பச்சோந்தி தான் இருக்கும் இடத்திற்க்கு ஏற்றாற்போல் தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் ஆற்றல் படைத்தது. இதற்கு காரணம் அதன் தோலில் உள்ள நிற செல்களுக்கும் அதன் மூளைப் பகுதிகளுக்கும் இடைவிடாது தொடர்பு இருந்துகொண்டேயிருக்கிறது. பச்சோந்திக்கு காக்கை, கழுகுகளால் ஆபத்து அதிகம். அதுமட்டுமல்லாமல் ஒரு பயந்த பிராணி. அதனால் ஒரு நிமிடத்திற்கு மேல் அது தன்னுடைய நிறத்தை மாற்றிக்கொள்ளும். பச்சோந்திக்கு இன்னொரு குணமும் உண்டு. பச்சோந்தி தன் ஒரு கண்ணால் ஒரு இடத்தையும் மற்றொரு கண்ணால் வேறு இடத்தையும் பார்க்கும் ஆற்றல் பெற்றது.

Pin It