பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு, எண்ணற்ற சுயமரியாதைத் திருமணங்களையும், ஜாதி மறுப்புத் திருமணங்களையும் நடத்தியுள்ளது. மணமுறிவு பெற்றோர், துணையை இழந்தோரும் புது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் பெரிதும் பயன்பட்டிருக்கிறது.

கட்சி, அமைப்புப் பாகுபாடின்றி, அனைத்துக் கட்சியைச் சார்ந்தவர்களும், எக்கட்சியையும் சாராதவர்களும் இந்நிலையத்தின் உதவியோடு நல்ல வாழ்க்கை இணையரைத் தேர்ந்தெடுத்து சிறப்புற வாழ்ந்துவருகிறார்கள். எனினும், இத்தகைய முயற்சிகளை அறிய வாய்ப்பில்லாத, ஆனால் முற்போக்கு எண்ணமும், ஜாதி மறுக்கும் துணிவும் கொண்ட பலருக்கு தக்க இணையர் தேட வாய்ப்பின்றியிருப்பதை உணர முடிகிறது.

திராவிட இயக்கங்கள், பொதுவுடைமை இயக்கங்கள், தமிழ் அமைப்புகள், ஒடுக்கப்பட்டோர் நலன் காக்கும் இயக்கங்கள், சிறுபான்மை மக்களின் அமைப்புகள் என பல தரப்பினரும் ஜாதி மறுப்பு/மதமறுப்புத் திருமணங்கள் செய்யத் தயாராக இருக்கும் நிலையில், இத்தகைய முற்போக்குச் சிந்தனையுள்ள குடும்பத்தினருக்குப் பயன்படும் வகையில், தமிழகம் தழுவிய அளவில் மாபெரும் ஜாதிமறுப்பு இணை தேடல் பெருவிழாவினை “மன்றல் 2012” என்ற பெயரில் எவ்வித லாப நோக்கமுமின்றி நடத்த  பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் திட்டமிட்டுள்ளது.

ஜாதி ஒழிப்புக்காகப் போராடிய தந்தை பெரியார், அதற்கான போராட்டத்தை மிகப் பெரிய அளவில் முன்னெடுத்த நவம்பர் மாதத்தில் இந்நிகழ்வு நடப்பது சாலப் பொருத்தமாகும். ஆம், வருகின்ற 2012 நவம்பர் 25 - ஞாயிற்றுக்கிழமை, சென்னை - பெரியார் திடலில் “மன்றல் 2012” நடைபெறவுள்ளது. மீண்டும் ஜாதிவெறிக் குரல்கள் தலையெடுக்கத் தொடங்கியிருக்கும் வேளையில் இந்த முயற்சி மிக இன்றியமையாததும், ஜாதி ஒழிப்புச் சிந்தனையாளர்கள் அனைவரும் இணைந்து நடத்த வேண்டிய ஒன்று என்றும் நாங்கள் கருதுகிறோம்.

மன்றல் 2012 - முக்கியக் குறிப்புகள்:

நாள்: 25.11.2012 ஞாயிற்றுக் கிழமை

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை-7

நடக்க இருப்பவை:

1. மணமகன் / மணமகள் தேடல் (கீழ்க்காணும் பிரிவுகளில்)
* ஜாதி மறுப்பு
* மத மறுப்பு
* துணையை இழந்தோர்
* மணமுறிவு பெற்றோர்
* மாற்றுத் திறனாளிகள் 

2. ஜாதி, மதமறுப்புத் திருமண மேடை

வாழ்வில் இணைய விரும்பி, ஜாதி/ மதம் மறுத்து காதலிக்கும் தோழர்கள் - எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல், சிக்கனமான முறையில் திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு (முழுமையான உடல், மனவளச் சோதனைகளுக்குப் பிறகு)

சிறப்பு வாய்ப்புகள்:

* சட்டப்படியான திருமணம்
* அரசுப் பதிவுச் சான்றிதழுக்கான ஏற்பாடு

இவை தவிர, அடிப்படை உடல் மருத்துவப் பரிசோதனைகளுக்கான ஏற்பாடு
மண வாழ்க்கை குறித்த மருத்துவ, மனநல ஆலோசனைக் கருத்தரங்கு
ஜாதி மறுப்புத் திருமணம் செய்தோரின் அனுபவப் பகிர்வுகள்
கலை நிகழ்ச்சிகள்

மேலும் விவரங்களுக்கு:
செல்பேசி எண்:    9176757083, 9176757084
மின்னஞ்சல்:        இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.,
                                   இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இணையம்:           www.periyarmatrimonial.com

Pin It