நேரம்: 4:00 நிமிடங்கள்

திரைக்கதை

மதியழகன் சுப்பையா

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

காட்சி-1 (அ)

விடுமுறை நாளின் காலைப் பொழுது. இளைஞன் ஒருவன் படுக்கையில் கவிழ்ந்து ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறான். முதலில் மேலிலிருந்து (Top angle shot) காட்சி. பக்கக் காட்சிகள். கடிகாரம் மணி ஒலிக்கிறது. தனது இடது கையால் மெதுவாக கடிகார மணியை நிறுத்துகிறான். கைகளால் தடவியபடியே கைப்பேசியை எடுத்து சிரமத்துடன் மணி பார்க்கிறான். திடுக்கிட்டு படுக்கையை விட்டு எழுகிறான். குளியலறை நோக்கிப் பாய்ந்து போகிறான்.

CUT TO...

காட்சி- 1 (ஆ)

இடுப்பில் துண்டுடன் குளியலறையிலிருந்து வெளியே வருகிறான். வேகமாக வாசனைப் பவுடர் பூசிக் கொள்கிறான். தலைவாரிக் கொள்கிறான். கண்ணாடி முன்னால் நின்றபடி தனது உடலமைப்பைப் பார்க்கிறான். மார்பை விரித்துப் பார்க்கிறான். கைகளைத் தூக்கி புஜங்களைப் பார்க்கிறான். சிரித்துக் கொள்கிறான். ஏதோ நினைவு வந்தவனைப் போல் மீண்டும் வேகமாக உடையணிந்து கொள்கிறான். பொத்தான்கள் மாட்டுவது. பேண்ட்டில் ஜிப்பை ஏற்றுவது. என்று கட் ஷாட்களாக காட்டப் படுகிறது. ஷாக்ஸ் மாட்டிக் கொள்கிறான். ஷூ மாட்டுகிறான். மாறுபட்ட கோணங்களில் இவையணைத்தும் வேகமாக காட்டப் படுகின்றன. சுழல் காட்சியில் படமாக்கப் படுகிறது. கதவைத் திறந்து வீட்டை விட்டு வெளியேறுகிறான். பின்னபக்கமிருந்து காட்சிப் படுத்தப் படுகிறது. கதவை மூடுகையில் முன்பக்கக் காட்சி. படிகளில் இறங்குகிறான். முன் மற்றும் பின் பக்கமிருந்த காட்சிகள்.

CUT TO...

காட்சி- 2

பேரூந்து நிலையத்தில் காத்திருக்கிறான். கம்பியொன்றில் சாய்ந்து நிற்கிறான். குளிர்க்கண்ணாடி மாட்டியிருக்கிறான். கடிகாரத்தைப் பார்க்கிறான். கோணம் மாறுகிறது. மீண்டும் கடிகாரத்தைப் பார்க்கிறான். சாலையில் சற்று இறங்கி பேரூந்து வரும் திசையைப் பார்க்கிறான். உதடு சப்புகிறான். மீண்டும் ஒருமுறை பார்க்கிறான். கடிகாரத்தைப் பார்க்கிறான். பொறுமையிழந்தவனாய் ஆட்டோ ரிக்‌ஷா ஒன்றுக்கு கைக் காட்டுகிறான். ஆட்டோவின் எதிர்புறமிருந்தபடியான காட்சி.  ஆட்டோ கிளம்புகிறது.

CUT TO...

காட்சி-3

ஆட்டோ வந்து நிற்கிறது. ஆட்டோவிலிருந்து இறங்குகிறான். Close up. முகத்தில் பூரிப்பு. ஆழமான புன்னகை. நடக்கிறான். முன்பக்கமிருந்த காட்சி.

CUT TO...

காட்சி-4 (அ)

இளைஞனின் பின்னாலிருந்து காட்சிப் படுத்தல். அவனது இடுப்பில் tight close up மெதுவான tilt up செய்யப் படுகிறது. காமிரா தலைக்கு மேலே போகிறது. மெதுவாக கடல் பரப்பு விரிகிறது. இளைஞனின் point of view வில் கடல் பரப்பு 180 டிகிரியில் pan செய்யப் படுகிறது. பின் 180 டிகிரியில் இளைஞனின் முகமும் பேன் செய்யப் படுகிறது. பார்வையால் உட்கார ஒரு நல்ல இடம் தேடுகிறான். சரியான இடம் கிடைத்ததை ஒரு அகலப் புன்னகையால் வெளிப் படுத்தியவாறு இடத்தை நோக்கிப் புறப் படுகிறான்.

CUT TO...

காட்சி-4 (ஆ)

பாறையொன்றில் மிகப்பாங்காக உட்கார்ந்திருக்கிறான். கைக் கடிகாரத்தில் மணி பார்க்கிறான். மொபைல் போனில் மணி பார்க்கிறான். அவனது Point of viewவில் கடற்கரைக் காட்சி. அவனுக்கு அருகே சிறுவர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆங்காங்கே ஒருவர் இருவர் கூட்டமாக என நடந்து கொண்டிருக்கிறார்கள். கடல் அலைகள் ஒன்றையொன்று முந்த முயன்றுக் கொண்டிருக்கிறது. பலவிதமான நிலைகளில் உட்கார்ந்தபடி காத்திருக்கிறான்.கால்பந்து அவனிடம் வருகிறது. சட்டை செய்யாமல் இருக்கிறான். பையன் ஒருவன் வந்து எடுத்துப் போகிறான். காத்திருப்பு பாவங்கள், உடல் மொழிகள். சுமார் ஒரு டஜன் காத்திருப்பு நிலைகளை படமாக்கி still ஷாட்களாக காட்டலாம்.

 

காட்சி-4 (இ)

மொபைல் போனில் அழைக்கிறான். எதிர் புறம் அழைப்புக்கு பதில் கிடைக்காமல், போனை அனைத்து விடுகிறான். எஸ் எம் எஸ் டைப் செய்கிறான். மீண்டும் அழைக்கிறான். அழைப்பு துண்டிக்கப் படுகிறது. கோபத்தில் போனை ஜீன்ஸ்க்குள் துருத்துக் கொள்கிறான். பந்து அவனிடம் வருகிறது. காலால் அதை நிறுத்திப் பிடிக்கிறான். பின்னாலிருந்து அவன் பந்தை உதைக்கும் காட்சி. பந்து பறந்து போய் பையன்களிடையில் விழுகிறது. பந்தை கால்கள் துறத்துகின்றன. ஒரேயொரு ஜீன்ஸ் அணிந்த காலும் ஓடியாடி விளையாடுகிறது. இளைஞ்ன் பையன்களோடு விளையாடிக் கொண்டிருக்கிறான். அடுத்த சுற்றில் சட்டையைக் கழற்றி இடுப்பில் கட்டிக் கொண்டு விளையாடுகிறான். விழுந்து கடல் மண்ணில் புரளுகிறான்.

CUT TO...

காட்சி-4 (ஈ)

மூச்சிரைக்க முட்டியில் கைக்கட்டி மண்ணில் உட்கார்ந்திருக்கிறான். பையன்கள் கையசைத்தபடி கடந்து போகிறார்கள். இளைஞன் அப்படியே மண்ணில் சாய்ந்து படுத்துக் கொள்கிறான். மேலிருந்து  சுழல் காட்சி (Revolving Top angle shot). Low angle. இளைஞன் படுத்திருகிறான். அவனது வயிர் விரிந்து சுறுங்கிக் கொண்டிருக்கிறது. அதே நிலையிலிருக்கிறான். காமிராவுக்கு நேர் எதிர் திசையிலிருந்து பெண்ணொருத்தி நடந்து வருகிறாள். கால்கள் மட்டுமே காட்டப் படுகிறது. கால்கள் மெல்ல நெருங்கி அவனருகில் வந்து நிற்கிறது. அவன் முகத்தில் நிழல் பட்டு விலகுகிறது. தலையை மெதுவாய் திருப்பி மேல் நோக்கிப் பார்க்கிறான். பெண்ணின் முகம் காட்டப் படுவதில்லை.

பெண் குரல்

ஸாரிடா செல்லம். டேட்டாயிடுச்சி!!

அவன் மெதுவாய் புன்னகைக்கிறான். புன்னகை அகலமாகிறது.

FADE OUT...

Pin It