எவ்வளவு அழகான உயிர்
கைகளின் உள்ளே படபடக்கிறது

இரயிலும் தண்டவாளமும் போல
உயிரும் உடலும்

சிறிது கீறல் விழுந்தவுடன்
பலூன் காற்றை போல்
வெளியேற தொடங்கும்

புண் மூடி வளரும் தோல்
தடவ வழவழவென தழும்பு

வரேன் வரேன் என சாவும்
வா வா என உயிரும்
துரத்தி விளையாடும்
தட்டாண் தோட்டம்

தட்டாண்களெல்லாம்
மரித்து போன நாளில்
ஒரு மிகப்பெரிய
பாம்பின் சட்டை
கிடைக்கிறது

- குமரகுரு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.