாதிக ளாக பகுக்கப்பட்டன.

இவைகளுக்கு வர்ண அடிப்படையில் படிநிலைத்தகுதி பிராமணர்களால் வழங் கப்பட்டன.

வர்க்கங்களே வர்ணங்களாக இருந் தன. ஆனால், சாதிமுறையில் ஒவ் வொரு வர்க்கமும் பல சாதிகளாக பிளவுகளுக்கு உள்ளாகின. நுண் பிளவு வர்க்கங்கள் அல்லது பிளவுற்ற வர்க்கங் களின் சமூகமாக மாறியது. சாதி அடிப்படையிலான இந்த நிலவுடைமை முறை சுயசார்பு கிராமச் சமூகத்தை கட்டி அமைத்தது. அரசனுக்கு 4ல் ஒரு பங்கு அல்லது 6ல் ஒரு பங்கு வரிசெலுத்தப் பட்டது. மற்றவை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. ஒவ்வொரு சாதõக்குமான பங்கும் தீர்மானிக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டன. இது கடும் ஏற்றத்தாழ்வையும் மனிதாபிமானமற்ற கொடுர சுரண்டலையும் கொண்டதா கவே இருந்தது.

சாதிய நிலவுடைமை முறையிலேயே நிலக்கிழாரியம் உருவானது. நில உடை மையாளர்களே அதாவது சாதிய நிலக் கிழார்களே இடைநிலை ஆளும் வர்க்கங் களாக இருந்தனர். கடந்த கால கட்டங் களில் அனுபவ உரிமையாகவே இருந்த நிலம் இக்கட்டத்தில் விற்கவும் வாங்கவும் படிப்படியாக உரிமைகள் வழக்கத்தில் வந்தன. முதலில் அரசனின் மேற்பார்வை யிலிருந்து பிராமணர்கள் மற்றும் அதி காரிகளின் மேற்பார்வைக்காக மாறியது.

கருத்தியல்ரீதியாக வேலையை பிராமணர்களே மேற்கொண்டனர். கடந்த காலகட்டத்தில் யாகங்களில் அதிக அளவில் ஈடுபட்ட பிராமணர்கள் அவற்றை நிறுத்திக் கொண்டனர். சைவத்தை மேற்கொண்டனர். பௌத் தத்தின் முக்கிய கூறுகளை உள்வாங்கிக் கொண்டனர். கர்மவிதியின் மூலம் சாதியத்தை நிலைநாட்டினர். இதற்கு மாறாக, பௌத்தம் பிராமணியத்தின் கூறுகளை உள்வாங்கி பின்னோக்கி சென்றது.

ஒரு பக்கம் அடக்குமுறையின் மூலம் சாதியத்திற்கெதிரான எதிர்ப்புகளை நசுக்கியும் மறுபக்கம் கருத்தியல்ரீதியாக தலைமுறைகளை கடந்து கர்ம விதியை காட்டி ஏற்றுக் கொள்ளச் செய்ததிலும் பிராமணியம் வெற்றிக் கண்டது. ஒவ் வொரு மனிதனுமே சாதியத்தை இரா ணுவ வீரன்போல் கட்டிக் காத்துக் கொண்டுவரும் அளவுக்கு கெட்டித் தட்டிபோனது. ஆளும் வர்க்கங்கள் மாறிய பொழுதும் கீழ்மட்டத்தில் எந்த மாற்றமும் இன்றி கிராமச் சாதி சமூகம் தொடர்ந்து கொண்டே இருந்தது.

முதலில் சண்டாளர்கள் (குற்றம்புரிந் தோர், கிராமச் சமூகத்திற்குள் வராதோர்) மீது தீண்டாமை கடைபிடிக்கப்பட்டது. பின்னர், தொழில்களில் இழி தொழில்கள் என்று பிரித்து தீண்டாமை சாதிகளாக்கப் பட்டன. இது கடைசிகால கட்டங்களிலேயே மிக மோசமாக இறுகியது.

இக்கட்டத்தில்தான் பெண்ணடிமைத் தனம் உச்சத்தை அடைந்தது. மேல்வர்ண சக்திகளைச் சேர்ந்த பெண்களுக்கு உழைப்பு மறுக்கப்பட்டது. கணவன் இறந்த பிறகு உடன்கட்டைக்கு பணிக் கப்பட்டனர். ஆனால், அதே சமயத்தில் புராணங்களை கேட்கவும் கடவுளர்களை வழிபடவும் அனுமதிக்கப்பட்டனர். சூத்திரச்சாதிகளுக்கும் இக்கட்டத்தில் புராணங்கள் கேட்கவும், கடவுளர்களை வணங்கவும் உரிமை வழங்கப்பட்டது.

சாதி நிலவுடைமை இந்திய துணை கண்டத்தின் பெரும்பகுதியில் பரவியது. தென்னகத்தில் முதலில் பல்லவர்கள், மற்றும் பாண்டியர்கள் என்று தொடங்கி பிற்கால சோழர்கள் ஆட்சியில் தென்னகம் மட்டுமல்லாமல் இலங்கை மற்றும் கடல்கடந்தும் பிராமணீயம் கப்பலேறி யது. அதனால்தான், இந்துத்துவ கும்பல் குப்தர்கால ஆட்சியையும், சோழர்களின் ஆட்சியையும் இந்தியாவின் பொற்காலம் என்று கூறுகின்றனர். சாதி-நிலவுடைமை சமூகத்திற்குள் இனக்குழுக்களை கட்டாய மாக இணைப்பது என்பது பிரிட்டிஷ் ஆட்சிவரை நீடித்தது.

மொகலாய ஆட்சியில் ஜாகிர்தார், ஜமின்தார் வடிவங்களில் பழைய சாதி-நிலவுடைமை முறையே தொடர்ந்தது. கிராம சுயதேவையை சார்ந்தே கைத் தொழில்களும், குடிசைத் தொழில்களும் இருந்தன. சாதிய சமூகத்தில் மறுக்கப் பட்ட கல்வியும், மறுக்கப்பட்ட சுதந்திர சிந்தனையும் சுதந்திரமான தொழில் வளர்ச்சியை கட்டவிழ்த்து விடவில்லை. வணிகர்களும் தங்களின் ஆதிக்க சாதி சிந்தனையிலிருந்து உற்பத்தியாளர் களுக்கு தங்களை சார்ந்திருக்கும் அடிமைத் தன்மையை உருவாக்கவே செய்தனர்.

இருப்பினும், மொகலாய ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் நிலவுடைமை கருவி லிருந்து முதலாளித்துவம் வளரத்தொடங் கியது. எளிய சரக்கு உற்பத்தியும், முதலாளிய பட்டறை உற்பத்தியும் தோன்றி வளர்ந்தன.

அதாவது, சில முதலாளிய பண்ணை கள், கூலிக்கு வேலைக்கமர்த்தல், நுகர் பொருள் உற்பத்தி, சந்தைக்கான கை வினைஞர்களின் உற்பத்தி என்ற கிரா மங்களில் எளிய சரக்கு உற்பத்தி வளர்ச்சி யுற்றது.

பருத்தி, பட்டு, உலோகத் தொழில், கப்பல் கட்டுமானம், சுரங்கத்தொழில் போன்றவைகளில் முதலாளியப்பட்டறை உற்பத்தி தோன்றி வளர்ந்தன.

மிகப்பெரிய நகரங்களும், சுமார் 3000க்கும் மேற்பட்ட பரிவர்த்தனை மையங்களும் உருவாயின. இந்திய துணைகண்ட வரலாற்றில் மீண்டும் நகரங்கள் எழுச்சியுற்றன.

கடுமையான வரிவசூல் உழவர்களின் கலகங்களுக்கு வித்திட்டன. இது உழவர் கள் கிராமங்களை விட்டு வெளியேறும் தன்மையை தோற்றுவித்தது. இவை சாதிய நெகிழ்வையும் உருவாக்கின. இவை சமய சீர்திருத்த இயக்கங்களை உருவாக்கின. சத்னாமிகள் மற்றும் சீக்கி யர்களின் ஆயுத புரட்சியும் நடை பெற்றன.

மேற்கண்டவைகள் அனைத்தும் பிற் போக்கு சாதி நிலவுடைமை சமூகத்தை தூக்கியெறிந்து, அதன் கருவிலே வளர்ந்த முதலாளித்துவ பட்டறை உற்பத்தியி லிருந்து பண்பு ரீதியான பாய்ச்சலை அடையவேண்டிய இயல்பான வரலாறு தலைகீழாக புரட்டப்பட்டது. அது கிழக் கிந்திய கம்பெனியால் நடத்தப்பட்டது.

நவீன இந்தியா

. பிரீட்டீஷ் இந்தியா

உள்ளூர் (தேசிய) முதலாளிகள் தலைமையிலான அமெரிக்க விடுதலைப் போர் மற்றும் பாட்டாளிகள் தலைமை யிலான பாரிஸ் கம்யூன் இரண்டுமே உலக முதலாளிகளுக்கு மிகப் பெரும் படிப்பி னைகளைத் தந்தன. அதாவது, காலனிய பகுதிகளில் சுதந்திரமான முதலுடைமை உற்பத்தியை உருவாக்கக் கூடாது; அவ் வாறு உருவாக்கும் பட்சத்தில் வளரும் உள்ளூர் முதலுடைமையான தேசிய முதலுடைமையும் அது உருவாக்கும் நவீன வர்க்கமான பாட்டாளி வர்க்கமும் தங்களை தூக்கியெறியும் என்ற படிப் பினைதான் அது. மேலும் ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி போன்ற நாடுகளில் நிலக்கிழாரியத்துடன் சமரசம் செய்துக் கொண்டே படிப்படியாக முதலுடைமை உற்பத்தி கட்டியமைக்கப் பட்டது.

மேற்கண்ட படிப்பினைகள் முழுமை பெறுமுன்பே பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி இந்தியத் துணைக் கண்டத்தில் இயல்பாக வளர்ந்த பட்டறை முதலுடை மையை அழித்தது. அதற்கு பதிலாக தனக்கு கட்டுப்பட்ட வணிக மூலதனத் தையும் பின்னர் தொழில் மூலதனத் தையும் அனுமதித்தது. இதனால், இந்தி யாவில் வளர்ந்த முதலுடைமையின் தன்மை நிதிமூலதன (ஏகாதிபத்திய) சார்பு (அ) கூட்டு என்பதாகவே உருவானது. ஆனால், அதே சமயத்தில் இது எந்த தேசிய எல்லைச் சார்ந்தும் (அன்று தேசிய இனவளர்ச்சி இல்லாத சூழ்நிலையில்) உருவாகாமல் இந்திய துணைக்கண்டம் என்ற விரிந்óத சந்தையைக் கொண்டு வளர்ந்ததால் பிராந்திய பெருமூலதனம் என்ற மூலதன பலத்தை கொண்டிருந்தது. இதனால், இந்தியப் பிராந்திய பெருமூல தனத்தின் உள்ளடக்கக் கூறுகள் சுதந்திர தேசிய மூலதன எதிர்ப்பு, நிதி மூலதன கூட்டு (அ) சார்பு என்பதாகும். இதுவே, பிற்போக்குத் தனமான இந்தியப் பெரு மூலதனத்தின் குறிப்பான தன்மையாகும்.

அடுத்து, தன்னை எதிர்த்த சாதிய நிலக்கிழாரிய சக்திகள் அனைத்தையும் கிழக்கிந்திய கம்பெனி அழித்தது. பின்னர், தனக்கு சாதகமான பழைய மற்றும் புதிய நிலவுடைமை ஆதிக்க சக்திகளை கிரா மத்தில் உருவாக்கியது. அவர்களே மூல தன-சாதி-நிலக்கிழார்கள் ஆவர்.

அதாவது, ஏற்கனவே இங்கு இருந்த சாதி-நிலவுடைமை ஒழிக்கப்பட்டு முதலா ளிய விவசாய முறை நிலைநாட்டப் படுவதற்கு பதிலாக, சாதி-அரை நிலவுடை மை சமூகமாக மாற்றப்பட்டது. ஜமின் தாரி, ரயத்துவாரி முறைகள் மூலமாக நிலங்கள் தனிஉடைமையாக்கப்பட்டன. மிராசுதாரர்கள் போன்ற நிலக்கிழார் களுக்கு நிலங்கள் சொந்தமாக்கப்பட் டன. நிலத்தின் மதிப்பினடிப் படையில் நிரந்தர நிலவரி விதிக்கப்பட்டது. பயிர் செய்யப்படாமல் இருந்தாலும் கட்டாய நிலவரி வசூலிக்கப்பட்டது. சாதி-அரை நிலவுடைமையின் முக்கிய வடிவமாக கந்துவட்டி வடிவமெடுத்தது. (கந்துவட்டி மூலதனம் வணிக மூலதனத்தை விட மூன்று மடங்கு இருந்ததாக மதிப்பிடப் படுகிறது.)

இப்படி இரட்டை கொடுமையின் கீழ் (நிலவரி, கந்துவட்டி) சிக்கிக் கொண்ட கிராமப்புற உழவர்களின் எசமானர் களாகவும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சேவகர்களாகவும் இந்த மூலதன-சாதி-நிலக்கிழார்கள் செயல்பட்டனர்.

இவர்கள் இரட்டைத்தன்மை கொண் டவர்களாக இருந்தனர். ஒருபக்கம் பிரிட்டிசாருக்கு கச்சாப் பொருளை ஏற்றுமதி செய்வது, உள்ளூர் சந்தைக்கான உற்பத்தி, மண்டிகள், போக்குவரத்து சாதனங்களின் உடைமையாளர்கள் என்பதாகவும் அடுத்தடுத்து ஏற்படும் முதலுடைமை வளர்ச்சியில் வணிக முதலீடு, தொழிலில் முதலீடு என்பதா கவும் முதலுடைமை உற்பத்தியில் பங்கு பெற்றனர். மறுபக்கம் சாதி அரை நிலவுடைமை சுரண்டலின் முக்கிய கூறுகளான குத்தகை, கொத்தடிமை, கூலிக்கு ஆள் வைப்பது, சாதி வெட்டி உழைப்பு சுரண்டல், கந்துவட்டி போன்ற வைகளையும் மேற்கொண்ட னர்.

இந்த இரண்டு பிற்போக்குசக்திகளின் துணையோடு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியத் துணைக் கண்டத்தை சூறை யாடிக் கொண்டிருந்தது. ஆனால், அதே சமயத்தில் இதே பிரிட்டிஷ் ஏகாதிபத்தி யத்தால் உருவாக்கம் பெற்ற புதிய வர்க்கமான தொழிலாளர்களின் போராட் டங்களும், விவசாய கிளர்ச்சிகளும், பழங்குடி மக்களின் வீரஞ்செறிந்த போ ராட்டங்களும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தி யத்திற்கு அச்சத்தை ஏற்படுத்தின. ஏகாதி பத்திய ஆட்சிக்கு இறுதி அஞ்சலி செலுத் தும் முகமாக கடற்படை எழுச்சி அமைந் தது. இதை ஒட்டிய இராணுவ கலகங்கள் தெளிவாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் இறுதி முடிவை கட்டியங்கூறின.

இதனால், தான் பலாத்காரமாக தூக்கி யெறியப்படுவோமோ என்று அச்சமுற்ற பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது பங்கா ளியான இந்திய பிராந்திய பெருமுத லாளிகளின் கையில் அரசியல் அதிகா ரத்தை மாற்றித்தந்தது.

. “சுதந்திரஇந்தியா

அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிய இந்திய-பிராந்திய-பெருமுதலாளி வர்க்கம் பிரிட்டிசாரின் வழியிலேயே தங்களது அதிகாரத்தைத் தொடர்ந்தனர். இந்திய ஒன்றிய அரசு என்ற பெயரில் தேசிய இனங்கள் மற்றும் பழங்குடிகளின் சிறைக் கூடத்தை கட்டி அமைத்தனர்.

அடுத்து, சாதி-அரை நிலவுடைமை அமைப்பை தொடரச் செய்தனர். இதன் மூலம் மூலதன-சாதி-நிலக்கிழார்களை தங்களுக்குட்பட்ட கூட்டாளியாக்கிக் கொண்டனர்.

முதலில், ஏகாதிபத்தியத்துடன் கூட்டு (அ) சார்பு என்று தொடங்கிய பெரு முதலாளிவர்க்கம், அமெரிக்க-இரசிய முரண்பாட்டை பயன்படுத்தியும், அதி கார வர்க்க மூலதன அடித்தளத்திலும் தங்களை பலப்படுத்திக் கொண்டனர். அதிகார வர்க்க மூலதன வளர்ச்சியின் காரணமாக இந்தியாவில் அதிகார வர்க்க முதலாளித்துகள் (அரசியல்வாதிகள் -அதிகாரிகள்) என்ற புதிய வர்க்கமே உருவானது. இவர்கள் பெருமுதலாளி களின் தரகர்களாக (ஏஜென்ட்களாக) உருவாக்கப்பெற்றனர்.

மேற்கண்ட அதாவது, இந்திய பிராந் திய பெருமுதலாளி வர்க்கம், ஏகாதி பத்தியம், மூலதன-சாதி நிலக்கிழார்கள், அதிகார வர்க்க முதலாளிகள், ஆகிய நான்கு மலைகளே இந்தியாவில் உள்ள அனைத்து ஒடுக்கப்படும் வர்க்கங் களையும் இதர ஒடுக்கப்படும் பிரிவின ரையும் அழுத்திக் கொண்டிருக்கின்றன.

மேற்கண்ட இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் இயக்கப்போக்கு நமது சொந்த விருப்பு வெறுப்பு களுக்கு அப்பாற்பட்டது. சமூக இயக்க விதியினடிப்படையிலேயே இவைகளின் இயக்கப் போக்கு நடை பெறுகிறது. வர்க்க போராட்டம் என்ற சாராம்சமே சமூக இயக்கப் போக்கின் விதியாக இருக்கிறது. இந்த சமூக இயக்கப் போக்குகளை முற்றி லும் தடுத்து நிறுத்தவோ மாற்றவோ யாராலும் முடியாது. அதே சமயத்தில் மட்டு படுத்தவோ துரிதப்படுத்த வோ முடியும். இதை நாம் இந்திய துணை கண்ட வரலாற்றிலேயே பார்க்க முடியும்.

திட்டவட்டமான தனிவுடைமைச் சமூகமாக சூத்திர - நிலவுடைமைச் சமூகம் வேகமாக உருவாகியிருந்த நிலையில், இதன் பாய்ச்சலான மாற்றத்தை பிராமணர்கள் தனது சுயநலத்திற்காக யாகங் களில் உற்பத்தி சக்திகளை அழிப்பதன் மூலம் மட்டுப்படுத்தினர். ஆனால், பிராம ணர்களுக்கும் சத்திரியர்களுக்குமான வர்க்க போராட்டக்களம் புத்தரை வர லாற்றின் முன் தள்ளியது. சத்திரியர்களின் செயல்பாடுகள் குறிப்பாக புத்தர் மற்றும் அசோகரின் செயல்பாடுகள் சமூகத்தைப் பாய்ச்சல் ரீதியான பண்பு மாற்றத்திற்கு துரிதப்படுத்தின.

இதே போல், பிரிட்டிஷ் ஏகாதிபத்தி யமும் இயல்பான வளர்ச்சியை அழித்து, அரைத் தன்மையிலான மந்தமாக மாற்óற மடையும் போக்கை மேற்கொண்டதன் மூலம் மட்டுப்படுத்தியது. ஆனால், இந்திய துணைக்கண்ட மக்கள் தங்களின் வீரஞ்செறிந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் அதிகா ரத்திலிருந்து விரட்டி அடித்தனர்.

ஆனால், இந்தியப் பிராந்திய பெருமுதலாளி வர்க்கத் தலைமை யிலான பிற்போக்கு கும்பல்கள் இயல் பான வளர்ச்சியை மட்டுப்படுத்திக் கொண்டு இருக்கின்றன. சுமார் 250 ஆண்டுகளுக்கு மேலான இந்த அரைத் தன்மையிலான மந்தப்போக்கு சமூகத் தில் கடும் மரண வேதனைகளை உண்டு பண்ணிக் கொண்டிருக்கின் றன. எனவே, இந்திய சமூகங்களில் முன்னேறிய வர்க்கமான பாட்டாளி வர்க்கம் தடைகளை தகர்த்து புரட்சி கர சமூக மாற்றத்தை துரிதப்படுத்த வேண்டிய புரட்சிகர கடமையை தனது தோள்களிலேயே சுமந்து கொண்டிருக்கிறது.

பாட்டாளி வர்க்கம் தனக்கான கட்சியின் மூலம் அதாவது பொது வுடைமை கட்சியின் மூலம் எண்பது ஆண்டுகளாக முயற்சி செய்து கொண் டிருக்கிறது. இதில் ஒருபகுதியினர் (இ.கம்யூனிஸ்டுக் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி) நாற்பது ஆண்டுகளுக்கு முன் பே திரிபுவாதிகளாக முதலாளித்துவ பாதையை தேர்ந்தெடுத்துக் கொண் டனர். மற்றொரு பகுதியினர் (மார்க் சிஸ்ட்-லெனினிஸ்ட்) ஒரு சில சரி யான அடிப்படைகளை உருவாக்கிய போதிலும் வெற்றிபெற முடியவில் லை. அளவுரீதியான சீர்திருத்தங்க ளையே உருவாக்க முடிந்தது. அதுவும் சில இடங்களிலே தான். பண்புரீதி யான மாற்றங்களை குறிப்பிட்ட இடங்களிலே கூட செய்ய முடிய வில்லை.

எனவேதான், மீண்டும் பாட்டாளி வர்க்க கட்சிகள் (அ) குழுக்கள் தனது மதிப்பீடுகளை மீளாய்விற்கு உட் படுத்த வேண்டியுள்ளது. வரலாற்றை மீளாய்வு செய்வதும், கடந்த சில பத்தாண்டுகளில் இந்தியாவில் நடந்த சமூக மாற்றங்களை பகுப்பாய்வு செய்வதும் முன் நிபந்தனையாகிப் போனது.

அதனால், பாட்டாளி வர்க்க கட்சி கள் (அ) குழுக்கள் மேற்கொள்ளும் பகுப்பாய்வானது கடந்த கால ஆய்வு களைத் தாண்டி முன்னேறுவது மிக முக்கியமானது. கடந்த எண்பதாண்டு களில், ‘பருண்மையான நிலைமை களைப் பற்றிய பருண்மையான பகுப்பாய்வு என்பதற்கு மாறாக, பெரும்பாலும் அறிவு மறுப்பிய (அனுபவவதம்) போக்கே முதன்மை யாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டி ருக்கிறது. அதே போல் எந்திரகதியாக பொருத்துவது (அ) பெயர்த் தெடுப்பது என்பதும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. இத்தகைய திசை விலகல்களிலிருந்து மீண்டு லெனினது ‘பருண்மையான பகுப்பாய்வு’ என்ற அடிப்படையில் நாம் ஆய்வை மேற்கொள்ள வேண்டி யுள்ளது. நமது சொந்த விருப்பு, வெறுப்புகளின்றி சமூக இயக்கப் போக்கின் புறநிலை மெய்மைகளை திறந்த மனத்துடன் நாம் உள்வாங்க வேண்டியுள்ளது.

இந்திய சமூகங்களின் புறநிலை போக்குகளின் வளர்ச்சி, வீழ்ச்சி ஆகியற்றை பற்றிய மார்க்சிய தத்து வத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய் வின் விவரங்களில் இருந்து, பாட் டாளி வர்க்க இயக்கத்தின் குறிக்கோள் களை திட்டமாக வரையறுக்க வேண் டியுள்ளது.

இத்திட்டமானது புரட்சியின் கட் டத்தை பொருத்தே தீர்மானிக்கப்பட வேண்டும். தீர்மானிக்கப்படும் கட் டம் முழுவதும் திட்டமானது மாறாது. இதுவே தோழர் மாவோவால் பொது திட்டம் என்று வரையறுக்கப்பட்டது. சமூக மாற்றங்களின் வளர்ச்சி போக் கில் இடையிடையே வரும் இடைக் கட்டங்களுக்கேற்ப குறிப்பான திட் டங்களின் மூலமே பாட்டாளி வர்க் கம் தனது திட்டத்தின் பகுதிக்கான செயல்பாடுகளை முன் நகர்த்துகிறது. இடைக்கட்டங்கள் மூலமே பாட் டாளி வர்க்கம் சமூக மாற்றங்களை முன் நகர்த்த முடியும் என்பது மாவோ வின் திட்டவட்டமான கருத்து.

திட்டத்தின் குறிக்கோள்களை வரையறுப்பதற்கு சமூகத்தின் குறித்த தன்மையையும் சமூகத்தின் வளர்ச்சி போக்கிலுள்ள அடிப்படை முரண் பாட்டையும் அடையாளங்காணுவது மிகவும் முக்கியமானது.

ஒரு சமூகத்தின் குறித்த தன்மையை தீர்மானிப்பதில் தீர்மானகரமான பங்கு அச்சமூகத்தின் உற்பத்தி முறை தான் ஆகும். இந்திய நாட்டின் அர செல்லைக்குள் உள்ள சமூகத்தை பொருத்தவரை அது ஒரே சமூகமா னது இல்லை என்பதே ஆகும். ஒன்று க்கு மேற்பட்ட உற்பத்தி முறை களைக் கொண்டிருக்கிறது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்திய துணைக்கண்ட பகுதியில் இயல்பாக உரு வான பட்டறை முதலுடைமையை (Capitalism) அழித்துவிட்டு, தனது நலனுக்கான தனது மூலதன உற்பத்தியை இங்கு நட்டது. அதே சமயத்தில் இங்கு ஏற்கனவே நிலவிக் கொண்டிருந்த சாதி-நிலவுடைமை, தொல் குடி சமூகங்களின் மீதும் தாக்குதலை தொடுத்தது மட்டுமல் லாமல், அவைகளை அரைத்தன்மையில் நீடிக்க வைத்தது. இது மட்டுமல்லாமல் தனது கட்டுப்பாட்டுக்குட்பட்டு பிராந் திய பெரு மூலதனத்தையும் அனுமதித் óதது. இச்செயல் போக்குகள் ஒன்றுக்கு மேற்பட்ட உற்பத்தி முறைகளைக் கொண்ட சமூகங்களின் இருத்தலை உருவாக்கியது.

அரசியல் சுதந்திரம் பெற்ற இந்திய பிராந்திய பெருமுதலாளி வர்க்கம் தனது நலனிலிருந்து கடந்த கட்டத்தின் நிலை யையே நீடிக்க வைத்தது. அதனால் இன்றைய இந்தியாவின் சமூகங்களின் தன்மை என்பது மூலதன, சாதி-அரைநிலவுடைமை, அரை தொல்குடி உற்பத்தி முறைகளைக் கொண் டதாக இருக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட உற்பத்தி முறைகளின் நீடித்த இந்த நிகழ்வுப்போக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அடிப்படை முரண்பாடுகளைக் கொண்டதாக தொடக்கம் முதலே நீடிக்கிறது.

இன்றைய இந்தியாவைப் பொருத்த வரை கீழ்க்கண்ட அடிப்படை முரண்பாடுகள் நிலவுகின்றன.

(1) இந்திய மண்டல ஏகாதிபத்தி யம்

X

பாட்டாளி வர்க்க மற்றும் இதர பரந்து பட்ட மக்கள்  

(2) ஏகாதிபத்தியம்

X

பாட்டாளி வர்க்க மற்றும் இதர பரந்துபட்ட மக்கள்

(3) அதிகார வர்க்க முதலுடை மைத்துவம்

X

பாட்டாளி வர்க்க மற்றும் இதர பரந்துபட்ட மக்கள்

(4) சாதி - நிலவுடைமைத்துவம்

X

உழவர்கள் மற்றும் தலித்துகள், பெண்கள்

(5) தொல்குடி உற்பத்தி முறை

X

பழங்குடிகள் மற்றும் இதர பரந்துபட்ட மக்கள்

(6) இந்திய ஒன்றிய அரசமைப்பு

X

மொழி வழி தேசிய இனங்கள் மற்றும் பழங்குடிகள்

(7) தெற்காசிய மண்டல ஏகாதிபத்தியம்

X

தெற்காசிய நாடுகள் மற்றும் மக்கள்

(8) முதலாளித்துவ மூலதனங்கள்

X

இயற்கை

மேற்கண்ட அடிப்படை முரண்பாடு களே இன்று இந்திய சமூகங்களை அடிப்படையில் இயக்கிக் கொண்டிருக் கின்றன.

மேற்கண்ட முரண்பாடுகள் ஒவ் வொன்றும் தனக்கே உரிய தனிப் பட்ட குறிப்பான தன்மையைக் கொண்டிருக்கிறது. மேலும், ஒவ் வொரு முரண்பாட்டிலும் உள்ள ஒவ்வொரு கூறும் அதற்கே உரிய குறிப்பான பண்புகளைக் கொண் டுள்ளது. ஒவ்வொரு முரண்பாட்டின் குறிப்பான தன்மையை மட்டுமல் லாது, ஒவ்வொரு முரண்பாட்டிலும் உள்ள இரு கூறுகளையும் ஆழ்ந்துப் பயில வேண்டும். முழுமையைப் புரிந்துக் கொள்வதற்கான வழிமுறை இதுதான் என்கிறார் மாவோ.

மேற்கண்ட அடிப்படை முரண்பாடு களைப் பொருத்தவரை, முதல் மூன்றும் மூலதனத்திற்கும் ஷ் உழைப்பிற்குமான முரண்பாட்டின் தனிவகைகளாகும். இம்முரண்பாடுகளிலுள்ள முதன்மைக் கூறுகளுடன் நேரிடையாக வர்க்க முரண் பாட்டைக் கொண்ட பாட்டாளி வர்க்க மும் சேவைத் துறைகளைச் சேர்ந்த குட்டி முதலாளி வர்க்கமும், இந்திய அளவில் ஒருங்கிணைந்து வர்க்க போராட் டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. இவைகளுக்கிடையிலான முரண்பாடுகள் நாளுக்கு நாள் ஆழமாகிக் கொண்டி ருக்கின்றன. உலகமயமாக்கலின் பகுதி யாக தனியார்மயமாக்கல், தாராள மயமாக்கலின் மூலம் இம்முரண்பாடுகள் கூர்மையடைந்துக் கொண்டிருக்கின்றன. மேலும், தேசிய இனங்களைச் சேர்ந்த இதர பரந்துபட்ட மக்களும் குறிப்பாக விவசாயிகளும் மற்றும் பழங்குடிகளும் இவைகளுக்கெதிராக வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்திக் கொண்டி ருக்கின்றனர்.

முதலாவது முரண்பாட்டின் முதன் மைக் கூறான இந்தியப் பிராந்திய பெருமுதலாளி வர்க்கமே தாக்குதல் தொடுக்கப்பட வேண்டிய முதன்மை இலக்காக உள்ளது.

இரண்டாவது முரண்பாட்டின் முதன்மைக் கூறான ஏகாதிபத்தியத் திற்óகெதிரான முரண்பாடு இன்றைய கட்டத்தில் மிகவும் கூர்மையடைந்óதுக் கொண்டிருக்கிறது.

மூன்றாவது முரண்பாட்டில் மன் மோகன் கும்பலின் உலகமயமாக்கல் கொள்கையின் மூலம் இந்தியாவை மறு காலனியாக்க முயற்சிக்கும் சதிக்கெதிராக மக்கள் கடுமையாக கிளர்ந்தெழுந்து வருகின்றனர்.

நான்காவது முரண்பாட்டின் சாதி நிலவுடைமை முன்னர் பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்தாலும் தற்போது இந்திய பெரு முதலாளி வர்க்கத்தாலும் நீடித்துக் கொண்டிருக்கிறது. சாதி நிலவுடைமை யின் ஆதிக்கம் செய்யும் முதன்மைக்கூறு மூலதன-சாதி-நிலக்கிழார்களாகும். இவர்களே கிராமப் புறத்தின் முதன்மை சுரண்டலாளர்கள் ஆவர். இந்த மூலதனக் கிழார்களுடன்தான் பணக்கார உழவர் கள், நடுத்தர உழவர்களுக்கும் முதன்மை யாக கூலி உழவர்களுக்குமான முரண் பாடுகள் கூர்மை யடைந்துக் கொண்டி ருக்கின்றன.

சாதி-நிலவுடைமையின் சாதியம் ஒரு பக்கம் தாழ்த்தப்பட்டவர்கள் மீது கொடூடுரமானத் தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருக்கிறது. மறுபக்கம் மொழிவழி தேசியங்களின் வளர்ச்சிக்கு மாபெரும் தடையாக இருக்கிறது. நிலவுடை மையின் ஆணாதிக்கம் பெண்கள் மீது தாங்கவொண்ணா கொடுமைகளை இழைத்துக் கொண்டிருக்கிறது. எனவே, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு மிகவும் தடையாக இருக்கின்ற மிகவும் பிற்போக்குத்தனமான சக்தியான மூலதன-சாதி-நிலக்கிழார்கள் உடனடியாக தூக்கியெறிய வேண் டிய இலக்குகளாகும்.

அய்ந்தாவது அடிப்படை முரண்பா டானது. இந்திய துணைக்கண்ட சமூகங் களின் வளர்ச்சியின் பாரதூரமான வேறு பாட்டை காண்பிக்கிறது. மிகவும் பின் தங்கிய தொடக்கநிலை இனக்குழு சமூக உற்பத்தி என்பது பழங்குடி மக்களுக்கே தடையாக இருக்கிறது. ஒரு பக்கம் இன்றைய பிற்போக்கு ஆளும் கும்பல் களான இந்தியப் பெருமுதலாளிகள் மற்றும் ஏகாதிபத்தியங்களை எதிர்த்துப் போராடும் அதே சமயத்தில், தங்களின் பின்தங்கிய சமூக அமைப்பையும் மாற்ற போராட வேண்டி உள்ளது. ஏற்கனவே கூட்டு வாழ்க்கையைக் கொண்ட இவர்கள் நேரிடையாக நவீன உற்பத்தி யின் மூலம் சோசலிச சமூகத்திற்கு மாற்றமடைய வேண்டிய தேவையில் உள்ளனர்.

ஆறாவது அடிப்படை முரண்பா டானது, இந்திய ஒன்றிய அரசு உருவாக் கத்தின் கோர முகத்தைக் காட்டுகிறது. இந்தியா என்பது ஒரு தேசிய இனங்கள் மற்றும் பழங்குடிகளின் சிறைக்கூடம் என்பதை இந்த முரண்பாடு பறைச் சாற்றுகிறது. இதில் பழங்குடிகளுடையப் போராட் டங்கள் என்பது தொடக்கும் முதலே வீரம் செறிந்ததாக இருக்கிறது. வடகிழக்கு பகுதிகளிலே இன்று வரை நடந்துவரும் பழங்குடிகளின் தேசியவிடு தலைப் போராட்டம் அவர்களின் விடு தலை தாகத்தீயை மற்றவர்களுக்கு பற்ற வைக்கிறது. அதே போல் கஷ்மீர் மக் களின் போராட்டமும் அவ்வாறே.

பஞ்சாப் மக்களின் போராட்டம் சதித்தனமாக மிகக் கொடுரமான இரா ணுவ வேட்டையின் மூலம் ஒடுக்கப் பட்டது. தமிழ்நாட்டில் மொழி உரிமைப் போராட்டங்கள் வரலாற்றில் என்றும் தொடர்ந்துக் கொண்டிருக்கக் கூடியது ஆகும். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துக் கொண்ட மொழிவழித் தேசிய இனங்கள் தங்களின் சுயநிர்ணயத்தையும் விருப்பப் பூர்வ மான கூட்டரசையுமே எதிர்பார்த்தனர். ஆனால் இந்திய பிராந்தியப் பெரு முதலாளிகள் நேருவின் மூலம் கயமைத் தனமான சூழ்ச்சியால் துரோகமிழைத் தனர். இதனால், மொழிவழித் தேசிய இனங்களும் பழங்குடிகளும் தங்களுக் கான சுதந்திர தேசத்தையும், விருப்பப் பூர்வமான கூட்டரசையும் உருவாக்க வேண்டிய கடமையில உள்ளனர். ஒட்டு மொத்தத்தில் இந்த அடிப்படை முரண்பாட்டின் வளர்ச்சி என்பதே இந்திய ஒன்றிய அரசை வீழ்த்துவதில் முக்கிய பங்காற்ற முடியும்.

ஏழாவது அடிப்படை முரண்பாடா னது தெற்காசிய மண்டல வல்லரசுக் கெதிரானது. தெற்காசியாவிலுள்ள நாடு களில் பாகிஸ்தான் இந்த முரண்பாட்டை சமரசம்-மோதல் என்ற தன்மையிலேயே தீர்த்துக் கொள்கிறது. மற்ற நாடுகள் சமரசத்தின் மூலமே தீர்த்துக் கொள் கின்றன. இலங்கையானது பாகிஸ்தா னைப் போல சீனாவை பயன்படுத்தி இந்திய நெருக்கடிகளை தீர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறது. எப்படி இருப்பினும் இந்திய விரிவாதிக்கத்திற்கெதிரான முரண்பாடு இந்நாட்டு மக்களிடையே முக்கிய முரண்பாடாக நிலவிக் கொண்டிருக் கின்றன.

சொந்த நாட்டு ஆளும் வர்க்கத்திற் கெதிராக தங்களது விடுதலைப் போராட் டத்தை நடத்துவதற்குகூட இந்தியாவை எதிர்ப்பது (அ) முடக்குவது என்பதே இவர்களின் விடுதலையைத் தீர்மா னிக்கும் அம்சமாகும். எனவே, இவர் களின் விடுதலையில் இந்தியாவிற்கு எதிராக எத்தகைய இராசதந்திர உத்திகள் மற்றும் போர் உத்திகளை கையாளு கிறார்கள் என்பதே தீர்மானகரமான அம்சமாகும். அண்மையில், விடுதலைப் புலிகள் கொடுரமாக அழிக்கப்பட்டதும் நேபாள மாவோயிஸ்டுகளின் தாக்குப் பிடித்தலும் நல்ல எடுத்துக்காட்டு களாகும்.தெற்காசிய மண்டலத்தில், மண்டல வல்லரசு இந்தியாவிற்கெதிரான முரண்பாடு தெற்காசிய நாடுகளில் முக்கிய கட்டத்தில் உள்ளது. இந்தியா விற்கும் சீனாவுக்குமான ஆதிக்க போட்டி கூர்மையடையும் பகுதியாகவும் தெற் காசிய மண்டலம் நிலவுகிறது. இப் போட்டி அமெரிக்கா-சீனாவிற்கான போட்டியின் ஒரு பகுதியாகவும் இருக் கிறது.

இந்திய விரிவாதிக்கம் என்பது இந்திய மக்களுக்கும் முக்கிய முரண் பாடாக இருக்கிறது. இதனால் இந்திய விரிவாதிக்கத்தை எதிர்த்து தெற்காசிய மக்களுடன் இணைந்து போராடுவது என்பது வளர்ந்து வருகிறது. இந்த கூட்டிணைவே இந்திய மண்டல வல்லரசை முழுமையாக வீழ்த்த முடியும். தமது சொந்த ஆளும் வர்க்கத்தின் விரிவாதிக்கத்தை எதிர்ப் பது இந்தியாவிலுள்ள பாட்டாளி வர்க்கம் தேசிய இனங்கள் மற்றும் பழங்குடிகளின் கடமையாகிறது.

எட்டாவது அடிப்படை முரண்பா டானது, இயற்கைக்கும் மனிதகுலத் திற்குமான உலக பொது முரண்பாட்டி லிருந்து இன்றைய கட்டத்தில் மூலதனத் திற்கும் இயற்கைக்குமான முரண்பாடாகி தீவிரமடைந்துக் கொண்டிருக்கிறது. உலகில் வெப்பமயமாதல், பருவநிலை மாற்றத்தை ஒட்டி இயற்கை பாதுகாப்பு என்ற குரல் வலுத்து வருகிறது. ஒருசாரார் இதற்கு காரணமான குற்றவாளிகளான ஏகாதிபத்தியங்களையும் அவர்களின் கூட்டாளிகளை எதிர்த்தும் சரியாக போராடுகின்றனர்.

கட்டுபடுத்தப்பட்ட உற்பத்தி சக்தி களின் வளர்ச்சி, சூரிய ஒளி, நீர், காற்று போன்ற இயற்கை ஆற்றல்களை பயன் படுத்துவது, இதற்கான அறிவியலுக்கு முன்னுரிமை அளிப்பது, காடு வளங்கள், மலைவளங்கள், கடல் வளங்கள் ஆகியன வற்றை மறு உற்பத்தி சுழற்சிக்குட்படுத்திப் பயன்படுத்திக் கொள்வது. கனிமவளங்களைக் கல்வி, மருத்துவம், அறிவியல் போன்ற முக்கிய தேவைக ளுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வது, சமூக வாழ்க்கைத்தேவைகளுக்கு மறு உற்பத்தி சுழற்சிக்கு உட்படுத்தப்படும் பொருட்களையே பயன்படுத்துவது போன்ற அடிப்படைகளின் மூலம் இயற்கையுடன் இயைந்த மனித சமூகத் தை உருவாக்குவது இம் முரண்பாட்டின் அழிவுத்தன்மையை நீக்கும்.

மேற்கண்ட அடிப்படை முரண் பாடுகளின் வேறுபட்ட பண்பிற் கேற்ப பண்பால் வேறுபட்ட முறை களால்தான் தீர்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, இந்திய பெரு மூலதனமும் ஏகாதிபத்திய நிதி மூலதனங்களும் கைப்பற்றப்பட்டு அதன் முதலாளித் துவ தனி உடைமை ஒழிக்கப்பட்டு சோசலிச சாரத்தில் சமூக உடைமையாக்கப்படுவதன் மூலம் தீர்க்கப்படும்.

மேலும், சாதி -அரைநிலவுடைமை சமூகத்தை எடுத்துக் கொண்டால், அங்கு பிற்போக்குத்தனமாக இருக்கக் கூடிய நிலவுடைமை சக்திகளின் (மூலதன-சாதிக்கிழார்களின்) நிலங்கள் கைப்பற்றப்பட்டு, நிலமற்ற கூலி உழவர்களுக்கு மக்கள் ஜனநாயக முறையில் நிலங்கள் பகிர்ந்தளிக்கப் படும். நிலங்கள் துண்டு துண்டாக பிரிந்து இருக்கும் பின்தங்கிய நிலையிலிருந்து, நிலங்களை குவிப்பது என்ற கூட்டு பண்ணையின் சோசலிச முறையில் தீர்க்கப்படும்.

ஒன்றுக்கு மேற்பட்ட முரண் பாடுகள் நிலவும் சமூகத்தில் முதன்மை முரண்பாடே அனைத்து முரண்பாடுகளையும் ஆதிக்கம் செய்யும் போக்கை கொண்டிருக்கிறது. இம்முதன்மை முரண்பாட்டை அடையாளங் கண்டு இதற்கெதிரான குறிப்பான திட்டத் தையும், செயல் உத்திகளையும் வகுத்து செயல்படுத்துவதில் தான் பாட்டாளி வர்க்க கட்சியின் வளர்ச்சி யும் வெற்றியும் உள்ளது.

மேற்கண்ட அடிப்படை முரண்பாடு களில் இருந்தே முதன்மை முரண்பாடு எழுகிறது. இதன் பொருள் இம்முரண் பாடுகளில் ஒன்றுதான் முதன்மை முரண் பாடாக வரும் என்பதல்ல. முதன்மை முரண்பாடு கீழ்க்கண்ட முறைகளில் வெளிப்படுகிறது.

(1) அடிப்படை முரண்பாட்டின் முழுமை வடிவத்திலேயே வரும். எடுத்துக்காட்டாக, இந்தியா-பாகிஸ்தான் யுத்தங்களின் போதும் பங்களாதேஷ் விடுதலையின் போதும் இலங்கை யில் இரண்டுமுறை இந்திய ஆக்கிரமிப்பு படைகளை அனுப்பியபோதும் இந்திய விரிவாதிக்கத்திற் கெதிரான முரண்பாடே முதன்மை முரண்பாடாக இருந்தது.

(2) ஒன்றுக்கு மேற்பட்ட அடிப் படை முரண்பாடுகள் இணைந்து ஒரே முதன்மை முரண்பாடாக வெளிப் படும்.

எ-கா இந்திய பெரு முதலாளி வர்க்க மும், மூலதன நிலக்கிழாரியமும் இணைந்து ஒரே முதன்மை முரண்பாடாக வரும் அல்லது ஏகாதி பத்தியம் இணைந்தும் வரலாம்.

(3) அடிப்படை முரண்பாட்டின் முதன்மைக் கூறில் ஒரு பிரிவுக்கு எதி ராக முதன்மை முரண்பாடு வெளிப் படும்.

எ-கா அதிகார வர்க்க முதலாளித்து வம் என்ற முதன்மைக் கூறில் ஒருபிரி வாகிய இந்திராகாந்தியின் பாசிசத்திற் கெதிராக அவசரநிலை காலகட்டத்தில் முதன்மை முரண்பாடு மேலெழுந்தது.

மேற்கண்ட வடிவங்களிலேயே அடிப் படை முரண்பாட்டில் இருந்து முதன்மை முரண்பாடு எழுகிறது.

அடிப்படை முரண்பாடுகளின் கூறுக ளில் உள்ளடங்கி இருந்தாலும் தனித்த அடையாளங்களுடன் சில முக்கிய (அ) பெரிய முரண்பாடுகள் சமூகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவை,

 1. இந்திய ஆளும் வர்க்கங்களுக் கிடையிலான முரண்பாடு

2.இந்துத்துவா பயங்கரவாதத் திற்கும் X மதச்சிறுபான்மையினருக்கும்

3. மொழிவழி தேசிய வளர்ச்சிக்கும் X இந்திய தேசியத்திற்கும்

4. தேசிய வளர்ச்சிக்கும் X சாதியத்திற்கும்

5. சாதியத்திற்கும் X தாழ்த்தப்பட்ட வர்களுக்கும்

6. ஆணாதிக்கத்திற்கும் X பெண்களுக்கும்

7. பெருந்தேசிய இனத்திற்கும் X மொழிச் சிறுபான்மையினருக்கும் (மாநிலம்)

8. தேசிய வளர்ச்சிக்கும் X பிராந்திய ஏற்றத் தாழ்விற்கும் (மாநிலம்)

9. பழங்குடியினருக்கும் X பழங்குடி அல்லாதோருக்கும்

10. அண்டை தேசிய இனங்களுக் கிடையிலான முரண்பாடு

என முக்கிய (அ)பெரிய முரண்பாடு கள் நிலவுகின்றன.

இவைகளில் சில முரண்பாடுகள் அடிப்படை முரண்பாடுகளின் இயக்கப் போக்கின் தீவிரத்தால் கடுமையாகி தற்காலிகமாக முதன்மை முரண்பாடு களாகவோ அல்லது மண்டலம் (அ) வட்டாரம் சார்ந்து முக்கிய முரண் பாடுகளாகவோ முன்னுக்கு வரும். இவை களை கையாளும்பொழுது வர்க்க கண்ணோட்டத்திலிருந்து எச்சரிக்கை யாக கையாள வேண்டும். இல்லை எனில் ஆளும் வர்க்க நலனுக்கும் சதிக்கும் இரையாக வேண்டி இருக்கும்.

மேற்கண்ட முக்கிய அல்லது பெரிய முரண்பாடுகள் மட்டுமல்லாமல், துணை (அ) சிறிய முரண்பாடுகளும் செயல்பட்டுக் கொண்டிருக் கின்றன. எடுத்துக்காட்டுகளாக,

 1. பாட்டாளி வர்க்கத்திற்கும் X குட்டிமுதலாளி வர்க்கத்திற்கும்

 2. குட்டி முதலாளி வர்க்கத்திற்கும் X உழவர்களுக்கும்

 3. பாட்டாளி வர்க்கத்திற்கும்       X உழவர்களுக்கும்

4. பணக்கார உழவர்கள், நடுத்தர உழவர்கள் X கூலி உழவர்கள்

5. பணக்கார உழவர்கள் X நடுத்தர உழவர்கள்

6. வணிகர்களுக்கும் X உழவர்களுக்கும்

7. வணிகர்களுக்கும் X முதலாளிகளுக்கும்

8. நகரங்களுக்கும் X கிராமங்களுக்கும்

போன்றவைகளாகும்.

அடிப்படை முரண்பாடுகளின் வளர்ச்சிப் போக்கும் அதனுடனான பெரிய, சிறிய முரண்பாடுகளுக்கும் உள்ள உறவைப் பற்றி மாவோவின் கூற்றுகளில் பார்ப்பது சிறப்பானதாகும்.

‘ஒரு பொருளின் வளர்ச்சிப் போக்கி லுள்ள அடிப்படை முரண்பாடும் இந்த அடிப்படை முரண்பாட்டால் நிர்ண யிக்கப்பட்ட உட்சாரமும் இவ்வளர்ச்சிப் போக்கு முற்றுப்பெறும் வரை மறையாது; ஆனால் ஒரு நீண்ட வளர்ச்சிப் பாதையில் உள்ள ஒவ்வொரு கட்டத்திலும் அதனதன் நிலைமைகள் வேறுபடும், ஏனெனில், ஒன்றின் வளர்ச்சிப்போக்கில் அடிப்படை முரண்பாட்டின் தன்மையும், இந்த அடிப்படை முரண்பாட்டால் நிர்ண யிக்கப்பட்ட உட்சாரமும், இந்த போக்கு முற்றுப்பெறும் வரை மறையாது. ஆனால் ஒரு நீண்ட வளர்ச்சிப் பாதையில் உள்ள ஒவ்வொரு கட்டத்திலும் நிலைமைகள் வேறு படுவது இயல்பு. ஏனெனில் ஒன்றின் வளர்ச்சிப் போக்கிலுள்ள அடிப்படை முரண்பாட்டின் தன்மையும், வளர்ச்சிப் போக்கின் உட்சாரத்தின் தன்மையும் மாறாமல் இருந்த போதிலும், இந்நீண்ட போக்கில் ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்குச் செல்லும்போது அடிப் படை முரண்பாடானது மேன்மேலும் கடுமையானதாகிறது. கூடவே, அடிப் படை முரண்பாட்டால் நிர்ணயிக்கப் படுகிற அல்லது அதன் தாக்கம் பெறுகிற பல்வேறு பெரிய அல்லது சிறிய முரண்பாடுகளில் சில கடுமையாகின்றன. சில தற்காலிகமாகவோ, அல்லது அரை குறையாகவோ தீர்வுப் பெறுகின்றன; அல்லது அவற்றின் கடுமை தணிக்கப் பெறுகின்றன. அத்துடன் சில புதிய முரண்பாடுகளும் தோன்றுகின்றன. இதனால் தான் இந்தப் போக்குகள் பல கட்டங்களாக வடிவம் பெறுகின்றன. ஒரு பொருளின் வளர்ச்சிப் போக்கில் உள்ள பல கட்டங்களில் கவனம் செலுத்த முடியாதவர்களால் அம்முரண்பாடு களைச் சரியாக கையாள முடியாது.’

இலக்குகள் மற்றும் இயக்குசக்திகள்

மேற்கண்ட அடிப்படை முரண்பாடுகள் மிகத் தெளிவாக வர்க்கங்களை இருபிளவாக அணிச் சேர்த்துள்ளது. இதில் சமூக மாற்றத்திற்கு தடையாக உள்ள இலக்குகளாக, (1) இந்திய பிராந்திய பெரு முதலாளி வர்க்கம் , ஏகாதிபத்தியம், மூலதன-சாதி-நிலக்கிழார்கள், அதிகார வர்க்க முதலாளிகள் ஆகிய நான்கு பேரும் உள்ளனர். இந்த நான்கு மலைகளையே இந்தியாவிலுள்ள மக்கள் தூக்கி எறிய வேண்டி உள்ளது.

இந்த இலக்குகளை தூக்கி எறியும் இயக்கு சக்திகளாக உள்ளவர்கள் (1) தொழிலாளிகள் (2) விவசாயிகள் (3) குட்டி முதலாளி வர்க்கங்கள் (4) தேசிய முதலாளி ஆகிய நான்குப் புரட்சிகர வர்க்கங்களும்

(1) பெண்கள் (2) தலித்துகள் (3) மதச் சிறுபான்மையினர் (4) பழங்குடிகள் (5) மீனவர்கள் ஆகிய அய்ந்து புரட்சிகர சமூக பிரிவினரும் புரட்சியின் இயக்கு சக்திகள் ஆவர்.

பாட்டாளி வர்க்கத் தலைமையில் விவசாயிகளை அடிப்படையாகக் கொண்ட இந்த புரட்சிகர அணிச் சேர்க்கையில் புரட்சிகர சமூகப்பிரிவி னரின் ஆளும் வர்க்கங்களும் தேசிய முதலாளிகளில் ஊசலாடும் பிரிவி னரும் இலக்குகளாக மாறுவர்.

புரட்சியின் கட்டங்கள்

திட்டம் என்பது புரட்சியின் கட்டத் திற்கேற்பவே தீர்மானிக்கப்படுகிறது என்பதை முன்பே பார்த்தோம். சோசலிசப் புரட்சிக்கான திட்டம் அதிகபட்ச திட்டம் என்றும், முதலாளியக் கூறுகளைக் கொண்ட சனநாயகப் புரட்சியை அதாவது, சோசலிசத்திற்கு முந்தையக் கட்டத்திற்கான திட்டத்தை குறைந்த பட்ச திட்டம் என்றும் கருதப்படுகிறது.

இந்தியாவைப் பொருத்தவரை ஒன்றுக்கு மேற்பட்ட உற்பத்தி முறை யைப் பார்த்தோம். அதாவது, மூலதன, சாதி-நிலவுடைமை, தொல்குடி உற்பத்தி முறைகளைக் கொண்டதாக உள்ளது. இவை கலந்துள்ளதுகூட இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாகக் கிடையாது. இது கடும் ஏற்றத்தாழ்வுகளையும் மாறு பாடுகளையும் கொண்டதாகவும் உள்ளது. சாதி அடையாளங்கள் சாராம்சத்தில் இனக்குழு தன்மை யைக் கொண்டதாகும். இது ஏற்கன வே உள்ள பிரதேச ஏற்றத்தாழ்வு களுடன் தன்னைக் குறுக்கிக் கொள் கிறது. இதனால் மொழிவழித் தேசிய வளர்ச்சிக்கு மிகப்பெரும் தடை நிலவுகிறது.

இதனால், இந்தியாவில் சாதி - அரைநிலவுடைமை எந்தத் தன்மை யில் நிலவுகிறது என்பதைச் சார்ந்தே அந்தப் பகுதிகளில் புரட்சியின் கட்டத்தையும் திட்டத்தையும் தீர்மா னிக்க முடியும்.

ஏனெனில், இந்தியா முழுவதும் ஒரேமாதிரியான நிலையில் மாற்றங் கள் இல்லை. இதற்கான முக்கிய காரணங்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய இந்திய பிராந்தியப் பெருமுதலாளி வர்க்கம் விவசா யத்தில் முதலுடைமை மாற்றங்களைக் கொண்டு வரத்தயா ரில்லாமல், மூலதன-சாதி-நிலக்கிழார் களுடன் சமரசம் செய்துக் கொண்டது ஆகும்.

தனது தேவைக்கும், நெருக்கடி களுக்கேற்ப சில விவசாயச் சீர்திருத் தங்களை அவ்வப்பொழுது செய்து வருகின்றனர். இதனால், ஏற்கனவே சாதி-நிலவுடைமை வரலாற்று உரு வாக்கத்தில் பிரதேசரீதியான மாறு பாடுகளைக் கொண்டிருந்ததின் மேலாகவே, இந்த சீர்திருத்தங்கள் அழுந்துவதினால், ஏற்றத் தாழ்வான வளர்ச்சிகளாக (அ) மாற்றங்களாக நீடிக்கின்றன.

இந்த மாற்றங்கள் (அ) வளர்ச்சிகளைப் புரிந்துக் கொள்வதில் உள்ள ஒருபக்கப் பார்வை புரட்சிகர முகாமை (மார்க்சிய - லெனினியக் குழுக்களை) இரண்டு பிளவாகப் பிரித்துள்ளது.

ஒரு பிரிவினர், முதலுடமை வளர்ச்சி களைக் குறைத்து மதிப்பிடுகின்றனர். அரைநிலவுடைமை என்று கூறிய போதிலும் நிலவுடைமைச் சமுதாய மாகவே அணுகுகின்றனர். தங்களுக்கான அரசியல் வழி, இராணுவ வழிகளை இதைச் சார்ந்து அமைத்துக் கொள்கின் றனர். இதன்மூலம் முதலா ளித்துவ அதிகாரக் கட்டமைப்புகளையே எதார்த்தத்தில் மறுக்கின்றனர். சமுதாயத்தின் வளர்ச்சிப் போக்கை மறுக்கும் பின்தங்கிய அரசியலின் இந்த பிரிவினரே வலதுப் போக்கை கொண்டவர்களாவர். எழுப தில் உருவான மா.லெ கட்சிமுதல் இன்றைய இந்திய மாவோயிஸ்டு கட்சி வரை இந்த வகையினர் ஆவர்.

மற்றொரு பிரிவினர் முதலுடைமை வளர்ச்சிகளை மிகையாக மதிப்பிடுகின் றனர். அளவு மாற்றங்களை பண்புரீதி யான மாற்றங்களாக காணுகின்றனர். உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியில் நவீன எந்திரங்களைப் பயன்படுத்துவதை மட்டுமே கணக்கில் கொள்கின்றனர். உழைப்புச் சக்தியின் தன்மையை சரியாக மதிப்பிடுவதில்லை. அதே போல் உற்பத்தி உறவுகளின் தன்மையையும் சொத்து டைமையின் தன்மையையும் பற்றி கணக்கிலெடுப்பதில்லை.

 எடுத்துக்காட்டாக இந்தியாவில் நிலத்தின் உரிமையில் 80 சதவிதம் சிறு, குறு (5 ஹெக்டருக்குறைவாக) விவசாயி கள் என்று 2010 ஆண்டு “ஒன்றிய” அரசின் பொருளாதார அறிக்கை கூறுகிறது. உழைப்புச் சக்திகளின் நவீன மின்மை ஒருபக்கம் இருந்தாலும் கூலி சமத்துவ மின்மையின் தன்மையைக் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. சாதி, பெண்கள் என்று சாதி-நிலவுடைமை பாரபட்சத் தைக் கொண்டிருப்பதை இவர்கள் கணக்கிலெடுப்பதில்லை.

“விவசாயத்தில் மூலதனம் சிற்றள வான உற்பத்தியை ஒழிப்பதன் மூலமே முதலுடைமையின் பெருவீத உற்பத்தி கட்டமைக்கப்படுகிறது” என்ற மார்க்சின் கூற்றை மறுக்கின்றனர்-சமூக வளர்ச்சியை மிகையாக மதிப்பிடு கின்ற இப்பிரிவினரே இடது போக்கைக் கொண்டவர்களாவர்.

வலது போக்கினர், 40 ஆண்டுகளாக நிலவுடைமையை மாறாத முதன்மை முரண்பாடாக கொண்டுள்ளனர். பெரும் பான்மை மக்கள் முரண்பட்டுள்ளனர் என்ற தலைக்கட்டுக் கணக்குப் போடு கின்றனர். அரைநிலவுடைமை என்று கூறும் இவர்கள், மற்றொரு அரைத் தன்மையான முதலுடைமையுடன் அதே தலைக்கட்டுக் கணக்கில் பெரும்பான்மை மக்கள் முரண்படுவதை காணமறுக்கின் றனர். இவர்கள் பார்க்க மறுக்கும் இந்த முதலாளித்துவ நிறுவனங்கள்தான் இவர் களை ஒடுக்குவதையும் துடைத்தெறி வதையும் செய்கின்றன.

இடது போக்கினர், தொழிலாளி வர்க்கம் என்ற ஒற்றை பிரிவினருக்குள் ளேயே அனைவரையும் உள்ளடக்குகின் றனர். ஆனால், எதார்த்தத்தில் இந்தியா வின் பன்முகத்தன்மை இவர்களின் கற்பனையான ஒன்றாம் வாய்ப் பாட்டிற்கு பொருந்தாமல் போகிறது. இதனால் கடந்த 30 ஆண்டுகளாக சில தொழிற்சங்க நடவடிக்கைகள், சில கிராமப்புறச் செயல்பாடு என்று ஒரு குறுகிய வட்டத்திலேயே இவர்களின் செயல்பாடு கள் குறுகி உள்ளன.

வலதுபோக்கினர் புதிய சனநாயகப் புரட்சிக் கட்டத்தை தங்களது திட்ட மாகவும் இடது போக்கினர் சோசலிசப் புரட்சியை தங்களது திட்டமாகவும் கொண்டிருக்கின்றனர். இருசாராரும் இந்திய அளவில் இத்திட்டங்களை எந்திரகதியாகவே பொருத்துகின்றனர்.

எடுத்துக்காட்டாக, வலது போக்கின ரான இந்திய மாவோயிஸ்டு கட்சி பலமாக இருக்கும் சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களின் சமூகநிலைமைக்கும் இவர் களின் திட்டத்திற்கும், இவர்களின் மாறாத நிலவுடைமை முதன்மை முரண் பாட்டிற்கும் என்ன சம்மந்தம்?

ஆனால், இவர்களில் ஒரு பிரிவினரான முன்னாள் மக்கள் யுத்தக் கட்சி, தண்ட காரண்யாவில் பழங்குடிகளுக்கு காட்டு நிலங்களைப் பகிர்ந்தளித்தது. பழங் குடிகள் கூட்டுத்தன்மையை கொண்டி ருப்பதனால் அவர்களை நேரிடையாக சோசலிச சமூகத்திற்கு மாற்றவேண்டும் என்றும் ஆனால், மாற்றங்கள் மெதுவாக நடைபெறும் என்றும் மார்க்சிய ஆசான் கள் உரைத்துள்ளனர்.

எனவே, இவர்களின் செயல்பாடு என்பது உயர்ந்த வளர்ச்சிக் கொண்ட சோசலிசத்தின் கூட்டுப் பண்ணை என்பதற்கு பதிலாக, இதற்கு முந்தைய வடிவமான நிலங்களை பகிர்ந்து அளித்தல் என்ற பின்னோக்கிய வலது செயல்பா டாகவே, உள்ளது. இது இந்திய சமூகங்களின் வளர்ச்சி பற்றிய இவர்களின் பின்தங்கிய வலது பார்வையையே காட்டு கிறது. மேலும், இந்தியா முழுவதும் ஒரே திட்டத்தை நடைமுறைப்படுத்த முயல் வதன் எந்திர கதியான செயல்பாடு கூட மேற்கண்ட தவறிற்கு மற்றொரு காரணமாகும். இதனால்தான் இன்றைய அளவில் கூட தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் இவர்களால் வளரமுடி யாமல் பின்னடைவுக்குள்ளாவது ஆகும்.

இதே போல், இடது போக்கினரின் திட்டம் மொழிவழித் தேசியங்கள் எத்தனைக்கு பொருத்தமாக இருக்கும்? இன்றைய பீகாரில் பொருந்துமா? இப்படி இந்தத் திட்டங்களுடன் பொருந்தா எதார்த்தங்கள் நிறைய உண்டு, உண்மை யில் வளர்ச்சி அடைந்த மாநிலங்களாக சொல்லப்படும் தமிழ் நாடு, பஞ்சாபிற்கு ஒரே திட்டத்தை வைக்க முடியுமா என்பதே கேள்விக் குறிய விசயமாகும்.

மேற்கண்ட தவறுகளின் படிப்பி னைகளில் இருந்து பார்ப்போமா னால், இந்தியாவில் சாதி-அரைநில வுடைமை நிலவும் பகுதிகளில் புரட்சிக்கான கட்டம் பொதுவாக இருந்த போதிலும் விவசாயத் திட்டங் களின் கூறுகளில் தரப்படும் முதன்மை தன்மைகள் மாறுபடும். இதுதான் அப்பகுதி மக்களை திரட்டுவதை தீர்மானிக்கிறது. ஒரே திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படும் பொழுதும் அப்பகுதிக்கு பொருந்தாத பொழுதும் தோல்வியைத் தழுவுகிறது.

எனவே, சாதி-அரைநிலவுடைமை நிலவுகின்ற பகுதிகளில் புதிய ஜனநா யகப் புரட்சிக்கான கட்டம் பொது வாக இருந்த போதிலும், திட்டத்தில் மக்கள் ஜனநாயக கூறுகளும், சோசலிச கூறுகளும் அளவிலும் தன் மையிலும் வேறுபாட்டையே கொண் டிருக்கும்.

அதே போல், பழங்குடி பகுதிகளில் சில ஜனநாயகக் கூறுகளைக் கொண்ட சோசலிச புரட்சிக்கான திட்டமும், சில மாநிலங்களில் விவசாயத்தில் முதலுடைமை பெருவீத உற்பத்தி பெரும்பான்மையான வளர்ச்சி அடையும் பட்சத்தில் சில மக்கள் ஜனநாயக கூறுகளைக் கொண்ட சோசலிச திட்டமும் முன் வைக்க வேண்டிவரும்.

ஒட்டுமொத்தத்தில், சோசலிச புரட்சிக் கட்டம், சோசலிசத்திற்கு முந்தைய கட்டமான புதிய ஜனநா யகப் புரட்சிச் கட்டம் என்ற இரண்டு வகையான கட்டங்களையும் புதிய ஜனநாயப் புரட்சி சோசலிசப் புரட்சி களை சாராம்சமாகக் கொண்டு, விவசாயத் திட்டத்தில் மாறுதல் களைக் கொண்ட ஒன்றுக்கு மேற் பட்ட திட்டங்களையும் கொண்டி ருக்கிறது என்பதே எதார்த்த உண்மை யாகும்.

புரட்சியின் இலக்குகள் ஏறத்தாழ எல்லோருக்கும் பொதுவாக இருப்பினும், இயக்கு சக்திகளில் வர்க்கம், சாதி, மதம், மொழி என்று கடும் மாறுபாடுகளைக் கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் சமூக வளர்ச்சி ஒரே மாதிரியாக இருக்கும் பட்சத்தில் அது பாட்டாளி வர்க்கத்திற்கு சாதகமானது. ஆனால், ஏற்றத்தாழ்வான பன்முக வேறுபாடுகள் என்பது ஆளும் வர்க்கங்களுக்கு சாதகமாக உள்ளது.

ஒரு பக்கம் இந்திய ஒருமைப் பாட்டை பற்றி ஆளும் வர்க்கங்கள் கதைத்த போதிலும் வேற்றுமைகளை முன்னிறுத்தி மக்களை சாதி, மத, பிரதேச ஏற்றத்தாழ்வுகளினடிப்படையில் பிளவுபடுத்தி திட்டமிட்டு மோதவிடு கிறது. வர்க்க ஒற்றுமைகளையும், மொழி வழி தேசிய வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் நோக்கில் ஒரு பக்கம் உழைக்கும் மக்களை பிளவுபடுத்துவதும் மறுபக்கம் அடக்குமுறையை கட்டவிழ்த் தும் விடுகிறது.

இந்திய பெரு முதலாளி வர்க்கத்தால் சந்தையில் கண்டெடுக்கப்பட்ட இந்திய ‘தேசியம்’ பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற இடைக்கட்டத்தில், ஒப்பிட்டளவில் முற்போக்கு பாத்தி ரத்தை வகித்தது. ஆனால், அரசியல் அதிகாரத்திற்கு வந்த பின்னரும், இன்றைய கட்டத்திலும் ஆளும் வர்க்கத் தின் தேசிய இனங்களுக்கெதிரான ஒடுக்குமுறையின் அடையாளமாகவே உள்ளது.

இப்படி ஒரே சமூகமாகவும், ஒரே தேசியமாகவும் யதார்த்தத்தில் இல்லாத சூழலில் பாட்டாளி வர்க்க கட்சி எவ்வாறு திட்டத்தை முன்வைப்பது? எத்தகைய புரட்சியை முன்னெடுப்பது? என்ற சிக்கலான கேள்விகள் முன் நிற்கின்றன.

ஒரு பக்கம் இந்திய ஆளும் வர்க்கங்கள் போலியான இந்திய தேசியம் என்ற ஒரே அடையாளத்தை முன்வைத்து அதே சமயத்தில் உழைக்கும் மக்களை பிளவு படுத்தி மோத விடுவதை செய்யும் பொழுது மறுபக்கம், பாட்டாளி வர்க்கக் கட்சி இயல்பான மொழிவழி தேசியங் கள் மற்றும் பழங்குடிகள் தங்களுக்கான சுதந்திர தேசங்களுக்கான தனிதிட்டத் துடன் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதும் அதே சமயத்தில் போலி இந்திய ஒன்றிய சிறைக்கூடத்தை தகர்த்து தன் விருப்பத்துடன் சுதந்திரமான தேசங்களின் கூட்டரசை உருவாக்கும் நோக்கோடு ஒருங்கிணைந்து போராடு வதற்கான திட்டத்தை முன் வைப்பதுமே அறிவியல் பூர்வமானதாக இருக்கும்.

எனவே, பாட்டாளி வர்க்கம் தங்களது தேசங்களைப் பற்றி பருண்மையான பகுப்பாய்வின் மூலம் மொழி வழித்ó தேசõய இனங்கள் மற்றும் பழங்குடி தேசங்களுக்கான திட்டத்தை, முன் வைத்து தங்களது தேசிய விடுதலையை முன்னெடுக்க வேண்டும்.

அதேசமயத்தில், பொது எதிரியான பலம் பொருந்திய இந்திய மண்டல வல்லரசை வீழ்த்த கூட்டக (federal) திட்டம் மிகவும் முன் நிபந்தனை யானது. பொதுவான வளர்ச்சிப் போக்கில் ஒருங்கிணைந்தே இந்திய அரசை வீழ்த்த முடியும். சர்வதேச, இந்திய சூழல்கள் சாதகமாக இருக்கும் பட்சத்தில் தனித்த விடுதலை சாத்தியம்.

தமிழ்த்தேசிய திட்டம்

முதலில் தமிழக வரலாற்றை சுருக்க மாக பார்ப்போம்!

தமிழகத்தை பொருத்தவரை திட்ட வட்டமான வர்க்க சமூகம் என்பது சங்க காலகட்டங்களிலே உருவானது. இதற்கு முன்பே உருவானதாக கருதப்படுகிற ஆதிச்சநல்லூர் போன்றவைகள் ஆராய்ச் சிக் கட்டத்தில் உள்ளன. சங்க காலம் சுமார் கி.மு.500-கி.பி.300 என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

சங்க காலக்கட்டத்தின் தொடக்கத்தில் இனக் குழுச் சமூகம் அழிக்கப்பட்டு அதன்மீது வர்க்க சமூக உருவாக்கங்கள் தொடங்கியது. இது படிப்படியாக குறுநில மன்னர்கள் உருவாக்கத்திலிருந்து பிரதேச அரசுகளாக உருவாக்கம் பெற்றது. தமிழகத்தில் சேர,சோழ,பாண்டிய, தொண்டை அரசுகள் இங்கு பிரதேச அரசுகளாக உருவாக்கப் பெற்றன.

இக்காலக் கட்டத்தில் பருவக்காற்றின் அறிவாக்கம் முறைப்பட்டதால், கடல் வாணிகம் செழிப்புற்றது. வாணிகத்தை சார்ந்து கைத்தொழில்களும், விவசாயமும் வளர்ச்சியுற்றன. வணிக செழிப்பானது உழவர்களில் ஒரு பிரிவினர் பெரும் நிலவுடைமையாளர்களாக மாற வழி வகுத்தது. அதே போல் வணிகர்களிலும் ஒருபகுதியினர் நிலவுடைமையாளர் களாக மாறி இருந்தனர். இவை மக்களி டையே பெரும் வர்க்கப் பிளவை ஏற்ப டுத்தியிருந்தன.

இக்கட்டத்தில் இறுதியாக ரோமின் வணிகத் தடை தமிழகத்தில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியது. பொருளா தார சீர்குலைவு, வறட்சி என்று சமூகத் தின் அவலங்களை இக்காலகட்டத்தின் இலக்கியங்கள் தெளிவாகவே படம் பிடிக்கின்றன.

இக்கட்டத்தில் ஆளும் வர்க்கங்களான நிலக்கிழாரிய வர்க்கங்கள் புதிய சமூக கட்டமைப்பை உருவாக்க பல்லவர்களின் ஆட்சியில் முயற்சித்துக் கொண்டிருந் தனர். இதற்கு எதிராக உழவர்கள் கடும் போராட்டத்தை நடத்தினர். இக்கட்டத் திலே களப்பிரர்களின் ஆட்சி (கி.பி.300-500)ஏற்பட்டது. களப்பிரர்கள் உழவர் களுக்கு ஆதரவாக பழைய காணியர் (உழவர்) உற்பத்தியே தொடர ஆதர வளித்தனர்.

அதே சமயத்தில் புதிய ஆதிக்க சக்தி களாக வளர்ந்து இருந்த நிலக்கிழார்கள் நிலவுடைமையை கட்டியமைக்க தீவிர மாயினர். இதன்விளைவே புதிய சமூக மாற்றத்திற்கு தடையாக இருந்த களப் பிரர்கள் ஆட்சியானது பல்லவர்-பாண்டியர்-சாதவாகனர் கூட்டின் மூலம் தூக்கியெறியப்பட்டது.

இது சைவ-சமண மோதலாக சித்தரிக்கப்பட்டு ஆயிரக்கணக்கில் உழவர்களே சமணர்களாக கொல்லப் பட்டனர் என்பதே தற்கால ஆய்வு களின் கேள்வியாகும்.

எப்படி இருப்பினும், புதிய சமூக மாற்றத்திற்கு தடையாக இருந்த களப் பிரர் ஆட்சி அகற்றப்பட்டு, எதிர்த்த உழவர்கள் கொல்லப்பட்டு, பிராமணர் கள் வெளியிலிருந்து கொண்டு வரப் பட்டு, புதிய ஆளும் வர்க்கமான வெள்ளா ளர்-பிராமண கூட்டிலே சாதிய நிலவு டைமைச் சமூகம் தமிழகத்திலே கட்டி அமைக்கப்பட்டது.

சாதி-நிலவுடைமை உற்பத்திமுறை பல்லவர் காலத்தில் தொடங்கி, பிற்கால சோழர்காலத்தில் திடப்படுத்தப்பட்டது. நாயக்கர் ஆட்சிக் காலத்தில் இறுக்க மடைந்தது.

சாதியடிப்படையில் பரம்பரை வேலைப்பிரிவினை, அகமணமுறை, தீட்டு என்ற கூறுகளுடன் சாதி-நிலவு டைமை கட்டியமைக்கப்பட்டது. வேலையின் தன்மை, எதிர்ப்பவர்கள், அரசாதரவு குழுக்களுக்கெதிரானவர்கள் என்று தீண்டத்தகாதர் சாதிகள் உருவா யின.

சாதியமுறை சமூக வளர்ச்சிக்கு பெரும் தடையாகவே நீண்டகாலங்கள் இருந் தன. இருப்பினும், பிரிட்டிஷ் வருகைக்கு முன்பே நெகிழத் தொடங்கியது. பட்டறைத் தொழில்கள் வளர்ச்சி பெற்றன.

இருப்பினும், கிழக்கிந்திய கம்பெனி யின் அபகரிப்புகளும் அழித்தல்களும் தென்னகத்திலிருந்தே தொடங்கின. பாளையக்காரர்கள் முதல் திப்புசுல்தான் வரை கிழக்கிந்திய கம்பெனிக்கெதிரான ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் இந்திய துணைக்கண்டத்தில் இங்கிருந்தே தொடங்கியது என்றால் மிகையாகாது.

பிரிட்டிசார் ஆட்சியின் பிறபகுதி களைப் போன்றே இங்கும் இந்திய பெருமுதலாளிகளும், மூலதன-சாதி-நிலக்கிழார்களும் உருவாயினர். சுதந்திரத் திற்கு பிறகும் இங்கு பலமான அதிகார வர்க்க முதலாளிகள் உருவாகி உள்ளனர் என்பதும் மிக முக்கியமாகும்.

அதே சமயத்óதில், தமிழகம் பாரம் பரியமிக்க போராட்டங்களைக் கொண்ட தொழிலாளர்களையும், விவசாயிகளையும் கொண்டது என் பதையும், பெரியாரின் சுதந்திர தமிழ்நாடு கனவு, இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாறு, இன்றைய ஈழவிடுதலை ஆதரவு கோபங்களை யும் கொண்டிருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவைகளுக்கு சாதகமான சமூக பொருளாதார மாற்றங்கள் உருவாகி வளர்கின்றன என்பதையும் தமிழ் தேசிய பாட்டாளி வர்க்கம் நினைவில் கொள்ள வேண்டும்.

இனி தமிழ்நாட்டின் தற்கால சமூக நிலைகளை பார்ப்போம்.

 தமிழ்நாட்டை பொருத்தவரை, மூலதன, சாதி-அரைநிலவுடைமை உற்பத்திமுறைகள் நிலவுகின்றன. பழங் குடிகளின் எண்ணிக்கை மிக குறைவான தால் தொல்குடி உற்பத்தி முறை என்பது தமிழகத்தை பொருத்தவரை மிக முக்கிய உற்பத்தி முறையாக இல்லை.

எனவே, தமிழ்நாடானது இந்திய பிராந்திய பெருமுதலாளிகள், மூலதன-சாதிநிலக் கிழார்கள், ஏகாதிபத்தியங்கள் மற்றும் அதிகாரவர்க்க முதலுடைமையின் சுரண்டல் காடாக உள்ளது.

மேற்கண்ட நிலையால் தமிழகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அடிப்படை முரண்பாடுகளை கொண்டதாக தொடக் கம் முதலே நீடிக்கிறது. இன்றைய தமிழகத்தை பொருத்தவரை கீழ்க்கண்ட அடிப்படை முரண்பாடுகள் நிலவு கின்றன.

(1) இந்திய மண்டல ஏகாதிபத்தியம் X பாட்டாளி வர்க்க மற்றும் இதர தமிழ்த் தேசிய மக்கள்

(2) ஏகாதிபத்தியங்கள் X பாட்டாளி வர்க்க மற்றும் இதர தமிழ்த்தேசிய மக்கள்

(3) அதிகார வர்க்க முதலுடைமைத்துவம் X பாட்டாளி வர்க்க மற்றும் இதர தமிழ்த்தேசிய மக்கள்

(4) சாதி - நிலவுடைமை X உழவர்கள் மற்றும் தலித்துகள், பெண்கள்

(5) இந்திய ஒன்றிய அரசமைப்பு X  தமிழ்த்தேசியம்

(6) முதலாளித்துவ மூலதனங்கள் X இயற்கை

மேற்கண்ட அடிப்படை முரண்பாடு களே இன்று தமிழக சமூகங்களை அடிப்படையில் இயக்கிக் கொண்டி ருக்கின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட அடிப்படை முரண்பாடுகள் தமிழ்த் தேசிய சமூகங்களில் நிலவுவதால், இம்முரண்பாடுகளை ஆதிக்கம் செய்யும் முதன்மை முரண்பாட்டை, மாறுகின்ற அரசியல் பொருளாதார சூழலுக்கேற்ப அடையாளங்கண்டு, குறிப்பான திட்டத் தையும் அதற்கான செயல் உத்திகளை யும் வகுத்து செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் சில முக்கிய (அ) பெரிய முரண்பாடுகள் அவை அடிப்படை முரண்பாடுகளின் கூறுகளில் உள்ளடங்கி இருந்தாலும் தனித்த அடையாளங் களுடன் செயல்பட்டுக் கொண்டிருக் கின்றன. அவை

1. இந்திய ஆளும்வர்க்கங்களுக் கிடையிலான முரண்பாடு

2.தமிழ்த்தேசிய வளர்ச்சி X இந்திய தேசியம்

3. தமிழ் தேசிய வளர்ச்சி X சாதியம்

4. சாதியம் X தாழ்த்தப்பட்டவர்கள்

5. ஆணாதிக்கம் X பெண்கள்

6. இந்துத்துவ பயங்கரவாதம் X மதச் சிறுபான்மையினர்

7. தமிழ் பெருந்தேசிய இனம் X மொழிச் சிறுபான்மையினர்

8. தமிழ்த்தேசிய வளர்ச்சி X தமிழக பிராந்திய ஏற்றத்தாழ்வுகள்

9. பழங்குடியினர் X பழங்குடி அல்லாதோர்

10. தமிழ்த்தேசியம் X அண்டை தேசிய இனங்கள்

11. தமிழ்த் தேசியம் X இந்திய விரிவாதிக்கம்

12. தமிழ்த் தேசியம் X சிங்கள பேரினவாதம் (இலங்கை அரசு)

என முக்கிய (அ) பெரிய முரண்பாடு கள் நிலவுகின்றன. இவைகளில் சில முரண்பாடுகள் அடிப்படை முரண் பாடுகளின் இயக்கப் போக்கின் தீவிரத் தால் கடுமையாகி தற்காலிக முதன்மை முரண்பாடாகவோ மண்டலம் (அ) வட்டாரம் சார்ந்து முக்கிய முரண் பாடுகளாகவோ முன்னுக்கு வரும். இவை களை கையாளும் பொழுது வர்க்க கண்ணோட்டத்திலிருந்து எச்சரிக்கை யாக கையாள வேண்டும். இல்லை எனில் ஆளும் வர்க்க நலனுக்கும் சதிக்கும் இரையாக வேண்டி இருக்கும்.

தமிழó தேசியப் புரட்சியின் இலக்குகள் மற்றும் இயக்கு சக்திகள்

இனி இவர்களைப் பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

இலக்குகள்

(1) இந்திய பிராந்திய பெருமுதலாளி வர்க்கம்

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்திய துணைக் கண்டத்தில் இயல்பான பட்டறை முதலாளியத்தை அழித்து, தனது கட்டுப்பாட்டிற்குள் இந்தியப் பெருமூலதனத்தை அனுமதித்தது. இந்தியப் பெருமுதலாளிகளின் தோற்றம் என்பது எந்த தேசியத் தையும் சார்ந்து வரவில்லை. அதே போல், தனது நலனை புறக்கணித்து விட்டு ஏகாதிபத்தியத்திற்கு ஏஜெண் டாகவும் உருவாகவில்லை.

இந்திய துணைக்கண்ட சந்தை பலத்திலேயே பிராந்திய பெரு முதலாளி வர்க்கம் என்ற தனிப் பண்போடு தனது சொந்த நலனுக்காக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை சார்ந்து சார்பு மற்றும் கூட்டு என்ற தன்மை யில் வளர்ந்தது. தனது நலனிறóகாக தந்திரமாக செயல்படுதல் (அ) பேரம் என்ற உத்திகளையே முதன்மையாக கொண்டிருந்தது. இரண்டு உலகப் போர்களிலும் தன்னை பலப்படுத்திக் கொண்ட பெருமுதலாளி வர்க்கம் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பின் உச்சகட்டத்தை காட்டி சமாதான பூர்வமாகவே அரசியல் அதிகாரத்தை கைப் பற்றியது.

1947க்கு பிறகு சில ஆண்டுகள் சார்பு மற்றும் கூட்டு என்பது முக்கிய போக்காக தொடர்ந்தாலும், அமெரிக்க மற்றும் சோவியத் இரஷ்யாவிற்கு இடையிலான பனிப்போரை பயன்படுத்தி தங்களை வளர்த்துக் கொண்டனர். இதை இந்திய பிராந்திய பெரு முதலாளிகளின் வளர்ச்சி யின் முதல் கட்டம் என்று கூறலாம்.

1960க்கு பிறகு அதிகார வர்க்க மூல தனத்தை சார்ந்து தன்னை முழுமையாக பலப்படுத்திக் கொண்டனர். உலக மூல தனச் சுரண்டலில் பங்குதாரர் ஆக, போட்டியிட தன்னை தயார்படுத்திக் கொண்டனர். இதுவே இரண்டாவது கட்டமாகும்.

மூன்றாவது கட்டம் 1990க்கு பிறகு உலகமயமாக்கலுடன் தொடங்குகிறது. தாராளமயமாக்கல், தனியார்மயமாக்க லில் ஏகாதிபத்தியங்களுடன் போட்டி போடுவது மட்டுமல்லாமல், தங்களது மூலதனத்தை விரிவுபடுத்தவும் செய்துள் ளனர். கடந்த இருபதாண்டுகளில் தெற் காசிய பிராந்தியத்தில் அரசியல் ஆதிக் கத்தை மட்டுமல்லாமல் பொருளாதார ஆதிக்கத்தையும் அடித்தளமாக்கி தெற் காசிய பிராந்திய ஏகாதிபத்தியமாக தன்னை வளப்படுத்திக் கொண்டுள்ளனர்.

தெற்காசியா மட்டுமல்லாமல் இதர கண்டங்களிலும் தனது மூலதனத்தை விரிவுபடுத்தியுள்ளனர். உலகின் முதன்மை யான 2000 கம்பெனிகளில் 56 இந்திய கம்பெனிகளாகும். டாடா, பிர்லா போன் றவர்களின் மொத்த வருவாயில் 50% க்கு மேல் இந்தியாவிற்கு வெளியில் இருந்து வருகிறது. இன்று உலக அளவில் ஏகாதிபத்தியங்களின் பங்காளிகளாக மாறியுள்ளனர்.

இந்திய நாட்டரசை தீர்மானிப்பதும் ஏகாதிபத்தியம் மற்றும் மூலதன-சாதி கிழார்களை தமிழ்நாட்டை சூறையாட விடுவதும் இந்தியப் பெருமுதலாளி வர்க்கமே ஆவர். இவர்களே தமிழ்த் தேசிய புரட்சியின் முதன்மை இலக்கு ஆவர். இவர்களுக்கு எந்தவித தேசியத் தன்மையும் கிடையாது. பிற்போக்குத் தனமான பிராந்திய, விரிவாதிக்கத் தன்மை கொண்டவர்கள் ஆவர். சில இனவாத கும்பல்கள் தமிழ் பேசும் இந்தியப் பெருமுதலாளிகளை தமிழ்த் தேசிய போராளிகளாக சித்தரித்து பிரச்சாரம் செய்கின்றனர். இவர்களின் இந்தியப் பெருமுதலாளிவர்க்க அடிவரு டித்தனத்தையும் துரோகத்தனத்தையும் அம்பலப் படுத்தி, இவர்களை தனிமைப் படுத்த வேண்டும். ஏனெனில், இந்திய பிராந்திய பெருமுதலாளி வர்க்க உருவாக்கத்தின் கருவாக உருவான வர்கள்தான் தமிழ்பேசும் இந்தியப் பெரு முதலாளி களும் ஆவர். இவர்கள் இன்று வரை அனைத்து மக்கள் விரோத செயல் களிலும் ஒன்று கலந்தவர்கள்தான்; இவர் களை தனியாக பிரிக்க முடியாது. எனவே எவ்வித தயவு தாட்சண்யமின்றி இந்திய பெருமுதலாளி வர்க்கத்தை தூக்கியெறி வது என்பதே தமிழ்தேச விடுதலையின் மைய இலக்காகும்.

ஏகாதிபத்தியங்கள்!

காலனிய ஆட்சிக் காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்திய துணைக்கண்டத் தை சுரண்டிக்கொண்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஏகாதிபத்தியங்களும் சுரண்டிக் கொண்டிருந்தன.

1947க்கு பிறகு பிரிட்டிஷ் மூலதனம் பின்னுக்கு தள்ளப்பட்டு அமெரிக்காவின் மூலதனம் முன்னுக்கு வந்தது. அமெரிக்கா மற்றும் சோவியத் சமூக ஏகாதிபத்தி யத்தின் போட்டிக்களமாக இந்தியா மாறியது.

இந்திய பெருமுதலாளி வர்க்கம் அதிகாரவர்க்க மூலதனத்தை சார்ந்து தன்னை பலப்படுத்தி கொண்ட பிறகு, அதாவது 60களுக்கு பிறகு ஏகாதிபத்தி யங்களின் மூலதனம் என்பது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

1990களுக்கு பிறகு உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் மற்றும் தனியார்மய மாக்கலின் மூலம் பெருவாரியான நிதிமூல தனங்கள் குவிகின்றன. இதன் விளைவாக தமிழகம் ஏகாதிபத்தியங்களின் வேட்டை காடாகி உள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் விளை நிலங்கள், கடல்வளங்கள் என்று பெருமளவில் கொள்ளை போகின்றன. தமிழகத்தின் இயற்கை வளங்களையும் தொழிலாளர், விவசாய, மீனவர்களின் வாழ்வை பாதுகாப்பது என்பது ஏகாதிபத்தி யங்களை தமிழ்நாட்டிலிருந்து விரட்டு வது என்பதுதான்.

மூலதன-சாதி-நிலக்கிழார்கள்

இந்திய துணைக்கண்டத்தில் ஏற்கன வே இருந்த சாதி-நிலக்கிழார்களில் தங்களை எதிர்த்தவர்களை அழித்து விட்டு, தங்களுக்கு விசுவாசமானவர் களை வைத்து, கிராமப்புறங்களை தங்களது விவசாய பண்ணைகளாக மாற்றியமைத்தது, கிழக்கிந்திய கம்பெனி. இதில் உருவானவர்களே இந்த மூலதன-சாதி-நிலக்கிழார்கள்,

இவர்கள் ஒருபக்கம் பிரிட்டிஷ் கம்பெனிகளுக்கு கச்சாப் பொருட் களை ஏற்றுமதி செய்தும், இந்திய சந்தைகளுக்கு விளைபொருட்களை உற்பத்தி செய்தும், மண்டிகள் மற்றும் அன்றைய போக்குவரத்துகளுக்கு சொந்தகாரர்களாகவும், முதலுடை மையின் அம்சங்களை கொண்டு இருந்தனர். மறுபக்கம், சாதிய சுரண்டல், கொத்தடிமை, கந்து வட்டி, கிராம ஆதிக்கம், குத்தகை சுரண்டல் என்று நிலவுடைமையின் அம்சங்களையும் கொண்டிருந்தனர்.

இதனால் இவர்கள் அரைநிலவுû டமையின் கிராம எசமானர்களாகவும், ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்யும் கிராம சேவகர்களாகவும் மூலதன-சாதி-நிலக்கிழார்கள் என்னும் புதிய வர்க்கமாக மாற்றம் பெற்றனர்.

1947க்கு பிறகு இந்தியப் பெருமுத லாளி வர்க்கம் இவர்களை (மூ.சா.நி) அழிக்காமல் தங்களுக்கு கட்டுப்பட்ட கூட்டாளிகளாக மாற்றிக்கொண்டனர்.

இன்று இவர்கள் தங்களை நவீனமாக மாற்றிக்கொண்டு வருகின்றனர். ஒரு பிரிவினர் முதலாளிகளாகவும் வேறு பிரிவினர் தாங்கள் சார்ந்த சாதி அடையா ளங்களை முன்னிறுத்தி வட்டாரங்களில் அரசியல் சக்திகளாக உருவெடுக்கின்றனர். இதன் மூலம் அதிகாரவர்க்க முதலாளி களாக மாறுகின்றனர்.

தமிழக கிராமப்புறங்களில் பிற்போக் குத் தனங்களையும், தமிழ்த்தேசிய வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் சாதியத் தையும் கட்டிக்காக்கும் இந்த பிற்போக்கு ஆதிக்க சக்திகளே உடனடியாக வீழ்த்தப் படவேண்டிய இலக்காகும்.

அதிகாரவர்க்க முதலாளிகள்

பிரிட்டிஷ் ஆட்சியின்போது பயிற்று விக்கப்பட்ட அதிகாரவர்க்கம் மற்றும் அரசியல் தரகர்கள், 47க்கு பின் முக்கிய பங்கை வகித்து வருகின்றனர். இந்திய பெரு முதலாளி வர்க்கம் தன்னை திடப்படுத்திக் கொள்வதற்காக, தனது நலனிலிருந்து அரசு மூலதனத்தை வளர்த் தெடுத்தது. இதில் புதிய வர்க்கமாகவே மேற்கண்ட அதிகார தரகர்களும், அரசி யல் தரகர்களும் அதிகாரவர்க்க முதலாளி களாக உருவாயினர்.

இவர்கள் அரசின் வர்óக்கத்தன் மையில் இருந்து இந்தியப் பெருமுத லாளிகளின் நலனையும், அவர்களின் கூட்டாளிகளான ஏகாதிபத்தியம் மற்றும் மூ.சா.நிலக்கிழார்களின் நலன்களையும் பாதுகாப்பவர்களா கவே செயல்படுகின்றனர். இவர்களே இவர்களின் தரகர்களாக (அ) ஏஜெண் டுகளாக செயல்படுகின்றனர்.

இவர்களில் ஒரு பிரிவினரான அதிகார வர்க்கமானது பொதுத்துறை இயக்குநர் களாக பெரும் விசியங்களை தீர்மானிக் கின்றனர். நிறுவனப் பங்குகளில் முக்கிய பங்குதாரர் ஆகிறார்கள். பொதுத்துறை யை தனியார்மயமாக்குவது என்பதில் பெரும் பலனை அடைகிறார்கள். ஓய்வு பெற்றதும் தனியார் நிறுவனங்களுக்கு அதிகாரி (அ) தலைவர் (அ) ஆலோசகர் சட்ட ஆலோசகர்களாகவே தங்களது அந்தஸ்தை தொடர்வது என்பது இன்றைய அதிகாரவர்க்க முதலாளி வர்க்கத்தின் சிறப்பியல்பாகும்.

மற்றொரு பிரிவினரான அரசியல் தரகர்கள் தங்களது அரசியல் கட்சிகளுக் கான நிதியை ஆளும் வர்க்கத்திடமிருந்து பெருமளவில் பெறுகின்றனர். எனவே அவர்ளுக்கு சாதகமான நடவடிக்கை களை மேற்கொள்வதையே தங்களது கடமையாக கொள்கின்றனர்.

மொத்தத்தில், அதிகார வர்க்க முத லாளிகள் சட்டங்களை இயற்றுதல், செயலாற்று ஆணைகள், நீதிமன்ற உத்தரவுகள், திட்டங்கள், மக்கள் நலத் திட்டங்கள், பராமரிப்பு, ஒப்பந்தங்கள், இவற்றில் பெரும் பங்கை லஞ்சமாகப் பெறுகின்றனர். கடன்கள், மானியங்கள், நிதி ஏஜெண்டுகள், அந்நிய செலவாணி, வரி ஏய்ப்பு, தொழில் உரிமங்கள் என்று அனைத்திலும் பெருமளவு அட்டை போல் உறிஞ்சி எடுக்கின்றனர். தங்களது எசமானர்களுடன் சேர்ந்துக் கொண்டு தங்களது அரசாங்கத்தையே திவாலாக்கு கிறார்கள்.

அரசாங்க நிலங்கள், புறம்போக்கு நிலங்கள், விவசாய நிலங்கள், காட்டு வளங்கள், குவாரிகள், சுரங்கங்கள் என்று இயற்கையையே தங்களுக்கு முழுமை யாக பட்டாவாக்கிக் கொள்கிறார்கள்.

கூலிக்கொலை பட்டாளத்தை உரு வாக்குவது, ரவுடி கும்பல்களை உரு வாக்குவது, கட்டப்பஞ்சாயத்து, கள்ள கடத்தல், விபச்சாரம், சூதாட்டம், நிதிமோசடி கம்பெனிகள், போதை பொருட்களை தயாரித்தல், போதை பொருட்களைத் உற்பத்தி செய்தல் விற்றல் மற்றும் அனைத்து வகையான குற்றங்களுக்கும் உதவியாக இருத்தல் (அ) செய்தல் என்ற தன்மைகளில் இவர்கள் நேரிடையாக ஈடுபடுகின் றனர்.(அ) துணைபுரிகின்றனர் என்ற அளவில் இவர்கள் சமூக விரோத கும்பல் களாக கூட உள்ளனர்.

இவர்கள் தங்களது கொள்ளைகளை பினாமிகள் (அ) உறவினர்கள் மூலமாக பங்குகளாகவும் சொத்துகளாகவும் மாற்றுகின்றனர். இதன்மூலம் இவர்களில் ஒரு பகுதியினர் பெருமுதலாளிகள் பட்டியலில் சேருகின்றனர். தமிழ் நாட்டைச் சேர்நத கருணாநிதி குடும்பம், ஜெ-சசி குடும்பம், இராமதாசு குடும்பம் நல்ல எடுத்துக்காட்டுகளாகும்.

இவர்கள் ஊடகங்கள், திரைத்துறை, தொழில்கள், சிமெண்ட், அனைத்து போக்குவரத்து துறைகள்,ஸ்டார் ஓட்டல் கள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறு வனங்கள், பண்ணைகள், தோட்டங்கள், மீன்பிடி கப்பல்கள், நிதி நிறுவனங்கள், வெளி நாட்டில் மூலதனமிடுதல், வெளி நாட்டு வங்கிகளில் பதுக்குதல் என்று அனைத்து இடங்களிலும் பரவி விரவி உள்ளனர்.

இவர்கள் தங்களது கொள்ளைகளை இன்றைய கட்டத்தில் ஒழுங்குமுறைக்கு உட்படுத்தி நிறுவன மயமாக்குகின் றனர். ஆளுங்கட்சி, எதிர்கட்சி, இதர கட்சிகள் மற்றும் உயரதிகாரிகள், கீழ் மட்ட அதிகாரிகள் என்று சதவீத கணக்கில் பங்கைப் பிரிக்கின்றனர். தலைமை அரசியல் வாதியிலிருந்து கீழ்மட்ட வார்டு மெம்பர் வரையிலும் தலைமை அதிகாரி கள் முதல் கீழ்மட்ட கி.நி.அ வரையிலும் நிர்ணயிக்கப்பட்ட பங்கு போய்ச் சேருகிறது.

அதனால்தான், நாம் உள்ளுர்களில் இவர்களின் செழிப்பை பார்க்க முடிகிறது. தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் களில் 306 பேர் கோடீஸ்வரர்கள், இதில் பாதிப்பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வர்கள். இவர்கள் கொடுத்த கணக்கின்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த சொத்து டூரூ450 கோடியாகும். இவர்கள் மூன்றாவது இடத்தை பிடிக்கின்றனர்.

எனவே, ஒருசில விதிவிலக்கு தவிர மற்றவர்கள் இவர்களின் எசமானர்க ளோடு தூக்கி எறிய வேண்டிய இலக்காவர்.

அடுத்ததாக, அதிகாரவர்க்க மூலதனத் தின் வளர்ச்சி பிரமிப்பூட்டக் கூடியது. அறுபதுகளில் ஏகாதிபத்திய நிதிமூலதனத் தை மூன்றாவது இடத்திற்கு தள்ளிவிட்டு, முதல் இடத்தை பிடித்த அதிகாரவர்க்க மூலதனம் இன்றும் அதே இடத்தில் தொடர்கிறது. சில கோடிகளில் தொடங் கிய சில நிறுவனங்கள் இன்று 1லட்சம் கோடிக்கு மேல் சொத்துகளைப் பெற் றுள்ளன. (எல்.அய்.சி., இந்திய எண் ணெய் நிறுவனம், ஸ்டேட் வங்கி போன்றவை)

மேலும், உலகமயமாக்கலுக்கு பிறகு இந்திய அதிகாரவர்க்க மூலதனத்தின் பிடி தெற்காசிய நாடுகளில் பலமாக இறுகி உள்ளது. இதன் மூலம் தெற்காசிய பிராந்திய அதிகாரவர்க்க ஏகாதிபத்திய மாக வளர்ந்துள்ளது. இதர கண்டங் களுக்கும் தன்னை விரிவுபடுத்திக் கொண் டுள்ளது. தமிழ்தேச விடுதலையில் அதி காரவர்க்க மூலதனம் கைப்பற்றப்பட்டு, அதன் வர்க்கத்தன்மை மாற்றியமைக்கப் பட வேண்டும்.

மேற்கண்ட நான்கு இலக்குகளும் தமிழ்தேச புரட்சியில் தூக்கி எறிய வேண்டிய இலக்குகளாகும்.

இயக்கு சக்திகள்

புரட்சிகர வர்க்கங்கள்

(1) தொழிலாளர்கள்

தமிழ்த்தேசிய விடுலையின் முதன்மை அடிப்படை இயக்குசக்தி தொழிலாளி வர்க்கமே ஆகும். இதில் நவீன ஆலைத் தொழிற்சாலைகளின் முன்னேறிய தொழிலாளி வர்க்கமான பாட்டாளி வர்க்கமே தமிழ்த்தேசிய விடுதலையின் தலைமை சக்தியாகும். பாட்டாளி வர்க்கம் மட்டுமல்லாது அமைப்பாக்கப் பட்ட தொழிலாளர்கள், அமைப்பாக்கப் படாத தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் என்று சுமார் 2கோடி பேர் உள்ளனர். இவ்வர்க்கமே தமிழ் நாட்டில் பெரிய வர்க்கமாகும். ஆனால், இதில் பெரும் பகுதி கிராமப்புற மக்களே ஆவர். இவர்களின் நிலையற்ற தன்மை யை அதாவது, நகரும் தன்மையை கணக்கில் கொள்ள வேண்டும்.

நவீன பாட்டாளி வர்க்கம் சுமார் 10லட்சம் என்ற சிறிய பிரிவினராக இருப்பதால், இது இதர தொழிலாளர்கள் மற்றும் அமைப்பாக்கப்படாத, விவசாயத் தொழிலாளர்களையும் அணி திரட்ட வேண்டி உள்ளது. மொத்தத்தில் தொழி லாளி வர்க்கம் என்ற இந்த பிரிவினரின் எண்ணிக்கை என்பது தமிழ்நாட்டுக்கே உரிய சிறப்பம்சமாகும். இவர்கள் தமிழ் நாட்டின் உழைப்புச் சக்திகளில் 60% மேலானவர்கள் ஆவர். இவர்கள் தமிழ் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 30% சதவீதம் ஆவர்.

கடந்த சில பத்தாண்டுகளில் தமிழகத் தில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவே இதுவாகும். நகர்ப்புற மக்கள் தொகை 50% நெருங்கிக் கொண்டிருக்கிறது. இது இந்தியாவின் சராசரியை விட மிக அதிகமாகும். இது மட்டுமல்லாமல் நகரும் மக்கள் தொகை என்பது நாளுக்குநாள் பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கிராமப்புறங்களில் உழைப்புச் சக்தி களை உள்வாங்கக்கூடிய சரியான விவசா யப் பொருளாதார உற்பத்திமுறை இல்லாததால் மக்கள் இதர வாய்ப்புகளை தேடி நகருகின்றனர். ஆனால், இவர்களை முழுமையாக உள்வாங்கும் பலத்தையும் நகரங்கள் கொண்டிருக்கவில்லை. இதனால், நிலையற்ற வாழ்க்கை யுடையோரின் எண்ணிக்கை மிகவும் அபாயகரமாக உள்ளது. இந்நெருக்கடி சமூக மாற்றத்தின் தேவையை ஆழப் படுத்துவதன் மூலம் விரைவுபடுத்துகிறது.

கல்வி வளர்ச்சியும், நகர்புறமய மாக்கலும் ஒருவிதத்தில் இறுகிப்போன கிராமப்புற சாதியச் சிந்தனையிலிருந்து நெகிழ்வடையச் செய்கிறது. இது வர்க்கப் போராட்ட அணிதிரட்டலுக்கும் தமிழ்த் தேசிய விடுதலையின் வளர்ச்சிக்கும் உதவிகரமாகவே இருக்கும்.

(2) விவசாயிகள்

அ) கூலிவிவசாயிகள்

கிராமப்புறங்களில் உழைக்கும் வர்க்கத் தின் பெரும்பகுதி இவர்களேயாவர். எளிய சிறு உழைப்புக் கருவிகளை கொண் டிருக்கும் இவர்களை மார்க்ஸ் அரைப் பாட்டாளி வர்க்கம் என்று குறிப்பிடு கிறார். அதே சமயத்தில் இவர்கள் நில மற்றவர்களாகவும் உழைப்பை சுதந்திர மாக விற்கும் தொழிலாளர்களாகவும் உள்ளனர்.

இவர்களுக்கு மூலதன-சாதி-நிலக் கிழார்கள், கோயில், மடங்கள் மற்றும் அரசின் நிலங்களும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அதே சமயத்தில் கூட்டுப் பண்ணைகளுக்கான தேவைகளை தொ டக்கத்திலிருந்தே உணர்த்த வேண்டும்.

(ஆ) குறு, சிறு, நடுத்தர விவசாயிகள்:

தமிழகத்தில் விவசாய உடைமை உரிமைகளில் தலையாய சிக்கல் நிலம் துண்டுபடுதலே ஆகும். தமிழ்நாட்டின் நிகர சாகுபடி பரப்பு-55லட்சம் ஹெக் டேர் ஆகும். இதன் உடைமைகளின் எண்ணிக்கை 80 லட்சங்கள் (2004-5) ஆகும். 1ஹெக்டேருக்கு குறைவாக குறு விவசாயிகள் 59 லட்சங்களும் 2 ஹெக் டேருக்கு கீழே சிறு விவசாயிகள் 12 லட்சங்களும் கொண்டுள்ளனர். மொத்த பாசன நிலத்தின் உரிமையில் 85%க்கு மேல் குறு, சிறு விவசயாயிகளே பெற்றுள்ளனர்.

 கிராம கூட்டுச் சொத்துடைமையின் தகர்வு நிலம் துண்டுபடுதலில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. அது மட்டு மல்லாமல், அரசின் சீர்திருத்தங்களான குத்தகைதாரர் சட்டம், நிலம் அளித்தல் போன்றவை களும் சிறிய அளவு பங்கை கொண்டிருக் கின்றன. இவை மட்டு மல்லாமல், இயற் கையின் சிக்கல், நதிநீர், சிக்கல், அராஜக சந்தையின் பாதிப்புகளினால் விவசா யத்தில் இருந்து பகுதி அளவை விற்பது என்பதும், நகர் புறத்தைச் சேர்ந்த நடுத்தரவர்க்கத்தினரின் உடைமைகளு மாக பல காரணிகள் உள்ளன.

எப்படி இருப்பினும், உற்பத்தி சக்தி களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் நிலம் துண்டுபடுதல் என்ற சிக்கலை தீர்ப்பதே தமிழக விவசாய சிக்கலின் மையக்கடமையாகும். இச்சிக்கலை பாட்டாளி வர்க்கம் கூட்டு உடைமை என்ற சோசலிச தீர்வின் மூலமே தீர்க்க முடியும். இதன் மூலம் கட்டுபடுத்தப் பட்ட நிலக்குவிதல் நடைபெறும். மேலும் இதற்கு உதவிகரமாக உற்பத்தி கருவிகள், மூலதனத்திற்கான கூட்டுறவு கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இன் றைய சுதந்திரமான போட்டி என்ற பெயரில் உள்ள அராஜகவாத சந்தைக்கு பதிலாக, உழவர்களால் கட்டுப்படுத்தப் படும் சந்தை உருவாக்கப்பட வேண்டும்.

(இ) குத்தகை விவசாயிகள்

தமிழகத்தில் அரசு விவரப்படி சுமார் 9 லட்சம் ஏக்கர் அறக்கட்டளைகள், கோயில்கள், சத்திரங்கள், மடங்களுக்கு சொந்தமாக உள்ளது. இதில் 5.5 லட்சம் குத்தகைதாரர்கள் என குறிப்பிடப் படுகிறது. இது உள் குத்தகை சார்ந்து 20 லட்சமாக குத்தகைதாரர்கள் இருக்கலாம் என்று இதர ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதில் தஞ்சை போன்ற மாவட்டங் களில் கணிசமாக தாழ்த்தப்பட்டோர் உள்ளனர். மேலும், அதிக எண்ணிக்கை யில் குத்தகை எடுப்போரும் (10ஹெக்டே ருக்கு மேல்) உள்ளனர். எனவே, குத்தகை தாரரின் தன்மைக்கேற்பவே “உழுபவ னுக்கே நிலம் சொந்தம்” என்ற முழக்கத் தின் அடிப்படையில் நிலத்தை சொந்த மாக்க வேண்டும். இதர நிலங்களை நிலமற்றோருக்கு வினியோகிக்க வேண்டும்.

தனியார் நிலங்களின் குத்தகைகளில் எதிர் குத்தகையை (reverse tenancy) கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே, குத்தகை சிக்கலை பொருத்த வரை குறித்த நபரின் தன்மையிலிருந்தே தீர்மானிக்க வேண்டும்.

(ஈ) பணக்கார விவசாயிகள்

பணக்கார விவசாயிகள் என்போர் கிராமப்புற முதலாளிகள் ஆவர். எனவே, இவர்கள் தேசிய முதலாளிகளின் பண்பை பெற்றுள்ளனர். இதனால், பெருமுதலாளி வர்க்கத்துடனும், ஏகாதிபத்தியத்துடனும் முரண்படுகின்றனர். அதே சமயத்தில் இவர்களின் ஊசலாட்டத்தின் காரணமாக புரட்சியில் ஒரு பகுதியினர் நடுநிலை வகிப்பர்.

இவர்களுக்கான விவசாய உடைமை களை அனுமதிக்கும் அதே வேலையில், குத்தகை நிலங்களை இவர்களின் உடைமையின் அளவில் இருந்தே அணுகவேண்டும். இவர்கள் தமிழ் தேசிய விடுதலையில் ஊசலாடும் கூட்டாளி களாவர்.

(3) குட்டி முதலாளி வர்க்கம்:

கைத்தொழிலர், சிறுவணிகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு ஊழி யர்கள், அறிவுஜிவிகள், பொறியாளர்கள், மருத்துவர், வழக்குரைஞர்கள் போன் றோர் இந்த வர்க்கத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

இப்பிரிவினரில் ஒரு பகுதியினர் இன்றைய நிலையில் ஈழச்சிக்கலை ஒட்டி தமிழ்தேசிய விடுதலையில் ஆர்வமுடை யோராய் உள்ளனர்.

இப்பிரிவினரில் கீழ் நடுத்தர வர்க்க தன்மையை கொண்டோரே உறுதியான கூட்டாளிகளாக இருப்பர். மற்றவர்கள் ஊசலாடும் தன்மையையே வெளிப் படுத்துவர்.

(4) தேசிய முதலாளி வர்க்கம்

 தேசிய முதலாளி வர்க்கம் என்று இங்கு குறிப்பிடுவதின் பொருள் இம்முதலாளி வர்க்கம் மூலதன அளவில் சிறியதாக இருப்பதால் பெருமுதலாளி களின் தன்மையை பெற்றிருக்கவில்லை என்பதுதான். இவர்களின் பலவீனத் தன்மையில் இருந்து இந்தியப் பெரு முதலாளி வர்க்கம் மற்றும் ஏகாதிபத்திய மலைகளால் கடுமையாக அழுத்தப் படுகின்றனர்.

இதனால் இவர்கள் முரண்பட்டாலும், தேசிய சந்தையை வளர்த்தெடுக்க தயாராக இல்லாமல் இந்திய அளவிலான பிராந்தியத்தன்மையில் வளர்வதையே தங்களது கனவாகவும் முயற்சியாகவும் கொள்கின்றனர். அதனால் இவர்கள் புரட்சியில் ஊசலாடும் பிரிவினரே ஆவர்.

மேற்கண்ட நான்கு வர்க்கங்கள் மட்டுமல்லாமல் சிறு கருவிகளை உடைமையாக கொண்ட தச்சர், மெக் கானிக் போன்ற அரைப்பாட்டாளி வர்க்கமும் உற்பத்தியில் ஈடுபடாத திருட்டு, ரவுடித்தனம், கடத்தல், விபச்சாரம் போன்ற தொழில்களில் ஈடுபடும் உதிரிபாட்டாளி வர்க்கங் களும் கணிசமானோர் உள்ளனர்.

இவர்களில் உதிரி பாட்டாளி வர்க்கத் தின் ஒரு பகுதி எதிர்ப்புரட்சிகர சக்தி களாக அரசால் மாற்றப்படுவர்.

புரட்சிகர சிறப்பு பிரிவினர்

இவர்கள் உற்பத்தியில் நேரிடையாக வர்க்க பாத்திரத்தை வகிப்பவர்கள் அல்ல. அதே சமயத்தில் ஒரு சிறுபிரிவினர் ஆளும் வர்க்கத்தில் இருந்தபோதும், இவர்களில் பெரும்பான்மையினர் அரசியல், சமூக, பொருளாதார தளங்களில் ஒடுக்கப் படுகின்றனர்.

எனவே, இவர்களில் பெரும்பான்மை யோர் அரசியல் அதிகாரத்தையும், உற்பத்தி சாதனங்களையும் கைப்பற்றும் தேவையில் உள்ளனர். எனவே, தமிழ்த் தேச விடுதலையில் இயக்கு சக்திகளாக தங்களது வர்க்கத் தன்மைகேற்ப இவர்கள் வினையாற்றுவர்.

பெண்கள்

தமிழகத்தில் சங்ககாலத்தில் வர்க்க சமூக உருவாக்கத்துடன் பெண்ணடிமைத் தனம் உருவானது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் அடிமைகளாக உள்ள ஓர் இனம் பெண்களாகத்தான் இருப்பர். சிறுவர் திருமணம், கற்பு பேணுதல், கைம் பெண்நிலை, தாசிகளாக்குவது என்று தொடர்ந்து இவர்களின் மீது சொல்ல வொண்ணா ஒடுக்குமுறைகள் ஏவப் பட்டன.

சங்க காலத்திற்கு பிறகு பல்லவ ஆட்சியில் தொடங்கிய சாதி-நிலவுடை மை உருவாக்கம் என்பது பிற்கால சோழர்கள் ஆட்சியில் தமிழகமெங்கும் பலமாக நிலைநாட்டப்பட்டது. இச்சாதி-நிலவு டைமை சமூகத்தில் பெண்களின் பங்கானது வாரிசுகளை பெற்றெடுத்தல், வீட்டு நிர்வாகம் (வீட்டடிமை) ஆதிக்க சாதி பெண்களுக்கு உற்பத்தியில் ஈடுபட உரிமையின்மை, சொத்துடைமையில் உரிமையின்மை, தாசியாக இருத்தல் என்பனவாக இருந்தது. இது நாயக்கர் ஆட்சியில் மேலும் இறுகியது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கல்வியானது ஆதிக்கசாதி, மேட்டு குடிப்பெண்களை சமூகத்தில் பங்காற்ற வைத்தது. அரசியல் சுதந்திரத் திற்கு பிறகு ஏற்பட்ட சீர்திருத்தங்களில் கணிசமானோர் கல்வி கற்க தொடங்கினர். தாராளமயமாக் கலுக்கு பிறகு, மலிவு விலை உழைப்பின் காரணமாக பெருமளவு பெண்கள் உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கி யுள்ளனர். தமிழகத்தில் சுமார் 30% உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். இருப்பி னும், உற்பத்தி சாதனங்களின் உடைமை யில் மிகவும் சொற்ப அளவிலேயே உள்ளது. சொத்துரிமை சட்டம் நடை முறையில் செயலற்றதாகவே உள்ளது. அதேபோல், அரசியல் அதிகாரத்தில் பங்கு என்பது கணவர்களின் இரப்பர் ஸ்டாம்ப் என்ற அந்தஸ்தை மட்டுமே பெற்றுத் தந்துள்ளது.

எனவே, பெண்கள் உற்பத்தி சாதனங் களின் உடைமைக்கும், அரசியல் அதிகா ரத்திற்கும் சமத்துவத்திற்கும் போராட வேண்டிய உறுதிமிக்க இயக்கு சக்திகளாக உள்ளனர்.

தலித்துகள்

தமிழகத்தை பொருத்தவரை சாதி-நிலவுடைமை உருவாக்கத்திலேயே இங்கு தீண்டாமை தொடங்கிவிட்டது. தொ ழில் சார்ந்து, அடங்கமறுத்தவர்கள் மற்றும் போரில் பிடிக்கப்பட்டவர்கள், அரசு ஆதரவு சாதிகளுக்கெதிரானவர்கள் என்று தீண்டாமை சாதிகள் உருவாக்கப் பட்டன.

சித்தர்களில் தொடங்கி நந்தன் வரையிலும் கலகங்களும், மக்கள் போ ராட்டங்களும் வரலாறு நெடுகிலும் நடந்தன. பிரிட்டிசாரின் காலத்தில், அதற்கு பிறகும் தலித்துகளின் நகரம் நோக்கிய நகர்வு சாதிய நிலவுடைமையின் இன்றைய நெகிழ்வுக்கு முக்கிய காரணி களில் ஒன்றாகும்.

சாதிய ஒழிப்பிலேதான் இதர ஆதிக்க சாதி உழைக்கும் மக்களின் விடுதலையும் அடங்கி உள்ளது. தலித் மக்களின் விடுதலையும் அடங்கி உள்ளது. தமிழ் தேசிய புரட்சியின் வளர்ச்சியும் அடங்கி உள்ளது.

எனவே, தலித்துகள் இன்றைய சில சீர்திருத்தங்களின் மாயத்தோற்றத்தில் மயங்கிவிடாமல், உண்மையான அதிகா ரத்திற்கும், உற்பத்தி சாதனங்களில் உரிமையாளர்கள் ஆவதற்கும் உறுதிமிக்க இயக்குசக்திகளாக இருப்பது தவிர்க்க முடியாதது.

மதச்சிறுபான்மையினர்

நவீன பிராமணியத்தின் இந்தி, இந்து, இந்தியா என்ற மூன்று கூறுகளில் முக்கிய கூறான இந்து என்ற அடையாளத்தின் கீழ் மக்களை அணிதிரட்டி, உழைக்கும் மக்களை மோத விடுவதன் மூலம் ஆளும்வர்க்க நலனை பாதுகாக்கும் சதியாகவே, ஆர்.எஸ்.எஸ்ஸால் திட்ட மிட்டு, உலகமயமாக்கலுக்கு பின் தீவிர மாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பாபர் மசூதி இடிப்புக்கு பிறகு இந்துத்துவா பயங்கரவாதத்தின் வளர்ச்சி மிகவேகமாக உள்ளது. இதன் எதிர் விளைவாக மதச்சிறுபான்மையினரின் குறிப்பாக இஸ்லாமிய அடிப்படை வாதமும் தன்னை பலப்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறது. இருப்பினும், சிறுபான்மை மக்கள் சகோதரநேயத் தையும், மனித மாண்புகளையும் காத்து வருகின்றனர்.

ஆனால், அதே சமயத்தில் இவர்கள் தங்கள் வாழ்விற்கான ஆதாரங்களையும், பாதுகாப்பையும் இழந்துவருகின்றனர் என்பதை ‘சச்சார்’ கமிட்டி அம்பலப் படுத்தியுள்ளது. இது மட்டுமல்லாமல் இந்துத்துவா பாசிசம் அரசு எந்திர மயமாகி உள்ளதும் அம்பலமாகி உள்ளது.

மேலும் இந்துத்துவா காவிகும்பல் மக்கள் விரோத பயங்கரவாத செயல் களில் ஈடுபட்டதும் அம்பலமாகி உள்ளது.

எனவே, இந்துத்துவா பயங்கரவாதத் திடமிருந்து சிறுபான்மை மக்களை பாதுகாப்பது இதர மக்களின் மற்றும் சனநாயக, புரட்சிகர ஆற்றலின் கடமை யாகும். அதே போல் தமிழ்த்தேசிய விடுதலையில் முக்கிய இயக்கு சக்திகளாக மதச்சிறுபான்மையினரை அணிதிரட்டு வதும் முக்கிய கடமையாகும்.

மீனவர்களும், பழங்குடிகளும்

தமிழகத்தில் மீனவர்கள் 35 லட்சம் பேர் இருப்பதாக கருதப்படுகிறது. அதே போல் பழங்குடிகளும் சில லட்சம் பேர் உள்ளனர். இருவருமே வரலாற்று ரீதியாக வே இயற்கையை சார்ந்து தங்களுக்கென தனித்த சமூக வாழ்க்கையை கொண்டவர் களாவர்.

இந்தியப் பெருமுதலாளி வர்க்கத் தாலும், ஏகாதிபத்தியத்தாலும் கடுமை யாக சுரண்டப்படுவதாலும் இயற்கை வளங்களை அழிப்பதால் அதாவது வன வளங்கள், கடல் வளங்கள் அழிக்கப் படுவதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளனர்.

வீரப்பன் தேடுதல் வேட்டை, நக் சலைட்டுகள் தேடுதல் வேட்டை என்ற பெயரில் போலீசின் காட்டுமிராண்டித் தனமான சித்திரவதைகளால் கடுமையாக பழங்குடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல், சிங்கள பேரினவாத இலங்கை அரசு இதுவரை நூற்றுக் கணக்கான தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றுக்கொண்டிருக்கிறது.

இவைகளினால், இவர்கள் கடும் அரசு எதிர்ப்பு சிந்தனை கொண்டவர்களாக உள்ளனர். இயல்பிலேயே உறுதியான போராட்டக் குணம் கொண்ட இவர்கள் தமிழ்தேசிய விடுதலையின் தவிர்க்க முடியாத இயக்கு சக்திகளாவர்.

பாட்டாளி வர்க்கத் தலைமையிலான மேற்கண்ட புரட்சிகர வர்க்கங்களும், புரட்சிகர சிறப்பு பிரிவினருமே தமிழ் தேசிய விடுதலையின் புரட்சிகர மக்கள் முன்னணி ஆவர்.

தமிழ்தேசிய புரட்சியின் கட்டம்

தமிழ் தேசத்தின் புரட்சிக்கான கட்டம் என்பது சோசலிசத்திற்கான இடைக் கட்டமான முந்தைய கட்டத்தையே கோருகிறது. அதாவது, மக்கள் சனநாயக புரட்சியையே முன் நிறுத்துகிறது. ஏனெ னில், தமிழகம் மற்ற மாநிலங்களை விட ஒப்பீட்டளவில் முதலாளிய வளர்ச்சி பெற்றிருப்பினும் சில முதலாளித்துவ சனநாயக பொருளாதார கூறுகளை விவசாயத்தில் செய்ய வேண்டிய தேவை உள்ளது.

எடுத்துக்காட்டாக, நிலமற்ற உழவர் களுக்கு நிலத்தை பகிர்ந்தளிப்பது என்ப தாகும். இதுமட்டுமல்லாமல், உற்பத்தி சாதனங்களையும், அரசியல் அதிகாரத் தையும் பாட்டாளி வர்க்கம் மட்டுமல் லாமல் தமிழ்தேசத்தில் உள்ள உழவர்கள் உட்பட இதர ஒடுக்கப்பட்ட வர்க்கங் களும், பெண்கள்-தலித்துகள்-மதச்சிறு பான்மையோர்-பழங்குடிகள்-மீனவர்களும் கைப்பற்ற வேண்டிய தேவையில் உள்ளனர்.

அதாவது, புரட்சியின் மைய கடமையான அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவது என்பது பாட்டாளி வர்க்கத் தலைமையிலான கூட்டு சர்வாதிகாரத்தையே கோருகிறது. எனவே, சோசலிச கூறுகளை அதிகமாகவும் சில முதலாளித்துவ சனநாயகக் கூறுகளையும் கொண்ட புதிய சனநாயக புரட்சியே தமிழ் தேசியப்புரட்சியின் கட்டமாகும்.

இக்கட்டம் முழுவதும் இதற்கான திட்டம் மாறாது. அதே சமயத்தில் முதலுடைமையின் படிப்படியான மாற்றங்கள் வேகமடைந்து கிராமப் புற சமூகம் உச்சபட்ச நெகிழ்வை அடையும் பொழுது நமது பொது திட்டத்தில் இப்பகுதிகளில் மாற்றம் இருக்கும். இது புரட்சியின் கட்டத் தை மேல்கட்டுமானத்தை சார்ந்த சில சனநாயக கூறுகளைக் கொண்ட சோச லிச புரட்சிக் கட்டமாக மாற்றும்.

ஆனால், சோசலிசப்புரட்சிக் கட் டம் என்பது இணக்கம் காண முடி யாத பகை வர்க்கங்களான முதலாளித் துவ வர்க்கத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்குமான போராட்ட மாகும். இது பலாத்காரத்தின் மூலமே தீர்க்க முடியும். இன்றைய கட்டத்தில் முதலாளி வர்க்கத்திற்கும்-மூலதன-சாதி-நிலக்கிழார்களுக்குமான முரண் பாடும்; முதலாளி-பாட்டாளி வர்க்கத் திற்குமான முரண்பாடும் அடிப்படை யாக உள்ளது.

இதில் முதலாவது முரண்பாடு முதலாளி வர்க்கத்திற்கு இணக்க மானதும் கட்டுப்பட்டதும் ஆகும். எனவே, முதலாளி வர்க்கம் தனது தேவைக்கேற்ப இம் முரண்பாட்டை மந்தமாகவும் விரைவாகவும் தீர்த்துக் கொள்கிறது. நிலக்கிழாரிய வர்க்கமும் தனது இருத்தலின் நீடிப்பிற்கேற்ப, தனது தேவையிலிருந்தும் தனது தன்மைகளை படிப்படியாக முதலா ளித்துவ தன்மைக்கு மாற்றிக்கொள் கிறது. இப்போக்கே இம்முரண் பாட்டின் பகைத்தன்மைகளை இணக்கத்துடன் தீர்த்துக் கொள்கிறது. தன்னை வர்க்க மாற்றம் செய்துக் கொள்கிறது.

எனவே, புரட்சி தள்ளிப் போகும் பட்சத்திலோ முதலுடைமை மாற் றங்கள் வேகமாக மேலோங்கும் பொழுதோ புரட்சியின் கட்டம் மாறுவது தவிர்க்க முடியாதது.

இரண்டாவது, முரண்பாடு பகைத் தன்மையின் காரணமாக பலாத்காரத் தின் மூலம் மட்டுமே தீர்க்க முடியும். இதனால் இம்முரண் பாடு புரட்சியின் இரண்டு கட்டங்களிலும் நீடிப்பது மட்டுமல்லாமல், சோசலிச சமூக நிர்மாணத்திலும் வர்க்கங்கள் இல்லா மல் போவது வரை நீடிக்கும்.

தமிழ்த்தேசிய புரட்சியின் பொது திட்டம்

தமிழ் தேசியப்புரட்சியின் பொது திட்டம் இரு பகுதிகளைக் கொண் டது. (1) தமிழ்தேசிய பொதுதிட்டம் (2) கூட்டக பொது திட்டம் ஆகும்.

தமிழ்த்தேசிய பொது திட்டத்தின் அடிப்படையிலேயே கீழ்க்கண்ட மக்கள் சனநாயக குடியரசின் கடமைகள் தீர்மானிக்கப்படுகின்றன.

தமிழ்த்தேச மக்கள் சனநாயக குடியரசின் கடமைகள்.

I அரசியல் கடமைகள்

(1) தமிழ்தேச மக்கள் சனநாயக விடுதலையின் மையக் கடமையான அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு முதல் கடமையாக இந்திய ஒன்றிய அரசு என்ற சிறைக்கூடத் திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டதாக அதாவது, தமிழ்தேச மக்கள் சனநாயக குடியரசை பிரகடனப்படுத்தும்.

(2) நாடாளுமன்ற முதலாளித்துவ சனநாயகம் என்ற திரைமறைவிற்கு பின்னால் உள்ள பிராந்திய இந்திய பெருமுதலாளிய வர்க்கம் மற்றும் மூலதன-சாதி-நிலக்கிழார்கள் கூட்டு சர்வாதிகாரத்தை தூக்கியெறிந்து, பாட்டாளி வர்க்க தலைமையிலான மக்கள் சனநாயக சர்வாதிகாரத்தை பிரகடனப்படுத்தும்.

அதாவது, பாட்டாளி வர்க்கத் தலைமையில் விவசாயிகள், குட்டி முதலாளிகள், தேசிய முதலாளிகள் உள்ளிட்ட புரட்சிகர வர்க்கங்கள் மற்றும் பெண்கள், தலித்துகள், மதச் சிறுபான்மையினர், மீனவர்கள், பழங்குடிகள் போன்ற புரட்சிகர பிரிவினரின் கூட்டு சர்வாதிகாரம் நிலைநாட்டப்படும்.

(3) முதலாளித்துவ நாடாளுமன்ற போலி சனநாயக முறைக்கு பதிலாக, மக்கள் சனநாயக குடியாட்சி மன்றங் கள் மூலம் கீழிருந்து மேல் நோக்கி அதிகார அலகுகள் கட்டப் படும். அதிகாரங்கள் அனைத்தும் ம.ச.குடி யாட்சி மன்றங்களுக்கு இருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை திருப்பி அழைக்கும் உரிமை மக்க ளுக்கு உண்டு.

கீழிருந்து மேல் வரை பாட்டாளி வர்க்கத்தலைமையில் புரட்சிகர வர்க்கங்களும் புரட்சிகர சிறப்பு பிரிவினரும் மட்டுமல்லாமல், மொழிச் சிறுபான்மையினர் மற்றும் வட்டா ரங்களில் தனித் தன்மைகளும் கணக் கில் கொண்டு விகிதாச்சார பிரதிநிதித் துவம் செயல்படுத்தப்படும்.

(4) தமிழ்தேச மக்கள் சனநாயக குடியரசுக்கான புதிய அரசியல் சாசனம் மக்களின் ஒப்புதலுடனேயே இயற்றப்படும். அதாவது, மக்களின் கருத்துக்கணிப்பின் மூலம் பொது வாக்கெடுப்பிலேயே தீர்மானிக்கப் படும். முக்கிய கொள்கைகள், சட்டங்கள் மக்களாலேயே இரண்டு தடவை பொதுவாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கப்படும்.

(5) அதிகாரிகள் முதல் நீதிபதிகள வரை மக்களாலேயே தேர்ந்தெடுக்கப்படுவர்.

(6) 18 வயது நிரம்பிய குடிகள் எவரும் தேர்ந்தெடுக்கவும், தேர்ந்தெடுக்கப் படவும், தேர்ந்தெடுத்தவர்களை திருப்பி அழைக்கவும் உரிமை பெற்றிருப்பர். மேலும் ஒவ்வொரு குடிகளுக்கும் கருத்துரிமை, பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை, சங்கம் அமைக்கும் உரிமை போன்ற சனநாயக உரிமைகள் உத்தர வாதம் செய்யப்படும்.

(7) நிகழ்கால ஒடுக்குமுறையா ளர்களான இந்தியப் பெருமுதலாளிகள், மூலதன-சாதி-நிலக்கிழார்கள், ஏகாதிபத்தி யங்கள் ஆதரவு அரசியல் இயக்கங்கள், கட்சிகள் தடைசெய்யப்படும். இந்துத் துவா பயங்கரவாத அமைப்புகள், ஆதிக்க சாதி அமைப்புகள், பெண்விரோத அமைப்புகள் தடை செய்யப்படும். அதே சமயத்தில் இவர்களின் இதர தனிநபர் உரிமைகள் பாதுகாக்கப்படும்.

(8) தமிழ்த் தேச மக்கள் சனநாயக குடியரசை பாதுகாக்க மக்களை ஆயுத பாணியாக்கும்.

II பொருளியல் கடமைகள்

(1) முதலாளித்துவ தேசிய பொரு ளாதாரம் கட்டியமைப்பதற்கு பதி லாக, தமிழ்தேசிய மக்கள் சனநாயக புதிய பொருளாதார கொள்கை நடைமுறைப்படுத்தப்படும். அதா வது, இப்பொருளாதாரக் கொள்கை.

(அ) சோசலிச பொருளாதாரக் கூறுகள் பெரும்பகுதியாகவும், சிறிய பகுதி முதலாளிய பொருளாதாரக் கூறுகளைக் கொண்டதாகவும் இருக் கும்.

(ஆ) உற்பத்திசக்திகளின் கட்டுப்பா டற்ற வளர்ச்சி, பொருளாதார மையப்படுத்தல் மற்றும் அனைத்தும் மையசார்பு, கனரக இயந்திர உற்பத்தி யை முதன்மையாக்கல் என்பதற்கு மாற்றாக;

கட்டுப்படுத்தப்பட்ட உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி, பரவலாக்கும் தற்சார்பு பொருளாதாரம், இலகு ரக உற்பத்தியை முதன்மையாக்கல் போன்ற பொருளாதாரமே அடிப் படையாக இருக்கும்.

(இ) இலாபநோக்கில் இயற்கையை அழிக்கும் முதலாளித்துவ அழிவுப் பொருளாதாரத்திற்கு மாற்றாக; இயற்கையுடன் இயைந்த கட்டுப் படுத்தப்பட்ட பொருளாதார முறை நடைமுறைப் படுத்தப்படும்.

அதாவது, இயற்கையில் மறு உற்பத்தி சுழற்சிக்கு உட்படுத்த வாய்ப்புள்ள சூரிய ஒளி, காற்று, நீர், தாவரம் போன்றவற்றை வாழ்வா தாரங்களாக கொண்டு சமூகத்தின் தேவையின் பெரும்பகுதியை நிறை வேற்றிக் கொள்வது, அறிவியல் ஆய்வு களை இக்கோணத்தில் முனைப்புடன் மேற்கொள்வது என்பதாகும்.

மேலும், மறுசுழற்சிக்கு உட்படாத கனிம வளங்களை மிகவும் எல்லைக் குட்பட்டே பயன்படுத்துவது. (எ.டு) அபாய மற்றும் கடின உழைப்பை தவிர்க்க, கல்வி, மருத்துவம், அறிவியல் சோதனை போன்ற மிகமுக்கிய தேவைகளில் பயன்படுத்துவது, மற்றவைகளை படிப்படியாக மறு உற்பத்தி சுழற்சியின் மூலம் இயற்கை ஆதாரங்களில் தீர்த்துக் கொள்வது என்பதாகும்.

(ஈ) மக்களின் தேவைக்கேற்ற உற்பத்தி, உற்பத்தியின் தேவைக்கான உழைப்பு, உழைப்பிற்கேற்ப ஊதியம், சமவேலைக்கு சமஊதியம்.

மேற்கண்ட நான்கு கூறுகளே தமிழ்தேச மக்கள் சனநாயக குடி யரசின் புதிய பொருளாதார கொள் கையின் முக்கிய அடிப்படைக் கூறுகளாகும்.

(2) இந்திய மற்றும் தமிழக அரசுகள் உலக வங்கி போன்ற பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டுள்ள அனைத்து வகையான ஒப்பந்தங்களும் எவ்வித நிபந்தனையின்றி இரத்து செய்யப்படும்.

(3) பிராந்திய இந்திய பெருமூலதனம் மற்றும் ஏகாதிபத்தியங்களின் நிதிமூல தனங்கள் மற்றும் சொத்துக்கள் இழப் பீடின்றி கைப்பற்றப்படும்.

(4) அதிகார வர்க்க மூலதனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத்துறை தொழில் நிறுவனங்கள், நிதி நிறுவனங் களும் சமூக உடைமையாக்கப்படும். இதன் வர்க்கத்தன்மை மாற்றியமைக்கப் பட்டு மக்கள் சனநாயக குடியரசின் கீழ் நிர்வகிக்கப்படும்.

(5) எட்டு மணி நேர வேலை நடை முறையாக்கப்படும். 6மணி நேர வேலை இலக்காக கொள்ளப்படும்.

(6) சிறு தொழில்களும், தேசிய தொழில்களும் ஊக்குவிக்கப்படும்.

(7) மண்டல ஏற்றத்தாழ்வுகள் கணக்கில் எடுக்கப்பட்டு பின்தங்கிய பகுதிகளுக்கு தனிக்கவனம் செலுத்தப் படும்.

(8) மக்கள் சனநாயக குடியரசின் தேவைகளை கணக்கில் கொண்டு ஏற்றுமதி - இறக்குமதி கொள்கை கடைப்பிடிக்கப்படும்.

(9) மக்களின் கருத்திற்கிணங்க ஒரேமாதிரியான வரிவிதிப்பு முறை உருவாக்கப்படும்.

(10) அனைவருக்கும் வேலை உத்தரவாதம் அளிக்கப்படும். சிறப்பு பிரிவினரான பெண்கள். தலித்துகள், மதச்சிறுபான்மையினர், மீனவர்கள், பழங்குடிகளுக்கான இடஒதுக்கீடு பின்பற்றப்படும். மாற்றுத்திறனாளிகள், அரவாணிகள் போன்ற சிறிய பிரிவி னருக்கு நிபந்தனையற்ற முன்னுரிமை விரும்பிய வாய்ப்புகளில் அளிக்கப்படும்.

(11) வெளிதேசங்கள் மற்றும் நாடுகளிலுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந் தவர்கள் இங்கு தொழில் தொடங்க அனுமதிக்கப்படுவர்.

விவசாயத்துறை

(1) இந்திய பெரு முதலாளிகள், ஏகாதிபத்தியங்கள், மூலதன-சாதி-நிலக்கிழார்களின் பண்ணைகள், தோட்டங்கள் பறிமுதல் செய்யப் படும். இவைகள் வரையறுக்கப்பட்ட அளவில் கூட்டுப் பண்ணைகள் ஆக்கப்படும்.

(2) மூலதன-சாதி-நிலக்கிழார்களின் நிலங்கள், கோவில் மற்றும் மடத்து நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, “உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என்ற அடிப்படையில் குத்தகைதாரர் களுக்கும் (பெருங்குத்தகைதாரர், எதிர்குத்தகைதாரர் நீங்கலாக) நிலமற்ற கூலி, ஏழை விவசாயிகளுக்கு நிலம் பகிர்ந்தளிக்கப்படும். இவை படிப்படியாக கூட்டுப் பண்ணை களாக மாற்றப்படும்.

(3) தமிழகத்தை பொருத்தவரை நில உடைமை உரிமையில் 85 சதவீதத் திற்கும் மேலான சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் சிக்கலே தமிழக விவசாயத்தின் முக்கிய சிக்கலாகும். நிலம் துண்டுபடுதல் என்பது உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் தடையாக உள்ளது. உற்பத்திச் சக்தியின் வளர்ச்சி என்பது நிலக்குவி தலை கோருகிறது. எனவே, நிலஅளவு வரையறுக்கப்பட்ட கூட்டுப் பண் ணைகள் விவசாயிகள் விருப்பத்தின் பேரில் தொடக்கம் முதலே உருவாக் கப்படும். மூலதனம் மற்றும் உற்பத்தி கருவிகளுக்கான கூட்டுறவுகளும் உருவாக்கப்படும்.

(4) பணக்கார உழவர்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்படாது. குத்தகை நிலச் சிக்கல் அவர்களின் சொந்த நிலவுடைமை யின் அளவிலிருந்து தீர்க்கப்படும்.

(5) விவசாயத்தில் நிகழ்கால கடும் உடல் உழைப்பு தவிர்க்கப்பட்டு நவீன கருவிகள் பயன்படுத்தப்படும். அதே சமயத்தில், இயற்கை சார்ந்த மண்வளம், சத்துவளம், வீரிய வித்துகள் முதலியவை அறிவியல் மெய்ப்பித்தல் மூலம் படிப்படி யாக நடைமுறைப்படுத்தப் படும்.

(6) சாதிச்சுரண்டல்கள், ஒப்பந்தடிமை, நவீன கொத்தடிமை போன்ற கொடுமை யான உழைப்புச் சுரண்டல்கள் ஒழிக்கப் படும்.

(7) சாதி, பாலின வேறுபாடின்றி சமக்கூலி 6மணி நேரபணி நடைமுறை யாக்கப்படும்.

(8) நவீன பெரிய அணைகட்டுகள், என்பதற்கு மாறாக, சிறிய நீர்த்தேக்கங் கள் மற்றும் பாரம்பரிய பாசன முறைகள் அறிவியலுடன் மேம்படுத்தப்படும்.

கால்நடை வளர்ப்பு

(1) கால்நடை வளர்ப்பில் உள்ள ஏகபோகங்கள் ஒழிக்கப்படும். மூலதன-நிலக்கிழார்கள் பெருமுத லாளிகள் மற்றும் ஏகாதிபத்தி யங்களின் பண்ணைகள் பறிமுதல் செய்யப்பட்டு கூட்டு பண்ணை யாக்கப்படும்.

(2) கால்நடை வளர்ப்போர்கள் கூட்டு பண்ணையை அமைக்க அனைத்து விதமான உதவிகளும் செய்யப்படும். அதே சமயத்தில் தனிப்பண்ணைகள் இருக்கவும் அனு மதிக்கப்படும். கூட்டுறவுகள் முறைப் படுத்தப்படும்.

(3) முதலாளித்துவ இலாபநோக்கில் செய்யப்படும் அனைத்துவிதமான செயற்கையான தீவனங்கள் மற்றும் மருந்துகள் தடை செய்யப்படும். இயற்கை சார்ந்த கால்நடை வளர்ப்பே அனுமதிக்கப்படும்.

(4) கால்நடைகளை உழைப்பில் ஈடுபடுத்துவது தடை செய்யப்படும்.

வனத்துறை:

(1) வனத்தை ஆக்கிரமித்திருக்கும் பெருமுதலாளிகள், ஏகாதிபத்தியங் களும் வெளியேற்றப்படுவர்.

(2) பழங்குடிகளின் அரை தொல்குடி உற்பத்தி முறையிலிருந்து நேரிடையாக கூட்டு பண்ணைகள் முறைக்கு கொண்டு போகப்படும். தேவையான நவீன முறைகள் படிப் படியாக அறிமுகப் படுத்தப் படும்.

(3)பழங்குடிகளுக்கு தனிக்கவனம் செலுத்தப்பட்டு அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படும். கூட்டுறவுகள் அமைக்கப்படும்.

(4) வட்டங்கள்தோறும் சராசரி காடுகள் வளர்ப்பு கட்டாயமாக்கப்படும்.

மீனவத்துறை

(1) இந்திய பெருமுதலாளிகள் மற்றும் ஏகாதிபத்தியங்களின் கடல் சார்ந்த நிறுவனங்களும், மீனவம் சார்ந்த நிறுவனங்களும் சமூக உடை மையாக்கப்படும்.

(2) மீனவர்களின் கூட்டுறவுகளை முறைப்படுத்துதல், புதியதாக உரு வாக்குதல் என்பதன் மூலம் மீனவர் களின் வாழ்க்கை திட்டவட்ட படுத்தப்படும்.

(3) முதலாளித்துவத்தின் இயற்கையின் மீதான தாக்குதலின் ஒருபகுதியாக கடல் வள ஆதாரங்கள் மாசுபடுவதும், அழிவதும் தடுத்து நிறுத்தப்படும். கடல் வளங்கள் பாதுகாக்கப்பட்டு ஆதாரங்கள் வளர்த்தெடுக்கப்படும்.

III பண்பாட்டுத்துறை

(1) நவீன பிராமணியம், தமிழ்த் தேசிய பிராமணியமான நவீன வெள்ளாளியம் போன்ற பிற்போக்குத் தனமான கருத்தியல்களுக்கெதிரா கவும் காலனிய, ஏகாதிபத்திய சீரழிவு பண்பாடுகளுக்கெதிராகவும், சீர்திருத்தவாதத்திற்கெதிராகவும் தொடர்ந்து மக்கள் சனநாயக பண்பாட்டு இயக்கங்கள் நடைபெற வேண்டும். முதலாளிய தனிஉடை மை, தனிநபர்வாத சிந்தனைகளுக்கு மாற்றாக கூட்டுச் சிந்தனை, கூட்டு செயல்பாடு, கூட்டு வாழ்க்கை என்ற சிந்தனை போக்கை ஏற்படுத்தப்பட வேண்டும். இவை பல பண்பாட்டு புரட்சிகளின் அங்கமாக தொடர்ந்து நடைபெற வேண்டும்.

(2) அனைத்துவிதமான பாகுபாடு களும் அதாவது, பாலின, சாதி, மத, இன, பிரதேச பாகுபாடுகளும் ஒழிக்கப்பட்டு அனைத்து மக்களுக்கும் சமஉரிமை வழங்கப்படும்.

(3) ஒடுக்கப்பட்ட சிறப்பு பிரிவினாó அனைத்து தளங்களிலும் முன்னிலையில் பங்குபெற சிறப்பு கவனம் செலுத்தப் பட்டு வளர்த்தெடுக்கப்படுவர்.

(4) நிகழ்கால கல்விமுறை ஒழிக்கப் பட்டு ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அறிவியல்பூர்வமான கல்வி வழங்கப்படும். இது அனைவருக்கும் இலவசமாகவும், கட்டாயமாகவும், தாய்மொழியிலும் அளிக்கப்படும்.

(5) தேசிய மொழிச் சிறுபான்மை யினருக்கு தாய்மொழிக் கல்வி உத்தர வாதமும், ஆட்சி மொழி பாதுகாப்பும் வழங்கப்படும்.

(6) மருத்துவம், சுகாதாரம் அரசே பொறுப்பெடுத்துக்கொள்ளும். குழந்தைகள், முதியோர்கள் பராமரிப்பும் அரசே ஏற்றுக் கொள்ளும்.

(7) போலி இந்து மத அடையாளங்கள் நீக்கப்படும். மதம் என்பது தனிநபர் உரிமையாக அங்கீகரிக்கப்படும்.

IV. அயலகக் கொள்கைகள்

(1) இந்திய ஒன்றிய அரசின் அனைத்து மக்கள் விரோத ஒப்பந்தங்களையும் இரத்து செய்வது.

(2) நேருவின் அய்ந்துநெறிக் கொள்கையை (பஞ்சசீலம்) அனைத்துலக உறவுகளில் கையாள்வது. அதாவது, (அ) நாடுகளின் சுயாட்சி உரிமையையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் மதித்தல்.

(ஆ) ஆக்கிரமிப்பை எதிர்த்தல்.

(இ) நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாது இருத்தல்.

(ஈ) சமத்துவ அடிப்படையில் பரஸ்பர நலன்களை அமைத்தல்.

(உ) சமாதான சகவாழ்வைக் கடை பிடித்தல்.

(3) உலகில் நடக்கும் ஒடுக்குமுறைக் கெதிரான போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும்.

கூட்டக பொது திட்டம்

(1) இந்தியாவில் உள்ள இதர தேசிய இனங்கள் மற்றும் பழங்குடி களுடன் இணைந்து, இந்திய ஒன்றிய அரசை வீழ்த்தி, தமிழ்தேசிய விடுதலையை உறுதிப்படுத்துவ தாகும்.

(2) விடுதலை பெற்ற மக்கள் சனநாயக மற்றும் சோசலிச குடியரசு களின் கூட்டரசை உருவாக்குதல், ஒவ்வொரு குடியரசும் மக்களின் பொது வாக்கெடுப்பின் மூலம் விருப்பத்துடன் இணைவது, தனியே பிரிந்து போவதென்றால் மக்களின் பொதுவாக்கெடுப்பின் மூலமே பிரிந்து போவது என்ற நடைமுறையை கொண்டிருக்கும்.

(3) கூட்டரசின் பணிகளை, வரலாற்றில் அதிகபட்ச தேசிய உரிமை களை நடைமுறைபடுத்திய சோவியத்தின் (முன்னாள்) அனுபவத்திலிருந்து அதன் சரி, தவறுகளிலிருந்து பெறப்பட்ட படிப்பினைகளினடிப்படையில், அனைத்து குடியரசுகளின் விருப்பத்தின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும்.

(4) தெற்காசிய கூட்டரசை படைப்பதை நோக்கமாக கொள்வது. அதற்கான ஒருங்கிணைப்பை உருவாக்கு வதன் மூலம், இந்திய பிராந்திய ஏகாதிபத்தியத்தின் அனைத்து வேர்க்கால் களையும் வெட்டி எறிவது என்பதாகும்.

புரட்சியின் மூன்று மந்திரக்கோல்கள்

மேற்கண்ட திட்டங்களை நடை முறைப்படுத்துவது என்பது தோழர் மாவோ உரைத்த கட்சி, அய்க்கிய முன்னணி, படை என்ற மூன்று மந்திரக் கோல்கள் மூலமே சாத்தியமாகும்.

மேற்கண்ட திட்டத்தின்படி தமிழ் தேசிய பாட்டாளி வர்க்க கட்சி, தமிழ் தேசிய அய்க்கிய முன்னணி, தமிழ்தேசிய மக்கள் விடுதலை படை கட்டப்பட வேண்டும்.

இன்று தமிழகத்தில் புரட்சிகர சக்திகள் சிதறுண்டு இருக்கும் நிலையில் அவர்களை இணைத்து ஒருங்கிணைந்த ஒரே பாட்டாளி வர்க்க கட்சி கட்டப் படுவதே தனது முதல் லட்சியமாகக் கொள்ள வேண்டும்.

தமிழ்த்தேசிய பாட்டாளி வர்க்க கட்சியானது சோவியத், சீன பின்ன டைவுகளிலிருந்து படிப்பினைகளை பெற்றுக்கொள்ளவேண்டும். கட்சி யானது அரசியல் தலைமை தர வேண்டும். மக்களுக்கான அமைப்பு, நடைமுறை என்பது மக்கள் முன் னணி, மக்கள் படையின் மூலமே செயல்படுத்தப்பட வேண்டும்.

கட்சியானது அதிகாரத்தில் நேரிடை யாக பங்கு பெறக்கூடாது. கட்சியில் 3ல் 1பகுதியினரே அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும். அதுவும் சுழற்சி முறையில் இருக்க வேண்டும். கட்சியின் முதன்மைப் பணி மக்களை இறுதி லட்சியத்திற்கு தயார்படுத்துவதே, எனவே, புரட்சிக்கு முன் அரசியல் அதிகாரத்திற்கு தயார் படுத்துவதும், புரட்சிக்குப்பின் பண் பாட்டு புரட்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவதுமே கட்சியின் முதன்மைப் பணிகளாகும்.

எனவே, பாட்டாளி வர்க்க கட்சி என்பது அதிகாரத்தின் மூலம் மட்டுமே சமூகத்தை மாற்றுவது என்பதற்கு பதிலாக, புரட்சிக்கு பின்னும் அரசை கண்காணிப்பது, மக்களை பல பண் பாட்டு புரட்சிகளின் மூலம் மாற்றி யமைப்பது என்பதே ரசிய, சீன படிப்பினைகளில் முக்கியமானதாக இருக்கும்.

தமிழ்த்தேசிய மக்கள் சனநாயக அய்க்கிய முன்னணியானது, பாட் டாளி வர்க்கத்தலைமையில் இதர புரட்சிகர வர்க்கங்களையும் புரட்சிகர பிரிவினரையும் கொண்ட பரந்து பட்ட மக்கள் திரளினரைக் கொண்ட மக்கள் சனநாயக முன்னணியை ஏற்படுத்துவதே இதன் கடமையா கும்.

இதில் இன்றைய தமிழக சூழலை கணக்கில் கொள்ள வேண்டும். ஒருபக்கம் புரட்சிகர குழுக்களும், இதர குட்டி முதலாளிய அமைப்பு களும் முக்கியமாக சாதி-நிலவுடைமை சிந்தனைகளில் சிக்கி உள்ளனர். அதாவது, சாதி இனக் குழுவாதத் திலும், நிலக்கிழாரிய பிளவு வாதத் திலும் சிக்குண்டுள்ளனர்.

மறுபக்கம், இவர்களின் பலவீனம் காரணமாகவும், 90களில் ஏற்பட்ட சோவியத்தகர்வு, பின் நவீனத்துவ சிந்தனைகளின் தாக்கத்தால் எண் ணற்ற ‘பாளையக்கார அமைப்புகள்’ உருவாகியுள்ளன. இவைகள் அமைப்பு விரோத போக்கை கொண் டுள்ளன. தனிநபரை முன்னிறுத்தி கலைப்புவாத பிழைப்புவாதத்தை செயல்படுத்துகின்றனர்.

எனவே, ம.ச.அ, முன்னணி இவர்க ளுடன் ஒற்றுமை-போராட்டம்-ஒற்றுமை என்ற அடிப்படையில் ஒருங்கிணைக்க முயற்சி செய்யும் அதே வேளையில், பரந்துபட்ட மக்களை நேரிடையாக அணிதிரட்டுவதையே தனது முதல் கடமையாக கொள்ள வேண்டும். முன்ன ணியே பாட்டாளி வர்க்க தலைமையில் அரசியல், அதிகாரத்தை கைப்பற்றும் மக்கள்திரள் வடிவமாகும்.

தமிழ்த்தேசிய மக்கள் படையை பொருத்தவரை, தமிழ்த்தேசிய விடுதலையின் அதிகாரத்தை கைப்பற்றுவதில் தீர்மானகரமான பங்கை ஆற்றும். இது மக்கள்திரள் எழுச்சி என்ற முன் நிபந் தனையுடன் உருவாகும். குழு,புழு, என்ற பிற்போக்கு வடிவங்களில் இல்லாமல் மக்கள் படை என்ற பாட்டாளி வர்க்க வடிவத்திலேயே உருவாகும். “ஆயுத போராட்டம்” என்று சிறுபிள்ளைத்தனமான வடிவத்தில் இல்லாமல் தொடக்கம் முதலே மக்கள் யுத்தம் என்ற மக்கள் திரள் வழியின் உயர்ந்த போர் வடிவத்தில் தொடங்கும்.

பாட்டாளி வர்க்க கட்சியானது அரசியல் தலைமை மட்டுமல்லாமல், அனைத்திற்கும் அடிப்படை அமை ப்பு வடிவமாகும். அய்க்கிய முன்ன ணியே முதன்மையான மக்கள் திரள் அமைப்பு வடிவமாகும். மக்கள் படையே புரட்சியின் தீர்மான கரமான அமைப்பு வடிவமாகும்.

மேலும், இந்திய அளவில் ஒருங் கிணைந்த செயல்பாட்டுக்கு கூட்டக கட்சி (Federal party), கூட்டக முன்னணி, தேவையின் அடிப்படையில் கூட்டுபடை உருவாக்கப்பட வேண்டும். இந்த மூன்று மந்திரகோல் களும் மக்கள் திரள் வழியை அடிப்படை யாகக் கொண்டே செயல்படுத்தப்பட வேண்டும்.

கட்சியானது, இத்திட்டத்தினடிப் படையில் மூலஉத்திகளை வகுக்கும். இடைக்கட்டம்-குறிப்பான திட்டங் களின் மூலம் தனது செயலுத்திகளை வகுத்துக் கொண்டு நடைமுறைக்கு செல்லும்.

கருத்தியல் தளத்தில் தாக்குதல் உத்தி

இந்திய ஆளும் வர்க்கத்தின் கருத்தியலான நவீன பிராமணியம் மற்றும் சீர்திருத்தவாதம், தமிழக ஆதிக்கச் சக்திகளின் கருத்தியலான நவீன வெள்ளாளியமும் நாம் முதன்மையாக தாக்குதல் தொடுக்க வேண்டிய கருத்தியலாகும்.

அதேபோல், புரட்சிகர முகாமில் திருத்தல்வாதமும், சீர்திருத்தவாதமும் தீவிர தாக்கத்தை கொண்டுள்ளன. சீர்திருத்தவாதம் ஆதிக்கத்தை செலுத்து கிறது. சமூகங்களின் வளர்ச்சிப் போக்கை காண்பதிலும், மக்களை அணிதிரட்டு வதன் வடிவிலும், நடைமுறை உத்தி களிலும் தீவிர ஆதிக்கத்தை செலுத்து கின்றன.

அறிவுமறுப்பியம் அடிப்படையா கவும், வரட்டுகோட்பாட்டுவாதம் (Dogmatism) இணைந்தும் பெரும் பாலான தவறுகளை தோற்றுவிக்கின்றன. இவைகளுக்கெதிராக ஒற்றுமை-போரா ட்டம்-ஒற்றுமை என்ற அடிப்படையில் கறாரான கருத்தியல் போராட்டத்தை நடத்த வேண்டும்.

அதே போல், பெரியாரியம், அம்பேத்காரியத்தை பொருத்தவரை அதன் அரசியல் பொருளாதார தவறுகளை விமர்சிக்கும் அதே வேளை யில்,கருத்தியல் தளத்தில் ஆளும் வர்க்க கருத்தியலான பிராமணியத் தின் மீது பெரியாரும் அம்பேத்காரும் மிகச்சரியாகவே தாக்குதல் தொடுத் தனர் என்பதை முன்கொண்டு செல்ல வேண்டும். இவர்களின் கருத்துக்கள் ஆளும் வர்க்கத்தால் ஒதுக்கப்படும் அதே சமயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கைக்குரியவைகளாக உள்ளது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில், இக்கருத்தியல்களை காட்டி உருவான அரசியல் தரகர்களை யும், பெரு முதலாளிகளையும் எவ்வித தயவு தாட்சயமின்றி தாக்குதல் தொடுக்க வேண்டும். இத்தலைமைகளின் சந்தர்ப்ப வாதம் மற்றும் பிழைப்புவாதத்தை அம்பலப்படுத்த வேண்டும்.

அதேபோல் குட்டி முதலாளித்துவ அமைப்புகளின் தலைமையை அம்பலப் படுத்தி தனிமைப்படுத்துவதும், அதன் அணிகளை ஒற்றுமை-போராட்டம்-ஒற்றுமை எனற அடிப்படையில் அய்க்கி யப்படுத்த வேண்டும்.

புரட்சியின் பாதை

புரட்சி என்பது சமாதானத்தின் மூலமே அடைந்துவிட முடியும் என்று குருசேவிய திரிபுவாதம் முன்வைத்தது. அதை அடியொற்றி இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியும். மார்க்சிஸ்ட் கட்சியும் நாடாளுமன்ற வடிவத்தின் மூலமே மாற்றத்தை கொண்டுவரமுடியும் என்று திரிபுவாதப் பாதையை தேர்ந்தெடுத் தனர்.

ஆனால், இத்திரிபுவாத பாதையை முறியடித்து, இந்திய மார்க்சிய-லெனினிய கட்சி பலாத்கார பாதையை முன்வைத்தது. இதுவே, இந்தியா வில் உள்ள புரட்சிகர குழுக்களின், கட்சிகளின் புரட்சியின் பாதையாக உள்ளது. தமிழ் தேசிய மக்களின் சனநாயகப் புரட்சியும் பலாத்காரப் பாதையின் மூலமே வெற்றி அடைய முடியும்.

குறிக்கோள்;

தெற்காசிய மண்டலத்தில் பலமான ஒருங்கிணைந்த கூட்டரசை அமைப் பதும், ஏகாதிபத்தியத்தை உலகிலிருந்து ஒழித்து கட்ட உதவுவதும், உலகம் முழுவதும் சோசலிச ஒருங்கிணைப்பை உருவாக்குவதும் பொதுவுடைமை சமூகத்திற்கு மாறிச்செல்வதும் என்ற உயர்ந்த குறிக்கோளை தமிழ் தேசிய பாட்டாளி வர்க்க கட்சி கொண்டி ருக்கிறது.