யானை வழித்தடத்தினூடே
வளைந்து செல்கிறது
நீள்அரவ கருஞ்சாலை!

தொடர்பறுந்த வழித்தடத்தை
பிளிறல்பிசின் கொண்டு
ஒட்ட முயல்கிறது
ஒற்றை யானை!

அடர்வனத்தை
அறுத்துச் செல்லும்
சாலையெங்கும்
புதைந்திருக்கும்
எத்தனையோ
காலடித் தடங்கள்!

ஒலியெழுப்பும் வாகனங்கள்
அறிவதில்லை
வனவிலங்குகளின்
அந்தரங்கத்தை!

"வனவிலங்குகள் ஜாக்கிரதை!"
அறிவிப்புப் பலகைகளைப்
பார்த்து தலையிலடித்துச் செல்கின்றன
வனத்தை இழந்து கொண்டிருக்கும்
விலங்குகள்!

- பா.சிவகுமார்

Pin It