அலறி துடித்த எம் மக்களை
அணுவளவும் ஈரமின்றி
ஆயிரமாயிரமாய்
கொன்று குவித்தவர்க்கு
தோள் கொடுத்து -கொலைத்
தொழிலுதவி புரிந்தவரின்
கால் பிடித்து
கணக்கின்றி புகழ்பவரெல்லாம்
தமிழ்நாட்டின் தலையாய
கவிஞரென்றால் -தோழர்களே
என்னையும் கவிஞரென்று
ஏளனம் செய்யாதீர்.
Pin It