வீட்டில் இருக்கும் கணினியில் உங்களுக்குப் பிடித்த ஆங்கிலப் புத்தகங்கள் சிலவற்றை மின் நூலாக வைத்துப் படித்திருப்பீர்கள்.  சில சமயம் வெளியூர் செல்ல வேண்டிய சூழலில் அப்புத்தகங்களைப் படிக்க முடியாது போய் விடும்.  அச்சூழலில் அப்புத்தகங்கள் மின் நூல்களாக உங்களுடைய கைப்பேசியில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!  அதற்கு உதவும் இலவச மென் பொருள் தான் ‘தெக்குலாகேற்று’ (­‘Tequilacat’).  இப்படி ஒரு பெயரா என்று சிந்திக்காதீர்கள்!  நல்ல மென்பொருள் தான்!

செய்ய வேண்டியது என்ன?

1.    http://tequilacat.org/dev/br/index-en.html என்னும் தளத்திற்குச் சென்று தெக்குலாகேற்றைப் பதிவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி விடுங்கள்.  (‘Shell.exe’ என்பதை இரு முறை சொடுக்குங்கள்.)

2.    கீழ் உள்ளது போல் செயலியின் முகப்பு அமைந்திருக்கும்.  இதில் ‘Select your phone model’ என்பதில் போய் உங்களுடைய கைப்பேசியின் வகையைத் தேர்ந்தெடுக்கலாம்.  உங்களுடைய வகை இல்லை என்றால் கவலை வேண்டாம்!  ‘MIDP2 phone’ என்பதைத் தேர்ந்து கொள்ளுங்கள்.

3. இப்போது ‘Books’ என்னும் பட்டியைத் தேர்ந்து அதில் ‘Add Books’ என்பதைச் சொடுக்கித் தேவையான மின் நூல்களை இணைத்துக் கொள்ளுங்கள்.  (சுருக்கு வழி:  ‘Ctrl+O’).

4. பின்னர் ‘F9’ விசையை அழுத்துங்கள்.  நீங்கள் கொடுத்திருக்கும் மின் நூல்கள் அனைத்தும் இப்போது ‘சார்’ (‘jar’) கோப்புகளாக உருவாகி மின் நூல்கள் இருக்கும் அதே பகுதியில் புதிதாகச் சேர்ந்திருக்கும்.  இக்கோப்புகளை உங்களுடைய கைப்பேசியில் ஏற்றிக்கொள்ளுங்கள்.  தேவைப்படும் போது இனி அப்புத்தகங்களைக் கைப்பேசியிலேயே படித்துக் கொள்ளலாம்.

இதில் உள்ள ஒரேவொரு சிக்கல் – இன்னும் இம்மென்பொருள் தமிழுக்கு வடிவமைக்கப்படவில்லை.  இப்போதைக்கு ஆங்கில மின் நூல்களை மட்டுமே கைப்பேசியில் படிக்க முடியும்.

- க.பரணிதரன்(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It