சுகபோதானந்தா
நித்யானந்தாவை பற்றி
என்ன நினைப்பார்

நித்தி ஜக்கியை பற்றி யோசிப்பாரா

இவர்கள் பற்றி
பால் தினகரனும் மோகன் லாசரசும்
பேசிக் கொள்வார்களா

பேயோட்டும் பெயரில்லாத
முரட்டு சாமிகளின்
முழு நேர லட்சியம் தான் என்ன

ஆனந்தாக்களின் நடை பயிற்சியில்
குறுக்கே போகும் தினகரன்கள்
சங்கேத பாஷையில்
சிரித்துக் கொள்கிறார்கள்

இன்னும் பெரிதாக வளர்ந்து விட
போராடிக் கொண்டிருக்கும்
சாமிகளின் தாடி க்ரேயில் சிந்திக்கிறது

இரு பக்கமிருக்கும் குட்டி சுவர்களின் மேல்
மானுட சொம்புகள்
கண்ணும் கருத்துமாக வழக்கம் போல
மண்டியிட்டும் மத்தளமிட்டும்...!

- கவிஜி

Pin It