கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

ration card may17

ரேசன் கடைகள் மூடப்படுவது குறித்து மே17 இயக்கம் முதன்முதலில் அறிவித்தது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மே17 இயக்கத்தின் அறிவிப்பிற்கு பதில் அறிக்கை கொடுத்தார். மோடி அரசு உண்மையை வழக்கம் போல மறைத்தது.

கடந்த வருடம் மார்ச் மாதம் நாங்கள் அம்பலப்படுத்திய இந்திய அரசின் இந்த அதிர்ச்சியான முடிவு படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படுவதைக் காண்கிறோம். இதன் பின்னர் நடந்த நிகழ்வுகள், இந்திய மோடி அரசின் துரோகத்தினை அம்பலப்படுத்தும் புத்தகத்தினை மே17 இயக்கம், நிமிர் பதிப்பகத்தோடு இணைந்து வெளியிடுகிறது.

ரேசன் கடை மூடப்படுவது தொடர்பாக மக்களிடம் தொடர்ச்சியான பிரச்சாரத்தை துவக்கி இருக்கிறோம்.

வரும் ஞாயிறன்று மாலை சென்னையில் , தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில், நடேசன் பூங்கா அருகே- திருப்பதி தேவஸ்தானத்திற்கு எதிரில் இருக்கும் செ.தெ.நாயகம் பள்ளியில் மாலையில் இப்புத்தக வெளியீடு நடக்க இருக்கிறது. நம் சமூகத்தை முழுமையாக சிதைக்கும் இத்திட்டத்தை தெரிந்து கொள்ள வாருங்கள்.

ஏப்ரல் 9 ஞாயிறு மாலை 5 மணிக்கு
சென்னை தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள செ.தெ. நாயகம் பள்ளி (திருப்பதி தேவஸ்தானம் எதிரில்)

- நிமிர் பதிப்பகம் & மே 17 இயக்கம்