சுடுகாட்டில் நின்றுகொண்டு
இடைவிடாமல்
குரைத்துக் கொண்டே
இருக்கின்றது ஒரு நாய்.

அது எதற்காக குரைகின்றது
என்று சக நாய்களுக்கே
தெரியவில்லை.

அது குரல்வளை வீங்கும்
அளவுக்கு குரைக்கின்றது…
பற்கள் உடைந்து தெரிக்கும்
வரை குரைக்கின்றது….
வால்கள் அறுந்துவிழும் வரை
குரைக்கின்றது.

நாய்கள் ஒரு போதும்
அறிவதில்லை
சுடுகாட்டுக்கு வரும்
பிணங்களைத் தொந்தரவு
செய்யக்கூடாது என்று.

ஆனாலும் பிணங்களை தின்று
ருசி கண்ட நாய்களால் தம்மை
ஒருபோதும்
கட்டுப்படுத்திக்கொள்ள
முடிவதில்லை.

நம்மால் அந்த நாயை
என்னதான் செய்துவிட முடியும்?
ஒரு டிஸ்லைக் செய்வதைத் 
தவிர...!

- செ.கார்கி

Pin It