கீற்றில் தேட...

rain in hill

பேயை விரட்டியவனின் வேப்பிலைகளை
விரட்டிக்கொண்டிருந்தது
காற்று
________________________

தொலைந்த முகங்கள்
பத்திரமாய்
நினைவுகளில்
_________________________

மலையிலிருந்து
மழை
சறுக்கி விளையாடுகிறது
_________________________

அடரிருளிலும்
பளிச்செனத் தெரிகிறது
காகத்தின் சப்தம்.
_________________________

உயர் ஜாதி நாயொன்று
மனிதனை
இழுத்துச் சென்றுகொண்டிருக்கிறது.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

More articles by எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.