எந்த வழக்காக இருந்தாலும் சொந்தமாக நடத்த வசதி இல்லாதவர்களுக்காக அரசாங்கம்லீகல் எய்டு செல்என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் பத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இருப்பார்கள். வசதி இல்லாதவர்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி வெற்றித்தேடித் தருவார்கள். சென்னையில் வசிப்பவராக இருந்தால்செகரட்டரி, லீகல் எய்டு செல், உயர்நீதிமன்றம் சென்னை-1’ என்ற முகவரிக்கும், வெளியூரில் வசித்தால் செகரட்டரி, லீகல் எய்டு செல், மாவட்ட நீதிமன்றமென்ற முகவரிக்கும் கடிதம் எழுதுங்கள். செகரட்டரி உங்களை அழைத்து விசாரிப்பார். வழக்கு நியாமானது; வசதி இல்லாதவர் என்று தெரிந்தால் அவரே வக்கீல் ஏற்பாடு செய்வார். செலவுகளை லீகல் எய்டு செல்ஏற்றுக்கொள்ளும்.

Pin It