நடுநிலை என்றுதம் பூணூல் அறுப்பதும்
மிடுக்குடன் பிறர்க்குப் பூணூல் அணிவதும்
ஆர்ப்பரிப் புடனே கொடைகள் அளிப்பதும்
பார்ப்பனர் தம்மைப் புனிதர் ஆக்காது
திறனுடை யோரும் திறன்குறைந் தோரும்
பிறழ்வின்றி அனைத்து வகுப்பிலும் இருப்பதால்
உயர்நிலை களிலே திறன்மிகு சூத்திரர்
அயர்வின்றி அடையவும் திறன்குறைப் பார்ப்பனர்
சாத்திரம் தடுத்த பணிகளை ஏற்று
ஆத்திரம் இன்றி இயல்பாய் இருப்பதே
பார்ப்பனர் தம்மின் கடமை யாகும்

(நடுநிலையானவர்கள் என்று காட்டுவதற்காகப் பார்ப்பனர்கள், தாங்கள் அணிந்துள்ள பூணூலை அறுத்து எறிவதாலும், பலர் அறியுமாறு (இந்து மதப் புனித நூல்கள் பூணூல் அணியக் கூடாது என்று தடுத்துள்ள) பிற வகுப்பு மக்களுக்குப் பூணூல் அணிவிப்பதாலும், இரத்த தானம் போன்ற நல்ல செயல்களைச் செய்வதினாலும், அவர்கள் (சாதிக் கொடுமைகளைச் செய்யாத) நல்லவர்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. அதிகத் திறமை உடையவர்களும், திறமைக் குறைவானவர்களும் விதிவிலக்கின்றி அனைத்து வகுப்பு மக்களிலும் இருப்பதால் உயர்நிலைப் பணிகளை அதிகத் திறமை கொண்ட சூத்திரர்கள் சிரமம் எதுவும் இன்றி அடைய வழி வகுப்பதும், இந்து மதப் புனித நூல்கள் பார்ப்பனர் செய்யக் கூடாது என்று தடுத்துள்ள கீழ்நிலைப் பணிகளைத் திறமைக் குறைவான பார்ப்பனர்கள் எவ்வித ஆத்திரமும் இன்றி ஏற்றுக் கொண்டு (தங்களுக்குத் திறமை குறைவாக இருப்பதால் தான் இவ்வித கீழ் நிலைப் பணிகளைச் செய்ய நேர்ந்தள்ளது என்று) இயல்பாய் இருப்பதும் தான் பார்ப்பனர்களின் கடமையாகும்)

- இராமியா

Pin It