தாழிடப்பட்ட கதவினை
மூர்க்கமாய் உடைத்தெறிந்து
உள்நுழைகிறது
உன் முகச்சாடை போர்த்திய
உருவமொன்று
எனதிரவின் சாமப்பொழுதில்.............

நனவிலி பதாகைகள்
என்னிலிருந்து வெடித்துக்கிளம்பும்
எதுகை மோனைகளை சேர்த்தெடுக்க
கவிதையென உருமாறி
கைநீட்டி அழைக்கிறதுனை...........

கண்டும் காணாமல் தள்ளியே நிற்கிறாய்
சொற்களற்ற பேச்சினை
விழிவழியிசைத்தவாறு
வெட்டவெளிநோக்கி சிறகு முளைக்கப் பறக்கிறாய்........
பரவசப்பட்டு சிலிர்த்தெழும்
நினைவோடைகளில் நீந்தியெழுகிறேன்.......

தனிமையுணரும் நாளிகையில்
என்னுள் தாவியமர்ந்து தாலாட்டும்
உன் ஈரக்கனவுகளை
சாளரங்களாய் கையிலேந்தி
கடந்து செல்கிறேன் இத்தருணத்திலும் கூட

- வழக்கறிஞர் நீதிமலர்

Pin It