பிறப்புச் சான்றிதழில் உண்மையான பிறந்த தேதி இருக்கும். ஜாதகப்படி, நட்சத்திரப்படி, பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்காக என்று உண்மையான பிறந்த தேதியைச் சிலர் மாற்றி இருக்கலாம். இதுகுறித்து தமிழக அரசின் குடிமை படிகள் விதிமுறைகளில் மிகத் தெளிவாக வழிமுறை கூறப்பட்டுள்ளது. பிறந்த தேதியில் மாற்றம் தேவைப்பட்டால், அதை நிர்வாகத்தின் கவனத்துக்கு வேலைக்குச் சேர்ந்த ஐந்து வருடங்களுக்குள் கொண்டுவந்து, மாற்றத்தைக் கூறி மனுசெய்ய வேண்டும்.

புதிய தேதிக்கு உகந்த ஆவணங்களைக் கொடுக்கும் பட்சத்தில், கோரிக்கை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்தால் தேதி மாற்றம் பதிவு செய்யப்படும். உங்களது நியாயமான கோரிக்கை மறுக்கப்பட்டால் ஆவணங்களுடன் நிர்வாகத்தை எதிர்த்து வழக்குத் தொடரலாம்.

தமிழக, மத்திய அரசு அலுவலங்களில் பணி செய்பவராக இருந்தால், முறையே மாநில – மத்திய தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்து தீர்ப்பு பெறலாம். பள்ளிக்குச் சென்று படிக்காத கடைநிலை ஊழியராக இருந்தால், சோதனை செய்யப்பட்ட மருத்துவ அறிக்கையின் மூலம் (ரேடியாலஜி) வயது ஆதாரம் காட்டலாம்.

-     வழக்கறிஞர் அஜிதா

நன்றி: விகடன் பிரசுரம்

Pin It