manஎன்னிடம் இருந்த ஏதோவொன்று
என்னிடம் இல்லை
இப்போது

என்னிடம் அது இருந்தபோது
என்னிடம் இருந்ததில்லை
அது என்னிடம் இருக்கும் பிரக்ஞை

என்னிடம் அது இல்லாத போது மட்டும்
ஓர் உணர்வு
என்னிடம் எதுவோ இல்லாததாய்

என்னிடமிருந்து எப்படி
எனக்கே தெரியாமல்
விலகிச் சென்றது
என்பது மட்டும்
எனக்கு இன்னமும் புதிராய்

இதுவரை
என்னிடம் இல்லாத ஏதேதோ
என்னிடம் வந்து சேர்ந்தது கூட
காரணமாயிருக்கலாம்
என்னிடம் இருந்த அது
என்னிடம்
இல்லாமல் போனதற்கு.

- க.ஆனந்த்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.