இந்தியாவுக்கு காந்தியும், காங்கிரசாரும்தான் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்கள் என்ற கருத்துருவாக்கத்தை காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டு பரப்பி வைத்துள்ளனர். சுதந்திரம் கிடைத்ததும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்ததால் இதை அவர்களால் எளிதாகப் பண்ண முடிந்தது. ஆனால் உண்மை என்பது அதுவல்ல. இந்திய சுதந்திரப் போராட்டம் என்பது நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. போராட்டம் காந்திய வழியில் மட்டுமல்லாது, ஆயுத வழியிலும் நடைபெற்றது. இவை தொடர்பான செய்திகள் ஒன்றன் பின் ஒன்றாக இங்கு வெளியிடப்படும்.

முதல்கட்டமாக, சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட பல்வேறு இயக்கங்களின் பெயர்கள் இதோ:

ndependence1. அபிநவ பாரத் சபா
2. அனுசிலான் சமிதி
3. இந்திய தேசிய குடியரசு ராணுவம்
4. சந்தால் இயக்கம்
5. வகாபியர் இயக்கம்
6. இளம் வங்காளிகள் இயக்கம்
7. பாரத மாதா சங்கம்
8. மித்ரமேளா
9. கத்தர் கட்சி
10. செஞ்சட்டை வீரர்கள் இயக்கம்
11. பராசி இயக்கம்
12. இந்து மேளா
13. இந்தியம் அஸோஷியேஷன்
14. பாரீஸ் இந்திய கழகம்
15. பெர்லின் கமிட்டி
16. யுகாந்தர் இயக்கம்
17. மாப்ளார் இயக்கம்
18. ரம்ப்பா எழுச்சி இயக்கம்
19. சுராஜ்ய கட்சி
20. இந்தியன் ரிபப்ளிகன் ஆர்மி
21. இந்துஸ்தான் சோஷலிஸ ரிபப்ளிகன் ஆர்மி
22. இந்திய தேசிய ராணுவம்
23. அகில இந்திய முஸ்லிம் லீக்
24. அகில இந்திய காங்கிரஸ் சோஷலிஸக் கட்சி
25. பார்வர்டு பிளாக்
26. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
27. இந்திய தேசிய காங்கிரஸ்

Pin It