கீற்றில் தேட...

dalit boys 238தெருவில்
செருப்புகளணிந்து நுழைந்ததற்காய்
தாத்தாவால் விளாசப்பட்டார்
அவன் தகப்பனார்

நடவு நாளொன்றில்
முழுநாள் வேலைக்கு
அரைநாள் கூலிதந்து
பாட்டியால் வஞ்சிக்கப்பட்டாள்
அவன் அம்மா

வீட்டுப்படியேறி
நின்றதற்காய்
பதறப்பதற
மாமாவால் விரட்டப்பட்டான் அவன்
அண்ணன்

கிணற்றடியில்
பானையை தீண்டியதற்காய்
அத்தையால் இழிசொற்களால்
ஏசப்பட்டாள் அவன் அக்கா

சோற்றுக் கூடையை
மறந்துவிட்டு வந்த
ஒரு பள்ளிநாளின் பகல்வேளையில்
தன் ஈயப்போசியின் பழஞ்சோற்றை
இவனுக்கு
சரிவிகிதமாய் பகிர்ந்தளித்து
நன்னயம் செய்தான் அவன்!

- ஸ்ரீதர்பாரதி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.