barவழமையாக
சனியன்று மாலை
என்னால் தொடர்பு கொள்ளப்படும்
அனேக நபர்களிடமிருந்து
இப்படித்தான் பதில் வருகிறது
நான் பாரிலிருக்கிறேன்
எந்த பாரென்று
நான் கேட்பதுமில்லை
எந்த பாரென்று
அவர்கள் சொல்வதுமில்லை.

----

அந்த பிரதான சாலையின்
முச்சந்தியிலிருக்கும் பாருக்குள்ளே
இந்துவும் இஸ்லாமியனும்
உடலுராய அருகருகே அமர
அவர்களுக்கு சேவகம் செய்கிறான்
ஒரு கிறித்தவன்.
வத்திப்பெட்டி கேட்கும் ஒரு பிராமணனுக்கு
வாயிலிருந்த படியே
சிகரெட்டை பற்ற வைத்துத் தருகிறான்
ஒரு பள்ளன்
அந்த பாருக்குள்ளே ஒரு நல்லநாடு
பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.

----

அப்பொழுதே அந்த பாருக்குள் நுழையும்
ஒரு சாமானியனுக்கு
அமர்ந்து
ஆசுவாசம் கொள்வதை விடவும்
அவசியத் தேவையாக இருந்தது
ஒரு போதை.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

Pin It