இன்னுமொரு
அழைப்பாய்
இருக்கலாம்
இது உங்களுக்கு.

அகாலத்தில் நிகழ்ந்த
அந்த அழைப்பில்
அதுவரையான என்
அமைதிப் பிம்பத்தை
மனையாள் மற்றும்
மற்ற பிறர் முன்
சற்றே
மாற்றிப் போட்டதில்

என் நினைவில்
என்றுமினி
நீங்காதொரு
அழைப்பே.

இனியாவது
அகாலத்தில் நிகழாமல்
பார்த்துக் கொ(ல்லு)ள்ளுங்கள்
நண்பர்களே!
கடன் அட்டை
குறித்த உங்கள்
கனிவான
அழைப்புகளை.

-செல்வராஜ் ஜெகதீசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It