lady 250உனக்கான என்
வார்த்தைகள்
மொழி பெயர்த்தாலும்
மௌனமாகவே
இருந்து விடுகிறது......

என்னிலிருந்து
என்னையே பிரிக்கும்
யுக்தி தெரிந்தவன் நீ
மட்டுமாகவே
இருக்கிறாய்........

உனக்கு மட்டும்
புரிந்து விடுகிறது
என் தேவைகளின்
நீளமும் அவசியமும்
என்னவென
சில நேரங்களில்
புரியாமலும்.....

என்னை விட்டு நீ
விலகி நிற்பதும்
ஒருவித
நேசமாகவே இருக்கலாம்.....

என் மௌனம்
உடைக்க மலையை
தகர்க்கிறாய் - உன்
கண் அசைவில்
கரைவேன் இப்பதுமை
என தெரியாத
அப்பாவியாக......

பின்னொரு நாளில்
இன்னொரு
பிரபஞ்சத்திற்குள்
புரட்டிப் போடுவோம்
நம் நேசத்தையும்
முடிந்தால்.......

- ஆனந்தி ராமகிருஷ்ணன்