"ஓல்டேன்" என்ற சொல், இன்றும் தமிழகத்தின் பேருந்துகளில் பணிச் செய்யும், நடத்துனர்களிடம் புழக்கத்தில் உள்ளது.

இச்சொல் ‘Hold on’ என்னும் ஆங்கிலச் சொல்லின் Translitration ஆகும் என்பதை நாம் அறிவோம்.

இந்த சொல்லுக்கு வரலாறு உள்ளது என்பதை, ‘மொழி ஞாயிறு பாவாணர்’ விளக்கியப் பின்னர்தான், இதன் பின்னணியை அறிய முடிகிறது

ஒருநாள் கடலூரில், தன் நண்பர்கள் சிலருடன் ‘மொழிஞாயிறு பாவாணர்’ பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்திருந்தார். அப்போது அந்த நிறுத்தம் அருகே பேருந்து ஒன்று வந்தபோது, அதன் நடத்துநர் "ஒல்டேன்" என்று ஒலித்துள்ளார். இதை காதிலேந்திய பாவாணரின் நண்பர்கள், இச்சொல்லைப் பற்றி அவரிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.

உடனே, பாவாணர் ‘Hold on’ என்ற ஆங்கிலச் சொல்லைதான் அவ்வாறு உச்சரிக்கின்றனர் எனக் கூறி, பின் வரும் வரலாற்றுச் செய்தியையும் கூறியுள்ளார்.

முற்காலத்தில் பேருந்துகளை நிறுத்தம் செய்ய பயன்படுத்த ‘Brake ‘ எனப்படும்  துணைக்கருவியை, ஓட்டுநரின் இருக்கைக்கு சற்று மேலேதான்  அமைத்திருந்தனர்.

இதை, கையின் துணை கொண்டு பிடித்துதான் நிறுத்தம் செய்ய இயலும். அதைப் பிடித்து நிறுத்த நடத்துநர் ‘Hold on’ என சொல்வார்.

அச்சொல்தான் நாளடைவில் ‘"ஓல்டேன்"‘ எனப் புழக்கத்தில் உள்ளதாக அதன் வரலாற்று பின்புலத்தை விளக்கினார்.

அறிவியல் வளர்ச்சியில், தற்போது காலின் துணைக்கொண்டு அழுத்தி, நிறுத்தம் செய்யும் முறை புழக்கத்திற்கு வந்தாலும், இதன் தமிழ் கலைச்சொல் புழக்கத்தில் இல்லை.

அதன் காரணமாகத்தான் ‘Whistle’ கொடுத்து நடத்துநர்களின் வாயை அடைத்து விட்டனர் போலும்.

நாமும் விசிலடிச்சான் குஞ்சிகளாக மாறி விட்டோம். பரிணாம வளர்ச்சியில் சில நடத்துனர் ‘Wait’ என்னும் ஆங்கில சொல்லை உச்சரிப்பதையும் உற்று நோக்கலாம்.

குறிப்பு: இது புதிய செய்தியாக உள்ளது என்பதாலும், அதற்கானக் குறிப்புகள் எதுவும் இல்லாத காரணத்தால், குடந்தையில் உள்ள பழைய நிறுவனமான NBS நிறுவனத்தாரை அணுகி, இதைப் பற்றி கேட்டபோது, புதிய செய்தியாக உள்ளது எனத் தெரிவித்தனர்.

சான்று இல்லாதன எதையும் ‘பாவாணர்’ சொல்ல மாட்டார்.

- ப.தியாகராசன்

Pin It