இந்திய கிறிஸ்தவர்களிடையே ஒரு விஷயம் ஒரு நூற்றாண்டு காலமாக பழக்கத்தில் இருக்கிறது.
அதாவது, வீட்டில் ஆணோ பெண்ணோ காதல் என்று வந்து சொன்னால் உடனே அவர்கள் எடுக்கும் அஸ்திரத்தின் பெயர் "கீழ்ப்படிதல்".
காதல் என்றாலே பெரும்பாலான வசதி படைத்த கிறிஸ்தவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. காதல் என்றால் ஏதோ இயற்கைக்கு ஒவ்வாத ஒரு விஷயம் போல் அவர்களில் முகம் நெளியும். இங்கே ஜாதி, வசதி, தகுதி இதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். அவர்களை பொறுத்தவரையில் காதல் என்றாலே அருவருப்பான ஒரு விஷயம். இதில் காமம் எல்லாம் கடவுளுக்கு எதிரான விஷயம் போல நடந்து கொள்ளுவார்கள். இதில் பல பேர் காமம், செக்ஸ் என்பதெல்லாம் வெறும் பிள்ளை பெறும் தொழில்நுட்பமாகவே கருதி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
ஒருவர் காதலிக்கிறார் என்று சொன்னவுடன் "கடவுளுக்குப் பயப்படுமா, நீ பண்ணுறது தப்பு, எங்க பேச்ச கேளு, கீழ்படியிற பிள்ளைகள தான் கடவுள் ரட்சிப்பாரு, நாங்க பாத்து வைக்குற பையன கட்டிக்கோ" என்று பிளாக் மெயில் செய்ய ஆரம்பிப்பார்கள்.
கடவுளுக்கு கீழ்படி, பெற்றவர்களுக்கு கீழ்படி, சர்ச் பாதருக்கு கீழ்படி..... இப்படி படிப்படியாக அவர்கள் தனித்தன்மையை நசுக்குவார்கள்.
நான் கேட்கிறேன், நான் ஏன் கடவுளுக்கு பயப்படவேண்டும்? நான் என்ன திருடனா உங்கள் கடவுள் என்ன போலீஸா? பயம் எப்படி பக்தியாகும்?
ஒரு ஆண் ஒரு பெண் மேல் வைத்திருக்கும் கட்டுக்கடங்காத அன்பு போல தானே பக்தி?
காதல், அன்பு இது தானே பக்தி?
கிறிஸ்தவர்களே, கடவுளுக்குப் பயப்படு என்று உங்கள் பிள்ளைகளுக்கு கற்பிக்காதீர்கள். மாறாக கடவுளை நேசி என்று வேண்டுமாயின் சொல்லிக் கொடுங்கள். ஒருவருக்கு பயந்து நான் ஒழுக்கமாயிருப்பது கேவலத்தினும் கேவலம், ஒருவர் பால் கொண்ட அன்பால் நான் அவருக்கு வலிகொடுக்காமல் இருக்க தவறு செய்யாதிருத்தல் மேன்மையிலும் மேன்மை.
அதுவும் இல்லாமல், எந்த கடவுள் உன்னை காதலிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டிருக்கிறார்? காதல், காமம் இரண்டையும் கரைபுரண்டோட வைக்கும் ஹார்மோன்களை உன் உடலில் வைத்திருக்கும் கடவுள் என்ன முட்டாளா?
உலகத்தில் உள்ள 90 சதவிகித கிறிஸ்தவர்கள் காதல் திருமணம் தான் செய்து கொள்கிறார்கள். இந்திய கிறிஸ்தவர்கள் மட்டும் தான் இன்னும் இந்த இயற்கைக்கு மாறான கூட்டி கொடுக்கும் வேலையான வரன் பார்த்து செய்யும் திருமணங்களை (arranged Marriage) நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் பக்தி பழங்களாக ஊரை ஏமாற்றி கொண்டிருக்கும் arranged Marriage செய்த கிறிஸ்தவ தற்குறிகள் காதலித்து திருமணம் செய்பவர்களை ஏதோ பாவம் செய்தவர்கள் போல் இழிவாகப் பார்க்கும் பேசும்.
உண்மை என்னவென்றால், தனக்கான ஒரு துணையை தேடி கொள்ள துப்பிலாத, biologically incapable ஜீவராசிகளான அவைகளைதான் நாம் எல்லோரும் கேவலமாகப் பார்க்க வேண்டும்.
எந்த மதத்திலும் இல்லாத ஒரு அழகு கிறிஸ்தவத்திற்கு உண்டு. அதன் புனித நூல் என்று சொல்லப்படும் பைபிளில் மட்டும்தான் "லவ்" என்கிற வார்த்தை 551 தடவை வருகிறது.
அன்பு, பாசம், நேசம் என்று நீங்கள் அந்த வார்த்தைக்கு ஆயிரம் அர்த்தம் சொன்னாலும். தோற்றம், வசதி, படிப்பு, மொழி, ஜாதி, இனம் போன்றவற்றைத் தாண்டி ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் காதலைத்தான் அது தீர்க்கமாகக் குறிப்பிடுகிறது. இதில் பெற்றோரின் கட்டளையைத் தாண்டி வரும் அன்பும் அடங்கும்.
தோழர் ஏசு தனக்கு எந்த உறவுமில்லாத மக்களுக்காக அரசாங்கத்திடம் கேள்வி கேட்டு அவர்களுக்காக உயிர்விட்டு உனக்கு என்ன சொல்லி கொடுத்து சென்றிருக்கிறார் என்பதை உணருங்கள் அற்ப விசுவாசிகளே.
உன் பெற்றோர் சொல்லி ஒருவர் மீது உனக்கு வரும் காதலுக்கு பெயர் வேறு. நீயாய் பார்த்து உணர்ந்து உனக்கு சம்பந்தமே இல்லாமல் இருக்கும் ஒருவரின் மீது பொழியும் காதல் கடவுளை விட பெரிது.