இந்தியாவில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பல சலுகைகள் குறிப்பாக கல்வியில் இடஒதுக்கீடு இருக்கும் போதும், ஏன் இந்தியாவிலே வாழ்வாதாரத்திற்காக  புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கலாமே. 

ஒரு மாநில முகவரியில் மட்டுமே ஆதார் அட்டை, ரேஷன் அட்டை மற்றும் வாக்காளர் அட்டை வைக்க முடியும் என்று அரசு விதிமுறைகள் இருப்பதால் மராட்டிய மாநிலத்தில் புலம்பெயர்ந்தும் பல தலைமுறையாக வாழ்ந்து வரும் மும்பை வாழ் தமிழர்கள் இங்கேயே சொந்த வீடு, கடை வைத்திருப்பதாலும், அரசு மற்றும் தனியார் துறை வேலையில் இருப்பதாலும், வணிகம் செய்வதாலும், தங்களின் குழந்தைகளின் கல்வி மும்பையிலே பயில்வதாலும்  ஆதார் அட்டை ,ரேஷன் அட்டை மற்றும் வாக்காளர் அட்டை மராட்டிய மாநிலத்தில் கீழே வைத்துக்கொள்கிறார்கள். இதனால் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை மற்றும் வாக்காளர் அட்டை இல்லாததால் தமிழ்நாட்டில் பூர்வீக சொத்துக்களை தங்கள் பெயரில் மாற்ற முடியாமல் அலையும் சூழ்நிலையும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு  பெற இடஒதுக்கீடு சான்றிதழ் பெறமுடியாமல் ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இடங்களை இழக்கிறார்கள். 

இதற்கு தீர்வாக ஆதார் அட்டை மற்றும் ரேஷன் அட்டை யில் பூர்வீக அல்லது நிரந்தர முகவரி, தற்காலிக முகவரி என இரு முகவரிகள் இருந்தால் மேற்கொண்ட உரிமைகள் மற்றும் பிரச்சனைகளுக்கு சில தீர்வுகள் கிடைக்கும் என கருதுகிறோம்.

 புலம்பெயர்ந்த மக்களின் குறைகளை தீர்க்கவும், மும்பைக்கு வேலை தேடி வருபவர்களுக்கும், படிக்க வருபவர்களுக்கும், வணிகத்திற்காக வருபவர்களுக்கும் குறைந்த கட்டணத்தில் தற்காலிகமாக தங்குவதற்கும், மும்பை வாழ் குறைகளை பிரச்சனைகளை தீர்க்கவும் தமிழ்நாடு அரசிடம் தொடர்புக்கொள்வதற்காக மும்பையில் (தமிழ் பவன்) 'தமிழ் இல்லம்' அமைக்க வேண்டும் .

இதை மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசு அதிகாரிகள் கவனத்தில் கொள்வதுடன்  ஆய்வுகள் மேற்கொண்டு நிரந்தர தீர்வுக் காணுவார்கள் என நம்புகிறோம்.

***          .

மும்பை தமிழர்களின் கவனத்திற்கு..

 மும்பை தமிழர்களே,

           ஒரு மாநில முகவரி யில் மட்டுமே  ஆதார் அட்டை, ரேஷன் அட்டை மற்றும் வாக்காளர் அட்டை வைக்க முடியும் என்று  அரசு விதிமுறைகள் இருப்பதாலும். தாங்கள் பல தலைமுறைகளாக மும்பையில் வசித்துவருவதாலும், மும்பையில் சொந்த வீடு, கடைகள் இருப்பதாலும் ,அரசு மற்றும் தனியார் வேலையில் இருப்பதாலும் வணிகம் செய்வதாலும் உங்களில் பலர் அரசு ஆவணங்களான ஆதார் அட்டை, ரேஷன் அட்டை மற்றும் வாக்காளர் அட்டையை  மராட்டிய மாநிலத்தில்  கீழ் வருவது போல வைத்து இருப்போம்.

         ஆகையால் நமது சொந்த ஊர் முகவரியில் நமக்கு ஆதார் கார்ட் ,ரேஷன் கார்ட் மற்றும் சாதி சான்றிதழ் இல்லை.

       இதனால் அரசு வேலைவாய்ப்பு, கல்வி போன்றவற்றில் வாய்ப்புகளை இழந்துள்ளோம்.

       மேலும் சொந்த ஊரில் இருக்கும் நமது  பூர்வீக சொத்தை கூட தங்கள் வாரிசுக்கு மாற்ற முடியாமல் அலைந்து இருப்போம். தமிழ் என்பது நம் அடையாளம்,நம் வரலாறு,நம் எதிர்காலம்.நமது வாழ்வில் இவ்வளவு முக்கியத்துவம் கொண்ட தமிழை, மும்பையில் அடுத்த தலைமுறைக்கு கொண்டு போய் சேர்க்கும் தமிழ் ஆசிரியர்கள், தமிழ் எழுத்தாளர்கள் புலம்பெயர்ந்திருப்பதால் தமிழ்நாடு அரசு மற்றும் அரசு நலத்துறைகள் வழங்கும் ஆங்கீகாரங்களை, நிதி உதவிகளைப் பெறுவதில் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள்.

            இது போன்ற பல சிக்கல்களை தாயகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில்  சந்தித்து வருகிறோம். ஏன் கொரோனா காலத்தில் ஏற்பட்ட ஊரடங்களில்  கூட நம்மை மும்பை தமிழராக கருத்தினார்களே தவிர புலம்பெயர்ந்த தமிழராகவோ அல்லது தமிழ்நாடு தமிழராக கருதவில்லை ஆகையால் சொந்த ஊருக்கு போக முடியாமல் பலத்த போராட்டத்திற்கு பின்பே  சென்றோம் இன்றும் நம்ம உரிமைக்காக போராடவேண்டியுள்ளது .

                 எனவே இது போன்ற சிக்கல்களை தவிர்க்க சட்டரீதியான போராட்டத்தை முன்னெடுக்க இருக்கிறோம். இதற்கு  முன்னரே நாம் அரசு பிரதிநிதிகளிடம்  கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். பலமான நமது கோரிக்கையால் *புலம்பெயர் தமிழர் நலவாரியம்* அமைக்கப்பட்டதை தவிர மற்ற எந்த முன்னேற்றமும் இல்லை.

    எனவே மும்பையில் அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகளான தமிழ் பவன், இடஒதுக்கீடு. இதில் இடஒதுக்கீடு சான்றிதழுக்காக போராடிய வரலாற்றை தொகுத்து பிரச்சனையின் தீவிரத்தை பத்திரிக்கை வாயிலாகவும் விளக்கியுள்ளோம்.     

            தற்போது மும்பை தமிழர்களில் யாராவது தமிழ்நாடு அரசு அலுவலங்களில் சாதி சான்றிதழ் மற்றும் அரசு ஆவணங்கள் பெற இயலாமல் சந்தித்த பிரச்சனைகள் இருந்தால் தரவுகளுடன் அணுகவும். உங்கள் பிரச்சனைகளை தொகுத்து சட்டரீதியான போராட்டம் நடத்த இருக்கிறோம். நன்றி, நாம் வெல்வோம்..

எமது இயக்க தோழர்களில் ஒருவர் மும்பையிலே பிறந்து வளர்ந்தவர், மும்பையிலே கல்வியையும் முடித்தவர் , அவருக்கு சாதி சான்றிதழ் இல்லை. தமிழ்நாட்டிலும், மராட்டியதிலும் அரசு ஆவணங்கள் இருந்ததால் தமிழ்நாட்டில் உள்ள சில  ஆவணங்கள் வைத்து சாதி சான்றிதழ்க்கு முயற்சித்தார் முதலில் நிராகரிக்கப்பட்டது மறுபடியும் விண்ணப்பித்தார் ஒரு மாதத்திற்க்குள்ளே கிடைத்துவிட்டது இந்த கள அனுபவ அடிப்படையில் சாதி சான்றிதழ் பெறுவது எப்படி என்பதற்கான வழிமுறைகளை பட்டியலியிட்டுள்ளோம்.

மக்களுக்கு பயனளிக்கும் என நம்புகிறோம். 

சாதி  சான்றிதழ் பெறுவதற்கான வழிகாட்டல்/ வழிமுறைகள் :-

1) முதலில் ஈ-சேவை மையத்திற்குச் செல்லவும், உங்கள் ஆவணங்களை ஆன்லைனில் பதிவு செய்யவும்.பதிவு செய்யப்பட்டதற்கான ரசீது வழங்குவார்கள்  (இ-சேவை மையத்தில் மட்டும் - E -Sevai Maiyam )

2)  தேவையான ஆவணம் விவரங்கள். 

         A). ஆதார் அட்டை / இருப்பிடம்  முகவரி. (தமிழ்நாடு முகவரியாக இருப்பது அவசியம் இல்லையென்றால் மாற்றிக்கொள்ளவும்  இருப்பிடச்சான்றிதழ் Residence Certificate (ஐந்துவருடம் செல்லும்) பெற்றுக்கொள்ளவும்) 

         B).சாதி சான்றிதழ் இரத்த உறவு. (அப்பா, அம்மா  சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் )  தாய், தந்தை அல்லது உடன்பிறந்தவர்களின் சாதிச் சான்றிதழ், அல்லது உங்களிடம் ஏற்கெனவே இருக்கும் உங்களுடைய சாதிச் சான்றிதழ். குடும்பத்தில் யாரிடமும் இல்லையென்றால், நீங்கள் இந்தப் பிரிவை சார்ந்தவர்தான் என்று உங்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் (VAO) இருந்து கையொப்பமிடப்பட்ட ஒரு கடிதத்தை இணைக்க வேண்டும்.

          C).வீட்டு வரி ரசீது.

(வீட்டு வரி ரசீது பெறுவது எப்படி?

          உங்கள் ஊர் ஊராட்சியில் அல்லது நகராட்சியில் அல்லது மாநகராட்சியில் வீட்டு வரி வசூலிக்கும்  கவுண்டர் (Counter)இருக்கும். அங்கு உங்கள் வீட்டு எண்ணை சொல்லி வரி செலுத்துங்கள். ரசீது பெறுங்கள்.)

           D).பள்ளி விடுப்புச் சான்றிதழ்/ பள்ளி மாற்றுச் சான்றிதழ் (School Leaving Certificate/School Transfer Certificate)

            E) . பாஸ்போர்ட் அளவு புகைப்படம். Passport Size Photo

          3)  இ-சேவை மையத்தில் பதிவு செய்யப்பட்டதற்கு வழங்கப்பட்ட   ரசீது  வைத்து VAO-அலுவலகத்தில்   விண்ணப்பம் பெறப்பட்டதா மற்றும் VAO-ஆல் அங்கீகரிக்கப்பட்டதா  கையொப்பமிடப்பட்டதா   என்பதை நாம் உடனே சரிபார்க்க வேண்டும்,  பின்னர் விண்ணப்பத்தை வருவாய் ஆய்வாளருக்கு (Revenue Inspector) VAO அனுப்புவார்.

4) சாதி சான்றிதழ் வருவதற்கு காலதாமதமானால் Revenue Inspector ஆல் (வருவாய் ஆய்வாளரால்)  விண்ணப்பம் பெறப்பட்டதா மற்றும் Revenue Inspector-ஆல் அங்கீகரிக்கப்பட்டதா  கையொப்பமிடப்பட்டதா   என்பதை நாம்  Revenue Inspector  உடன் சரிபார்க்க வேண்டும், பின்னர் Tahsildarக்கு வட்டாட்சியருக்கு  (Revenue Inspector)  அனுப்புவார்.

5) தாசில்தாரின்  செய்திக்காக காத்திருங்கள், விண்ணப்பம் டிஜிட்டல் கையொப்பத்துடன் அங்கீகரிக்கப்பட்டதா என்று அலுவலகத்தில் விசாரிக்கவும் , ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தால் & கையொப்பமிடப்பட்டிருந்தால், ஈ-சேவை மையத்திற்குச் சென்று சாதி சான்றிதழை பதிவிறக்கவும் செய்துக்கொள்ளவும், தாசில்தாரிடமிருந்து செய்தி வரவில்லை என்றால்,  அருகிலுள்ள தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று விசாரிக்கவும்.

தொடர்புக்கு:-

சிறீதர் தமிழன், 9702482441, 

மும்பை விழித்தெழு இயக்கம் 

Pin It