high court chennai 12016 ஆண்டுக்கான அனுமதிக்கபட்ட விடுமுறை நாட்களை சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளர் வெளியிட்டு இருந்தார். அந்த பட்டியலின் படி கோடை விடுமுறையுடன் சேர்த்து 70 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. ஒரு வருடத்தில் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் 104  நாட்கள் சேர்த்து 174 நாட்கள். ஒரு வருடத்தில் 362 நாட்களில் 174 கழித்து 188 நாட்கள் மட்டுமே நீதிமன்றம் செயல்படுகிறது.

          உச்ச நீதிமன்ற இணையதள விவரத்தின் படி 2009ல் தேங்கி இருந்த வழக்குகளின் எண்ணிக்கை 3.03 கோடி. அதுவே 2013 ல் 3.17 கோடியாக உயர்ந்தது. உயர் நீதிமன்றத்தில் 45,89,920 வழக்குகளும், கிழமை நீதிமன்றங்களில் 2,75,66,425 வழக்குகள் தேங்கிஇருக்கின்றன. இந்த நிலைமை இருக்கும் போது இந்தளவிற்கு விடுமுறை தேவையா என்பதை அரசு சிந்திக்க வேண்டும். அது மட்டுமல்ல டிசம்பர் 24 முதல் சனவரி 1 வரை புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை விடப்படுகிறது. அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சனவரி 1 மற்றும் டிசம்பர் 25 மட்டுமே விடுமுறை விடப்படுகிறது. நீதிமன்றங்களுக்கு மட்டும் என் இந்த விடுமுறை?

நீதித் துறையானது நீதிபதிகள் பற்றாக்குறையால் இயங்கி வருகிறது. ஒரு வழக்கை முடிக்க குறைந்தது 3 ஆண்டுகள் ஆகிறது. மக்களுக்கு சேவை செய்யும் அனைத்து துறைகளும் கோடை விடுமுறை இன்றி தான் செயல்படுகின்றன. ஆனால் நீதி மன்றங்களுக்கு மட்டும் ஏன் கோடை விடுமுறை விடப்படுகின்றது? கோடைவிடுமுறை விடப்படும் பள்ளிகளில் கூட தலைமை ஆசிரியர் மற்றும் நிர்வாகப் பிரிவு அலுவலர்களுக்கு விடுமுறை விடப்படுவது இல்லை. அவர்கள் அடுத்த ஆண்டுக்கான  ஆயுத்த பணிகளை செய்ய வேண்டும். இவ்வாறு மக்களுக்கு சேவை செய்யும் பணியைச் செய்யும் அனைத்து துறைகளும் இயங்கும் போது நீதித் துறை மட்டும் இயங்கமால் இருப்பது ஏன்?

நீதித் துறை மக்களுக்கு சேவை செய்யும் துறை இல்லையா? விடுமுறை நாட்களைக் குறைத்து கொண்டால் வழக்குகளை விரைவாக முடிக்கலாம் அல்லவா?

- கண்ணன் ஜீவா

Pin It