கீற்றில் தேட...

poor manசமைத்த உணவே சமனமாக மறுக்க
உருண்ட வயிறு தடவி உருளும்
சதைப்பிண்ட கூட்டமொன்று

ஒட்டிய வயிற்றுக்கு நீரேனும் காட்ட
எச்சில் உணவையும் சேகரிக்கும்
எறும்பு கூட்டமொன்று

விதை நெல்லை சமைத்த பாவம்
சதிராடும் வயல்வெளியில்

நெல் தேடி அலுத்து
உமி சுமக்கும் பறவைக் கூட்டம்

பச்சையம் சமைக்க பச்சைகள்
இல்லா உலகில்

குச்சிகள் வீசும் விசக் காற்றில்
அழுக்கான நுரையீரலுடன்
ஏந்தப்படும் தட்டுகளில்
விழுகின்ற திட்டுகள்
சுரப்பிகளால் ஜீரணிக்கப்படுவதில்லை.

- பத்மாகிரஹம்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.