தமக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல்
பொழிந்து போகின்றன மேகங்கள்
தமக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல்
கனிகள் தந்து வாழ்கின்றன மரங்கள்
தமக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல்
பயிர்களை உயிர்களை வாழ வைக்கின்றன நதிகள்
தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாத
தங்கத் தாரகையின் ஜொலிப்பில்
ஒளி(ர்)கிறது தமிழ் மண்.

- சேயோன் யாழ்வேந்தன்

Pin It