(புறநானூற்றுப் பாடலில் புலவர் காரிக்கண்ணனார் தன் வறுமை தீரப் பரிசில் பெறுவதை முதன்மையாகக் கூறுகிறார். இங்கு வருண முறைச் சுரண்டலை ஒழிப்பதே முதன்மை என்று கூறப்பட்டு உள்ளது.)

பாரத நாட்டில் சுரண்டலுக் கெதிராய்
வீரஞ் செறிந்த போரைத் தொடுக்கப்
பல்முனை களிலும் அணியம் ஆகும்
கல்லா மாந்தரே! கற்றவர் கூட்டமே!
ஆதியில் இருந்தே சாதியின் பெயரால்
நீதியை அழிக்கும் வருண முறையை
முதலில் ஒழிப்பதே சுரண்டலை ஒழிக்கும்
முதற்படி என்றே அறிந்து கொள்வீர்

(இந்திய நாட்டில் சுரண்டலுக்கு எதிராக வீரஞ் செறிந்த போரைத் தொடுப்பதற்குப் பல (அதாவது ஊழல் ஒழிப்பு, வர்க்கப் போராட்டம், விலைவாசிக் குறைப்பு) முனைகளில் அணியமாகும் கல்லாத, கற்ற மக்களே! ஆதியில் இருந்தே சாதியின் பெயரால் நடக்கும் அநீதியான வருண முறையை முதலில் ஒழிப்பதே சுரண்டலை எதிர்க்கும் முதற்படி என்று அறிந்து கொள்ளுங்கள்.)

Pin It