தேவையானவை:

பாஸ்மதி அரிசி/பச்சரிசி..1/2 கிலோ
பெல்லாரி..............................2
காரட்.....................................2
முட்டைகோஸ்..................100 கிராம்
பீன்ஸ் .................................100 கிராம்
மல்லி தழை......................100 கிராம்
புதினா................................50 கிராம்.
பூண்டு, ..............................5
இஞ்சி ...............................சின்ன துண்டு
பட்டை, ............................மிகக் கொஞ்சமாக
கிராம்பு............................ 2
மிளகுப் பொடி..................3 தேக்கரண்டி
எண்ணெய்........................100 மில்லி
உப்பு ..................................போதுமான அளவு.

செய்முறை:

அரிசியை கல் நீக்கி கழுவி, கொஞ்சம் உப்பு போட்டு, அரிசிக்கு இரு மடங்கு நீர் உற்றி, குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும். உடனே, திறந்து சாதம் ஒட்டாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். காரட், முட்டைகோஸ், பீன்ஸை கொஞ்சம் பெரிதாகவே நறுக்கவும். வெங்காயத்தையும் நீளவாக்கில் பெரிதாக நறுக்கவும். மல்லி+புதினாவை வெறுமனே அரைத்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டையும் தட்டி வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை கிராம்பு போட்டு சிவந்ததும் அதிலே வெங்காயம்+உப்பு கொஞ்சம் போட்டு நன்கு சிவந்ததும், நறுக்கிய காய்கறிகள்+தட்டிய இஞ்சி பூண்டு போட்டு கொஞ்ச நேரம் வதக்கவும். பின்னர் லேசான தீயில் இதனை எடுத்து குக்கரில் இருக்கும் சாதத்தில் போட்டு அதிலேயே அரைத்த மல்லி புதினா + மிளகுப் பொடியைப் போட்டு நன்கு கிளறி விடவும் பிறகு இறக்கி சாப்பிடவும்.

Pin It