வருண முறைமை இறுகிய நாட்டில்
பெரும்பா லான மக்களின் திறமை
வீணாகாதுப் பயன்பெற வேண்டியும்
நாணாப் பார்ப்பனத் திறன்குறைந் தோரும்
தகுதி யில்லாப் பணிகளில் அமர்ந்து
மிகுதியால் மிக்கவை செய்வதைத் தடுக்கவும்
விகிதா சாரப் பங்கீட்டு முறையில்
பகிர்ந்து யார்க்கும் அளித்திட் டாலே
ஒடுக்கப் பட்ட மக்களும் அன்றி
மிடுக்காய் எதிர்க்கும் பார்ப்பனர் தாமும்
தம்பங்கு பெறுவர் வஞ்சனை யின்றி

((திறமை இல்லாத பார்ப்பனர்கள் கூட, கீழ்நிலை வேலைகளைச் செய்யும் படி வற்புறுத்தப்படாமல் உயர்நிலை வேலைகள் தரப்பட வேண்டும் என்ற) வருணாசிரம முறைமை இறுகிக் கிடக்கும் (இந்திய) நாட்டில் (ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களில் உள்ள திறமை உள்ளவர்களுக்கும் உயர் நிலை வேலைகள் கொடுக்கப்படாததால்) மக்களின் திறமைகள் வீணாவது தடுக்கப்பட்டுப் பயன் பெற வேண்டும் என்றும், திறமை குறைந்திருந்தாலும் பார்ப்பனர்கள் கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் தங்களுக்குத் தகுதி இல்லாத உயர்நிலை வேலைகளில் அமர்ந்து கொண்டு (தங்களால் அப்படிச் செய்ய முடிகிறது என்ற) மமதையில் நிர்வாகத்தைச் சீரழித்துக் கொண்டு இருக்கும் வேலைகளைத் தடுக்கவும், (உயர்சாதிக் கும்பலினர், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தபட்டோர், பழங்குடியினர், மத சிறுபான்மையினர் ஆகியோர் அவர்களது மக்கள் தொகையின்) விகிதாசாரத்தின்படி பகிர்ந்து அளித்தால், ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டும் அல்லாமல், இது போன்று விகிதாசாரப் பஙகீட்டு முறையை எதிர்க்கும் பார்ப்பனர்களும் வஞ்சனை இல்லாமல் தங்கள் பங்கைப் பெறுவார்கள்.)

- இராமியா

Pin It