கீற்றில் தேட...

sunny dayமூன்று பிரயாணிகளும்
ஏழு பிணங்களும் சவாரி செய்கின்றனர்
ஷேர் ஆட்டோக்களில்
___________________________

கடுமையான
வெயிலின் மழையால்
வியர்வைத் தொப்பலாகி விட்டிருந்தேன்.
___________________________

இறந்த பகலின் நெற்றியில்
ஒரு ரூபாய் நாணயம்
வட்டநிலா.
___________________________

குழந்தைகளின் கதைகளிலாவது
அரக்கர்களைக் கொல்வதற்குப் பகரமாய்
திருந்தச் செய்யலாம்.
_____________________________

வெறும் சைக்கிள்காரனாகிப் போனான்
தபால்காரன்.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

More articles by எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.