நீ அணிந்திருந்தது
வெள்ளை வண்ணத்தில்
ஒரு கறுப்புச் சட்டை

நீ அக்கிரகாரத்தில் பிறந்த
பெரியார் திடல்

திருமணமே செய்துகொள்ளாத
உனக்குத்
தமிழகத்திலேயே பெரிய குடும்பம்

உன் பேனா
உரிமம் இல்லாமல்
நீ வைத்திருந்த ஆயுதம்

கலைஞர் உனக்கு
இரங்கற்பா எழுதவேண்டும்
என்பதற்காகவே
இறந்துபோனாயோ!