நிமித்தம்

அலங்காரங்களை
பசையிட்டு காட்சிப்பிழையாய்
கடக்கும் வாழ்வில்

சுவாசங்களை உறிஞ்சும்
மௌனங்களின்
மாயப்பொழுது

இமைகளைத்திற
ஏதேனும் சொல்

எவ்விதமாவது நிரப்பு
காலிக்குடுவையை

பறத்தல் நிமித்தம்

***

சாத்தியம்

இமைமூடி
கரம் கூப்பி
ஆசனமிட்டு
எதை உணர்த்துகிறாய்
எதை உணர்ந்து கொள்ள
துறவா
அறமா
பற்றறுத்தலா

இயந்திர கதியில்
எது சாத்தியம்
எங்களுக்கு

Pin It