மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே இந்த பூமியில் தவளைகள் தோன்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அதாவது கோடி ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது இந்தத் தவளை இனம். இதை விட ஒரு வியப்பான விஷயம் என்னவென்றால் இந்தத் தவளைகளில் மட்டும் மொத்தம் ஆறாயிரத்திற்கும் அதிகமான இனங்கள் இருக்கின்றனவாம். அதுமட்டும் இல்லாது இந்தத் தவளைகள் பூகம்பம் வருவதை முன் கூட்டியே அறிந்துகொள்ளும் திறமை கொண்டவை. 
 
frog_312தவளைகள் நிலத்திலோ அல்லது நீர் நிலைகளிலோ குழிகள் அமைத்தோ அல்லது பாறைகளின் இடுக்குகளிலோதான் வாழ்ந்து பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு தவளை இனம் கூடு கட்டி வாழ்கிறது என்றால் நம்புவீர்களா ?!!! ஆம் நண்பர்களே..!! சில மாதங்களுக்கு முன்பு தென் இந்தியாவில்தான் இந்த அறிய வகை தவளை இனம் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த வகை தவளைகள் மிகவும் வினோதமான முறையில் புற்களினாலான கூடுகள் அமைத்து வாழ்கின்றன என்பது ஆய்வின் அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது.
 
தென் ஆப்பிரிக்கா காட்டுப் பகுதிகளில் வாழும் சில தவளை இனங்கள் எலியை விட மிக வேகமாக ஓடும் திறமை பெற்று இருப்பதாக மற்றொரு ஆய்வில் தெரியவந்திருக்கிறது. ஒரு முறை தென் ஆப்பிரிக்கா காட்டுப் பகுதிகளில் ஆய்விற்காக பிடித்து வரப்பட்ட தவளைகளை, எலிகள் அடைக்கப்பட்ட ஒரே கூண்டில் போட்டு அடைத்திருக்கிறார்கள். அப்பொழுது பயத்தில் தவளைகள் அதிக ஓலி எழுப்பியதால் வேறு வழியின்றி தவளைகளின் பெட்டியை மாற்றுவதற்காக திறந்த பொழுது ஒரு தவளையும், எலியும் வெளியில் தப்பி ஓடிய பொழுது எலியை விட அதி வேகத்தில் தவளை ஓடுவது கண்டு வியந்த கண்டுபிடிப்பாளர்கள், மீண்டும் பல சோதனைகள் செய்து பார்த்ததில் எலியை விட தவளைகளின் வேகம் அதிகம் இருப்பதை உறுதி செய்து இருக்கிறார்கள்.
 
இந்தத் தவளை இனம்தான் இப்படியென்றால் இதைவிட இன்னொரு தவளை இனத்தின் செயல் மிகவும் வியப்பிற்குரியது. அது என்னவென்றால் இந்த இனத்துத் தவளைகள் தொடர்ச்சியாக ஐந்து மாதங்கள் உறங்கும் திறமை உள்ளவையாம். பலருக்கு சில கேள்விகள் இதில் எல்லாம் ஐந்து மாதங்கள் தொடர்ச்சியாக உறங்கினால் உணவிற்காக என்ன செய்கின்றன என்று. இந்தத் தவளைகள் சுவாசிப்பதின் மூலம் தங்களின் உணவுகளை சரி செய்து கொள்கின்றன என்று ஓர் ஆய்வு கூறுகிறது
 
மனிதனுக்கு வரும் புற்றுநோய், இருதய நோய்களை தீர்ப்பதற்கான ஒரு பொருளாக தவளையின் தோலை மருத்துவ ஆய்வுகளில் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது உபரித் தகவல். இந்தத் தகவல்களை விட மிகவும் ஒரு வியப்பான செய்தி என்னவென்றால் பொதுவாக தவளைகள் பூச்சிகளைத் தின்பதை நாம் பார்த்திருக்கிறோம் அல்லது கேட்டு இருக்கிறோம். ஆனால் வட ஆப்பிரிக்கக் காடுகளில் காணப்படும் நீர் நிலைகளில் உள்ள சில தவளை இனம் பாம்புகளையே முழுவதும் முழுங்கும் அளவிற்கு திறமையும் உருவமும் கொண்டிருக்கின்றன. இந்தவகை தவளைகளின் உமிழ் நீரில் மனிதர்களைக் கொல்லும் அளவிற்கு விஷத் தன்மை இருக்கிறதாம்.

- பனித்துளி சங்கர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It