பயண களைப்பில்
ஒரு பாம்பென நெளிந்துகொண்ட
பொழுதில்
உடல்முழுதும் விஷமென
ஏறிக்கொண்ட தனிமை
போதைகொண்டு தள்ளாடியது
நொடிகளின் தொடர்ச்சி
கேட்காத தூரத்தில் தூரலென நின்றது
ஏதேதோ எண்ண குவியல்கள்
சிறு நீர்குமிலென தேங்கிப்போனது
விழித்திரையெங்கும் தொடுதிரையாய்
பூத்துக்கொண்டதில்
தூக்கம் யாருக்கோ விற்றுப்போனது
திடுக்கென கேட்கும் யாரோ குரலொன்றில்
வடிந்துகொள்கிறது ஒட்டுமொத்த
ஏகாந்தமும்

- சன்மது

Pin It