பூக்களின் பூரிப்புகளாலும்
சுவரெங்கும் புதுச்சித்திரங்களாலும்
வீடு நிறைகிறது மறுபடியும்.

கைக்கடிகாரம் தங்கவளையல்கள்
புத்தகங்கள் இன்னும் ஏதேனும் பரிசளித்து
பிரியங்களால் நிறைப்பது சிறப்புப்பெறும்.

அடைந்து கிடந்த அறைகள்தோறும்
மறைந்து தொங்கும்
புகைப்பட உருவத்திற்குள்ளும்
பாய்கிறது ஜீவவெளிச்சம்.

புன்னகை இழையோடத் துவங்கிட
தழும்புகள் தரித்த கசக்கும் கழிவுகள்
விடைபெறுகின்றன ஒருவழியாய்.